தொடர்கள்

பழகத் தெரிய வேணும் – 67

நிர்மலா ராகவன் சிறுபிள்ளைத்தனம் எதுவரை? சிறு குழந்தைகளின் கண்களைப் பாருங்கள்.  கள்ளம் கபடமே காணப்படாது. கதை என் சக ஆசிரியை மேரி, “நேற்று என் மகள் தன் விளையாட்டுக் காரை என் தலையில் எறிந்துவிட்டாள். தலைவலி பிளக்கிறது!” என்று முனகினாள். உடனே, “அவளை அடித்தாயா?” என்றொரு கண்டிப்பான குரல் ஒலித்தது. “அவளுக்கு ஒரு வயதுதான்!” என்றாள் மேரி. `இந்த வயதில் அடித்துத் திருத்துவதா!’ என்பதுபோல் ஆயாசத்துடன் ஒலித்தது அவள் குரல். “அதனால் என்ன!” என்றாள் மிஸஸ் லோ (Loh), பிடிவாதமாக. தவறு செய்தது எந்த ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 128 (அந்நின்ற)

திருச்சி புலவர் இராமமூர்த்தி அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார்? முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்; இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள மின் நின்ற செஞ் சடையார் தாமே வெளி நின்றார். வரலாறு போர் புரியும் இடத்தில்  தமக்கு நேரே நின்ற அதிசூரனைத்   தன்  முன்னே தானுண்ணும்  புலால் உணவைக்  கண்ட  சிங்கம் போல ஏனாதி நாதர் நின்றார். அவரை இப்புராணத்தில்  சேக்கிழார் புலி என்று குறிப்பின் சிங்கம் என்றதன்  நயம் உணரவேண்டும்.  அவர் முன் ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 14

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] நன்னூலில் உவமங்கள் – 3 முன்னுரை நல்லாசிரியர, அல்லாசிரியர் முதலியோருக்கு இருக்க வேண்டிய பண்புகளை நேரடியாகக் கூறிக் கூடுதல் சிறப்பியல்புகளை உவம அளவையால் எடுத்துரைத்த பவணந்தியார் மாணாக்கரை அவ்வாறு தகுதி நோக்கிப் பிரித்தாரல்லர். காரணம் கற்பித்தலுக்குத் தகுதி தேவை. கேட்பதற்கு அது தேவையில்லை. எல்லாரும் ஆசிரியர் ஆகிவிட இயலாது. ஆயின் அனைவரும் மாணவர் ஆகலாம். கற்பித்தல் ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 65

நிர்மலா ராகவன் ஓயாமல் யோசிப்பவர்கள் சிலர் எதுவும் செய்யாது, ஒரே இடத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்கள். `என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டால், `யோசித்துக் கொண்டிருக்கிறேன்,’ என்ற பதில் வரும். எத்தனை நேரம்தான் யோசிப்பார்கள்? இப்படிச் செய்தால், இல்லாத பிரச்னைகளும் இருப்பதுபோல் தோன்றும். அதனால், கனவிலும், எதிர்காலத்திலும் சிந்தனையைச் செலவிடுகிறவர்கள் எப்போதும் குழப்பத்தில்தான் ஆழ்ந்திருப்பார்கள். கதை திருமணமான தன் மகளைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாள் கோமதி. திரும்பும்போது, மிகுந்த கவலையோடு காணப்பட்டாள். `இனி தன்னை எப்போது பார்ப்பேனோ!’ என்ற கவலை அம்மாவுக்கு என்று மகள் நினைத்தாள். ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 127 (வெண்ணீறு)

திருச்சி புலவர் இராமமூர்த்தி வரலாறு போர்க்களம்  புகுந்த  அதிசூரன் ஏனாதி  நாத்தனாரின்  வாள்வீச்சின்  வலயத்தில் சிக்கினான். எவ்வாறோ  மறைந்து  வெளியேறித் தப்பித்தான். அன்று  இரவெல்லாம் சிந்தித்து ‘’நாம்  நம் நாட்டு வீரர்களைக் கொல்லும் வகையில் திரண்டு போர் புரியாமல், தனிஇடத்தில் சந்தித்து வாட்போர் புரியலாம்‘’ என்று செய்தி அனுப்பினான்.ஏனாதிநாதரும்‘’ அவ்வாறே  ஓரிடத்தில்  வாளுடன் போர் புரிவது  நல்லது‘’ என்றார்.  தம்முடன் இருந்த சுற்றத்தார்  அறியாவகையில் அந்த  இடத்தில் வாழும் கேடயமும் ஏந்தி ஏனாதி நாதர்  காத்து நின்றார்.  திருநீறு பூசிய அடியாரை, நாயனார் எவ்விடத்திலும் ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 13

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] நன்னூலில் உவமங்கள் – 2 முன்னுரை உள்ளத்தில் மென்மையும் முகத்தில் மலர்ச்சியும் அறிவில் அடர்த்தியும் பண்பில் நடுவுநிலையும் கொண்டிருப்பதே நல்லாசிரியர் ஒருவருக்கு இருக்க வேண்டிய இயல்பு என்பதற்கு மலர், மலை, துலாக்கோல் முதலியவற்றை உவமமாகச் சொல்லிக் காட்டிய பவணந்தியார், அல்லாசிரியருக்கு அவற்றினும் முரண்பட்ட பொருட்களை உவமமாக்கியிருக்கிறார். ‘இனிய கனி’ என்பதற்கு ‘ஔவை உண்ட நெல்லிக்கனி’ என்றும் ‘இன்னாத ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 64

நிர்மலா ராகவன் துணிச்சலுடன் முயற்சி செய் அது எப்படி, சில பேரால் மட்டும் வாழ்க்கையில் மேலே மேலே போய்க்கொண்டே இருக்க முடிகிறது? ஊக்கம் அவர்களுக்கு உள்ளிருந்தே எழுகிறது. ஒரு காரியமானது செய்கிறவருக்குப் பிடித்ததாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் திருப்தி ஏற்படும். பிறர் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவருக்கு முக்கியமில்லை. அந்தக் காரியத்தால் பணம் கிடைக்காது போகலாம். அதனால் பாதிப்பு அடையாது, புதினங்கள் படிப்பது, பொழுதுபோக்கிற்காகத் தையல் வேலையில் ஈடுபடுவது, சித்திரம் வரைவது, எழுத்துத் துறை, சமைப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறவர்களுக்கு அவை பிடித்த காரியமாக ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 126 (தலைப்பட்டார்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி வரலாறு படைப்  பயிற்சியில்  சிறந்தவன்  அதிசூரன். அவன் ஏனாதி நாதரின்  தாயத்து உறவினன். தம் படைக்கலத்  திறத்தை  மற்றவர்க்கும்பயிற்றினான். அதனால் அவனுக்குத்  தற்பெருமை அதிகரித்தது. தம்மை வியந்து கொண்ட அதிசூரன் அரசர்  ஏனாதி நாதர் மேல் பகைமை கொண்டான். அதனால் அரசனை எதிர்த்துப்  போர் புரிய நினைத்தான். தாயத்து  உரிமையை வலியவரே  பெறவேண்டும் என்று சிலருடன் கூடி ஆலோசித்தான். ஆகவே சிறுநரி  சிங்கத்தை எதிர்ப்பது போல், ஏனாதி நாதர் மேல் போர் தொடுக்க எண்ணிப் போருக்கு அழைத்தான். ஏனாதி நாதரும் ...

Read More »

புதிய பிள்ளைப்பருவங்கள் – 5

மீனாட்சி பாலகணேஷ் ஆடல் பாடல் பயிலல் (புதிய பிள்ளைப்பருவங்கள்- பெண்பால் பிள்ளைத்தமிழ்) ஆடலும், பாடலும் பெண்ணினத்துடன் பிறந்தது. அழகுக்கலைகளில் பெண்குழந்தைகளுக்குள்ள ஆர்வத்தைக் கண்டு வருகிறோம். தன்னை மட்டும் அழகு படுத்திக் கொள்வதோடன்றி, நுண்கலைகள் எனப்படும் நடனம், இசை ஆகியனவற்றையும் வாய்ப்புக் கிடைத்தபோது ஆர்வமுடன் பயில்வர் பெண்குழந்தைகள். பெற்றோர்களும், அவருள்ளும் தாய்மார்கள், தத்தம் பெண்குழந்தைகள் இசை, நடனம் இவை கற்க வேண்டுமென்பதில் பெரும் ஆர்வம் காட்டுவர். பெண்குழந்தைகளின் இசை, நடனம் இவை தொடர்பான சில சுவையான செய்திகளைக் காண்போமா? பண்டைக்காலத்தில், அரசகுடும்பத்துப் பெண்களும் ஆண்களும் அறுபத்து ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 12

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் –  613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] திருக்குறளும் நன்னூலும் முன்னுரை ‘இலக்கியத்திற்குத்தான் இலக்கணமே தவிர இலக்கணத்திற்காக இலக்கியமன்று’ என்பது மரபு. இலக்கியம் என்பது ஈண்டு வாய்மொழி இலக்கியங்களையும் உள்ளடக்கியதே. அதனால்தான் இலக்கண விதிகளுக்கு மாறுபட்டு மக்கள் வழக்கு அமைகிறபோது இலக்கண ஆசிரியர்கள் அவற்றுக்குப் புறனடை கண்டு அமைத்துத் தழுவிக்கொண்டனர். இந்தக் கட்டுரை ‘இலக்கியத்திற்கு இலக்கணம்’ என்பதை இலக்கியத்தில் பயின்று வந்துள்ள உவமங்கள் இலக்கணத்துள்ளும் பயின்று ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 63

நிர்மலா ராகவன் முதிர்ச்சியும் குழந்தைத்தனமும் “இது என்னோட இடம்!” பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்குப் பிறருடன் ஒத்துப்போகத் தெரியாத வயது. எல்லாவற்றிற்கும் போட்டியிட்டு, சண்டை பிடிப்பார்கள். நான்கு வயதுக்குள் பிறருடன் இணைந்து பழகும் திறன் வருவதில்லை. ஆனால், வயது ஏறியபின்னும், இப்படியே நடப்பவர்களை என்னவென்று கூறுவது? கதை எங்கள் பள்ளியில் நடந்த ஒரு விழாவின்போது, காலியாக இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்துகொண்டேன். அங்கு வந்த என் சக ஆசிரியையான சாரதா, “இது என்னோட இடம்!” என்று சற்று எரிச்சலுடன் கூறியபோது, முதலில் ஆச்சரியமாக இருந்தது. ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 125 (நள்ளார்களும்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி நள்ளார் களும்போற்றும்  நன்மைத் துறையின்கண் எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகுநாள் தள்ளாத தங்கள்  தொழிலுரிமைத் தாயத்தின் உள்ளான்  அதிசூரன்  என்பான்  உளன் ஆனான்.    5 பொருள் பகைவர்களும் பாராட்டும் படியான நன்மைத் துறையிலே எவ்வகையானும் இகழப்படாத செய்கையில் இயல்பிலே இவர் ஒழுகுகின்ற காலத்தில் விடுபடாதபடி பிணைந்துள்ள தமது தொழில் உரிமைத் தாயத்தில் உள்ளானாய் அதிசூரன் எனப்படுவான்  ஒருவன்  இருந்தான். விளக்கம் ‘நள்ளார்களும் போற்றும் நன்மைத்துறை’   இத்தொடர் நன்மைத் துறை யாதலின் பகைவர்களும் போற்றினார்கள். பகைவராலும் பாராட்டப்படத் தக்கவாறு இவரது நன்மைநிலை ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 11

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] நன்னூலில் உவமங்கள் – 1 முன்னுரை தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பயின்று வரும் உவமங்கள் சிலவற்றின் பயன்பாட்டுச் சிறப்பை அறிந்த நிலையில் அதன் வழிநூலான நன்னூலில் பயின்று வரும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. எழுத்து, சொல் என்னும் இரு கூறுகளை மட்டுமே ஆராய்ந்திருக்கும் இந்த நூலிலும் இலக்கணக் கருத்துக்களை விளக்குதற்கு அவ்வளவாக உவமங்கள் பயன்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 62

நிர்மலா ராகவன் தற்கொலை வேண்டாமே! தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, அதிலும் வெற்றி பெறாதவர்கள் கூறுவது: “நாங்கள் முயன்றது கோழைத்தனத்தால் அல்ல!” பின் ஏன் அப்படி ஒரு காரியத்தில் இறங்குகிறார்கள்? தற்காலிகமான ஒரு பிரச்னையைத் தாள முடியாது, நிரந்தரமான தீர்வை நாடுகிறார்கள். கதை கிட்டு என்ற இளைஞன் ஒரு நோயால் அவதிப்பட்டு, அதன் உக்கிரம் தாங்க முடியாது, தன் உயிரைத் தானே போக்கிக்கொண்டான். தற்கொலை முயற்சிக்கு இறங்குமுன், “இப்படிக் கஷ்டப்படறதுக்கு ஒரு வழியா செத்துடலாம்னு இருக்கு!” என்று மரணத்தைப் பற்றியே பேசினான். அவனுடைய செய்கையின் விளைவு, ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 124 (வேழ)

திருச்சி புலவர் இராமமூர்த்தி திருத்தொண்டர்  புராணம் 10. ஏனாதி நாதர்புராணம் வரலாறு அடுத்து ‘ஏனாதி நாதர்’   என்று போற்றப்பெற்ற சிவனடியார்  வரலாற்றைச்  சேக்கிழார்  எழுதிய  பாடல்கள் வழியே காண்போம். குளிர்ச்சி மிக்க  வெண்கொற்றக்  குடையால் உலகிற்கே  தண்ணளி வழங்கிய  வளவன் ஆளும் சோழ நாட்டில் இயற்கை அரண் கொண்ட வயல்கள் சூழ்ந்த   மூதூர் எயினனூர் ஆகும். அவ்வூரில் வாழ்ந்த ஏனாதி நாதர் என்னும் அடியாரின் வரலாறு பெரிய புராணத்தின் பத்தாம் பகுதியாகும்.  முதலில் அடியாரை ஊரைச் சேக்கிழார்  அறிமுகம் செய்கிறார். பாடல் வேழக் கரும்பினொடு ...

Read More »