பொது

இந்தியப் பயண இலக்கியத்தின் தந்தை

-மேகலா இராமமூர்த்தி உலக வாழ்க்கை குறித்து மேனாட்டு நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரிடம் கேட்டால், உலகமே ஒரு நாடக மேடை; அதில் அனைவரும் நடிகர்கள் என்பார். பயணங்களிலேயே தம் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தவரும், சீர்திருத்தச் சிந்தனையாளரும், இந்தி(ய)ப் பயண இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான ’மகா பண்டிதர்’ இராகுல் சாங்கிருத்தியாயனைக் கேட்டால் ”உலக வாழ்க்கையே பயணங்களின் முடிவில்லா நெடுஞ்சாலை; அதில் அனைவருமே பயணிகள்” என்று சொல்லக்கூடும். உத்திரப் பிரதேசத்தின் ஆசம்கர் (Azamgarh) மாவட்டத்திலுள்ள பாந்தகா என்ற கிராமத்தில் கோவர்தன் பாண்டே, குலவந்தி தேவி இணையருக்கு மகனாக, ...

Read More »

சீர்காழி கோவிந்தராஜன்

பாஸ்கர் மந்தவெளி தெரு தாண்டி மரங்கள் அடர்ந்த தியான ஆச்ரமம் பக்கத்தில் உள்ள தெருவில் அவர் வீடு. பெயர் இசைமணி இல்லம். இரைச்சல் இல்லாத எழுபதுகளில் அந்த பக்கம் போனால் சங்கீதத்தின் சாயல் தெரியும். மரங்களின் குளிர் தென்றல், பக்கத்தில் உள்ள கடற்கரையின் அற்புத காற்று, நிசப்தம் பயமுறுத்தாத இருட்டு. இவர் சாதகம் செய்யும் குரல்….என்ன பெரிய மரியாதையான மனிதர் அவர் –.சீர்காழி என்றாலே அது கோவிந்தராஜன் தான். வெண்கல குரல். இவரை போல நாபியில் இருந்து பாட யாரும் இல்லை. ஒரு பாடல் ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 293

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? புகைப்படக் கலைஞர் ஆர். கே. லக்ஷ்மி  எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (17.01.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ...

Read More »

திருவெம்பாவை – 15 | ஓரொருகால் எம்பெருமான்

திருவெம்பாவை – 15 மாணிக்கவாசகர் பாடியவர்: ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ் ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள் பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும் ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். பொழிப்புரை: கச்சணிந்த அழகிய அணியுடன் கூடிய கொங்கை களை உடையீர்! ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான் என்று சொல்லி வந்து இப்பொழுது நம்மிறைவனது ...

Read More »

திருப்பாவை – 15 | எல்லே இளங்கிளியே

திருப்பாவை – 15 எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன் வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள் வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய் திருப்பாவை – 15 | எல்லே இளங்கிளியே | ஸ்வேதா குரலில் மரபுக் கவிதைக்குள் உயிர்ப்புள்ள ஓர் உரையாடலை இயல்பாக அமைக்க முடியும், ஒரு காட்சியை நம் கண்முன்னே கொண்டு ...

Read More »

பரிமேலழகர் உரைத்திறன் – 23

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006.  மின்னஞ்சல் முகவரி –  [email protected] ‘அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்!’ முன்னுரை ‘வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்’ என்பது உலக வழக்கு. ‘உரைவழக்கிற்கும்’ இது பொருந்தும். பொதுவாக நூல் ஒன்றிற்கு உரையெழுதுவார் பிற இலக்கிய இலக்கணங்களைத் தாம் கொள்கிற பொருளமைதிக்கும் கருத்துக்கும் வலிமை சேர்ப்பதற்காக எடுத்துக்காட்டுவது உண்டு. ஒரு சிலர் எந்த நூலுக்கு உரையெழுதுகிறார்களோ அந்த நூலிலிருந்தே எடுத்துக்காட்டுக்களையும் சான்றுகளையும் பெற்று எழுதுவர். ...

Read More »

திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள்

திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள் | லட்சுமிப்பிரியா குரலில்  சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் வையத்து வாழ்வீர்காள்! எனத் தொடங்கும் இரண்டாவது பாடலை நமக்காகப் பாடியிருப்பவர், செல்வி லட்சுமிப்பிரியா. கேட்டு மகிழுங்கள். நீங்களும் இணைந்து பாடுங்கள். திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள் | ஸ்வேதா குரலில் கோதை ஆண்டாள், தமிழை ஆண்டாள், அரங்கனை ஆண்டாள் எனப் போற்றும் வண்ணம் அன்னை பிராட்டி அருளிச் செய்த திருப்பாவையின் இரண்டாவது பாடல், வையத்து வாழ்வீர்காள்! செல்வி ஸ்வேதா பாடிய இந்தப் பாடலை வையத்து ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-41

தி. இரா. மீனா இங்கு இடம் பெறும் வசனக்காரர்களின் பெயர், வாழ்க்கை குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முத்திரை கொண்டு இவர்கள் அடையாளம் காணப் பெறுகின்றனர். ஆனந்த சித்தேஸ்வரா “மென்மை கடினம் வெப்பம் குளிர்ச்சி அறியும் வரை அர்ப்பணிப்பை மீறக்கூடாது அங்கத்திடம் ஒன்றினால் இலிங்கமறிய முடியாது அழிவற்ற சரணருக்குக் கூழாயினும் பரவாயில்லை அமுதமானாலும் பரவாயில்லை ஓடும் பரவாயில்லை செம்பும் பரவாயில்லை, படுக்கையும் பரவாயில்லை கிழிந்த பாயும் பரவாயில்லை அரம்பையும் சரி, சாதாரணமானவளும் சரி, அரசனும் பரவாயில்லை சேவகனும் பரவாயில்லை ஊரும் ...

Read More »

குழவி மருங்கினும் கிழவதாகும் – 23

மீனாட்சி பாலகணேஷ் (கழங்காடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்) பெண்பாற் பிள்ளைத்தமிழின் இன்னுமொரு இனிய பருவம் கழங்காடற் பருவமாகும். இதனைப் பெதும்பை எனும் (எட்டுமுதல் பதினோரு ஆண்டு வயதுவரை உள்ள) பெண்மக்கள் விரும்பி விளையாடுவதாகக் கூறுவர். கழங்காடல் அனைத்து வயது மகளிரும் விளையாடும் விளையாட்டுகளுள் ஒன்றாகும். ஆயினும் இது பெதும்பைப்பருவப்பெண்களின் விளையாட்டென்று உலா இலக்கியங்கள் கூறும். விளையாடும் முறைகளையும் விளக்கும். ஏழுகாய்களைக் கொண்டு விளையாடப்படுவது கழங்கு. இது அம்மானை ஆட்டத்தினின்றும், பந்தாட்டத்தினின்றும்  மிகவும் வேறுபட்டதாகும். பந்தாடிக் களைத்த சங்ககால மகளிர் ஆற்றங்கரை மணலில் கழங்காடினர் என்பதனை, ...

Read More »

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

பாஸ்கர் சேஷாத்ரி ஆந்திரா ஆஸ்பத்திரியில் பிறந்தது முதல் எனக்கு எல்லாமே இந்த மெட்ராஸ் தான். எங்கப்பன் காலத்து பாஷையில் சொல்ல வேண்டுமெனில் பட்டணம் தான். ரெண்டு பைசாவை வைத்துக்கொண்டு தேன் மிட்டாய் கடித்ததும் சேமியா ஐஸ் உறிஞ்சியதும் இந்த மெட்ராசில் தான். சொல்லிக்கொள்ள செட்டிபுண்ணியம் எனது சொந்த ஊராக இருந்தாலும் என்னைச் சீராட்டியது இந்த மெட்ராஸ் தான். அந்தக் குந்துமணி பங்களாவும் ஆபிரகாம் தெருவும் என்னை அய்யா எனச் செல்லமாய்க் கொஞ்சின. மாண்டிசோரி பள்ளியின் சறுக்குமரம் எனக்குக் கொடுத்த குதூகுலம், வேறேதும் தரவில்லை. பீ எஸ் பள்ளிகூட நண்பர்களுக்கு சீ எஸ் பீ. கல்லூரித் ...

Read More »

தேசிய கல்விக் கொள்கை 2020 – வளர்முகமாய் ஒரு கருத்துரை

இந்திய அரசாங்கத்தால் நடைமுறைக்கு வரப்போகும் தேசிய கல்விக் கொள்கை (National Educational Policy 2020) மீதான ஒரு கருத்தாடல்: https://us02web.zoom.us/j/89262732459?pwd=d3BzYIFmVjF3MGVxUWITaTRKRTU5Zz09 Meeting ID: 892 6273 2459 Passcode: 433886    Date: August 19, 2020 @ 5 pm, IST. உலகத் தரம்வாய்ந்த ஆய்வுகளை நடாத்தி, போட்டிகள் நிறைந்த உலகச் சந்தையில் பொருள்களை விற்கும் முதல் உலக நாடுகளில் ஒன்றாக மாறும் வாய்ப்புக்கான தேவைகள் பற்றியும், தொற்றுநச்சுக் காலத்தில் பண முதலீடு (6% of GDP) என்னும் நோக்கம் என்பது வெறுமனே தாளில் ...

Read More »

அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 9 (குயவன்)

ச. கண்மணி கணேசன் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.), ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி முன்னுரை  குயவன் ஒரே ஒரு அகப்பாடலின் பின்புலத்தில் வருணிக்கப்படுகிறான். சிறுபாத்திரம் என்னும் தகுதியையும் வேறு ஒரு அகப்பாடலில் மட்டுமே பெறுகிறான். பண்டைத்தமிழர் சமுதாயத்தில் நிலவிய பன்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளத் துணைசெய்வதே இப்பாத்திரத்தின் சிறப்பம்சம் ஆகும் புற இலக்கியத்தில் குயவன்  புறப்பாடல்களில் ஈமத்தாழி செய்யும் குயவன் ‘கலம்செய் கோ’ என்று அழைக்கப்படுகிறான் (புறம்.- 228& 256). “வேட்கோச் சிறாஅர் தேர்கால் வைத்த பசுமட் குரூஉத்திரள் போல” (புறம்.- 32) ...

Read More »

இராமாவதாரம்

ஆ. கிஷோர் குமார்  அயோத்தி  அணி நகரமாய் விளங்கிய ஒரு மணி நகரம்.. குறையே இல்லாத ஒரு தனி நகரம். செழிப்பிலும் களைப்பிலும் நிறை நகரம்.. அறுபதாயிரம் ஆண்டுகளாய் அலுக்காமல் ஆண்டு கொற்றக்குடையை விரித்து வீரத்தில் ஆரமாய் வீற்றிருக்கும் தசரதன் பெயர் கொண்ட மன்னன் அதன் காரணம்.. தயரதனின்  ஆளுகையில் அயோத்தியே மின்னியது. அரண்மனையை அந்த  ஒளிச்சிதறல் பின்னியது… அரசனின் அலங்கரிக்கப்பட்ட அரண்மனையில் ஆயிரமாயிரம் நெய் விளக்குகள்.. அவற்றில் மூன்று தசரதனின் முத்து விளக்குகள்.. கோசலை கைகேயி சுமித்திரை என்ற பெயர் பூண்டு ஒளிர்ந்த தசரதனின் ஒளி  விளக்குகள்.. ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 86 (ஏரின்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி ஏரின்   மல்கு  வளத்தி  னால்வரும்   எல்லை  யில்லதோர்   இன்பமும் நீரில்   மல்கிய   வேணி   யார்அடி  யார்தி   றத்துநி   றைந்ததோர் சீரின்   மல்கிய  அன்பின்  மேன்மை  திருந்த  மன்னிய  சிந்தையும் பாரின்  மல்க  விரும்பி  மற்றுஅவை  பெற்ற  நீடு  பயன் கொள்வார். உரை : ஏர்த்தொழிலால் நிறைந்து பெருகும்உழவு வளங்களினாலே வரும் உணவும், அவை கொண்டு ஆக்கப் பெறும் அளவில்லாத பிற செல்வமும், கங்கை தங்கிய சடையார்  அடியவர்கள் திறத்திலே நிறைந்த மிக்க அன்பினது மேன்மை திருந்தும்படி நிலைத்த மனமும், உலகிலே ...

Read More »

இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 19

அவ்வைமகள் 19.  நெப்போலியனுக்குப் பிறகு  சமயப் புரட்சி    பிரெஞ்சுப் புரட்சியின் பிரபலமும் தாக்கமும் உலகெங்கும் பரவியது நிதர்சனமான உண்மையே. பிரெஞ்சுப்புரட்சியின் தன்னேரில்லாத தலைவனான, நெப்போலியன் போனப்பார்ட்டின், வீரம், தைரியம், சாதுரியம், அச்சமின்மை , உள்ளிட்ட அபார குணாதிசயங்கள் எல்லாம் அன்று உலகின் ஒவ்வொவொரு மூலையிலும் ஆராதிக்கப்பட்டன – இன்னமும் ஆராதிக்கப் படுகின்றன. “வீரன் என்றால் இவனன்றோ வீரன்!” என்று நெப்போலியனின் பகைவர்கள் கூட வாய்விட்டுப் புகழ்ந்தனர் – இன்றும் புகழ்ந்தவண்ணமே இருக்கின்றனர். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு, ஒரு புது உத்வேகம் மக்களிடையே பிறந்தது – தனக்குப் ...

Read More »