புதிய பதினான்கு நூல்கள் – எம். ரிஷான் ஷெரீப்
வணக்கம்.
2023 ஜுலை 21 அன்று இந்தியா, கோயமுத்தூர், கொடீஷியாவில் ஆரம்பமாகியுள்ள புத்தகக் கண்காட்சியில் எனது புதிய பதினான்கு நூல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கூகி வா தியாங்கோ, சினுவா ஆச்சிபி, பென் ஒக்ரி உள்ளிட்ட சர்வதேச இலக்கிய விருதுகளை வென்றுள்ள உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் முக்கியமான சிறுகதைகள் அடங்கியுள்ள தொகுப்புகளோடு, பாலியல் அடிமையாகவிருந்து மீண்ட மரியா ரோஸா ஹென்சன் எழுதிய அவரது சுயசரிதையும், உலகின் தலைசிறந்த தத்துவவாதியும், அறிஞருமான ஆந்த்ரே கோர்ஸ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மனைவிக்கு எழுதிய நீண்ட கடிதமும், இலங்கையின் புகழ்பெற்ற சிங்களப் பெண் எழுத்தாளரான சுநேத்ரா ராஜகருணாநாயக்கவின் சிறந்த நாவலும் எனது மொழிபெயர்ப்பில் தமிழில் தற்போது வெளிவந்துள்ளன.
இந்த நூல்களை திராவிடன் ஸ்டாக், எதிர் வெளியீடு, காலச்சுவடு ஆகிய பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. புத்தகங்களின் அட்டைப்படங்களை இணைத்திருக்கிறேன். இந்த நூல்களை புத்தகக் கண்காட்சி அரங்குகளில் தற்போது பெற்றுக் கொள்ளலாம்.
என்றும் அன்புடன்,
எம். ரிஷான் ஷெரீப்