Author Archives: மேகலா இராமமூர்த்தி

படக்கவிதைப் போட்டி 296இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி புகைப்படக்கலைஞர் திரு. மாரியப்பன் கோவிந்தன் எடுத்திருக்கும் இந்தப் படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து  தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டி 296க்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவரும் என் நன்றிக்கு உரியர்! கூடைகளை ஏற்றிக்கொண்டு வேகாத வெயிலில் உடல்நோக வண்டிமிதித்துச் செல்லும் இந்தத் தோழரின் உழைப்பை வந்தனை செய்வோம்; உழைக்காது வீணில் சோம்பியிருப்போரை நிந்தனை செய்வோம்! உழைப்பின் மகத்துவம் சொல்லும் இந்தப் படத்திற்குச் சகத்திலுள்ள கவிஞரெல்லாம் கவியெழுத வாருங்கள்! நற்சிந்தனைகளைத் தாருங்கள்! என்று அன்புபாராட்டி அழைக்கின்றேன். ***** ”சிறுதிவலைகள் பலசேர்ந்து பெருவெள்ளம் ஆவதுபோல் எடைகுறைந்த கூடைகளும் ...

Read More »

செந்தமிழின் சிறப்பினைச் சகத்துக்கு உணர்த்திய அறிஞர்

-மேகலா இராமமூர்த்தி நம் அன்னைத் தமிழுக்கு தமிழ்நாட்டு அறிஞர்களேயன்றி அயல்நாட்டைச் சேர்ந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத அறிஞர் பலருங்கூட அருந்தொண்டாற்றியிருக்கின்றனர். இராபர்ட் கால்டுவெல், வீரமாமுனிவர், பிரான்சிஸ் வைட் எல்லிஸ், ஜி.யூ.போப் என்று நீளும் இவ்வரிசையில் செக் நாட்டைச் சேர்ந்த கமில் சுவெலபில்லும் (Kamil Václav Zvelebil) குறிப்பிடத்தகுந்த ஒருவராவார். அண்மைக் காலம்வரை நம்மிடையே வாழ்ந்துமறைந்த அந்த மொழியியல் அறிஞர், தமிழ்மொழிக்கு ஆற்றியிருக்கும் அரும்பணிகள் பல. அவை குறித்துச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம். செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia) நாட்டில் பிராக் (Prague) மாநகரில் 1927ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 26

-மேகலா இராமமூர்த்தி பம்பை எனும் பொய்கையின் அழகு காண்போரைக் கவரவல்லது. அந்தப் பொய்கையில் முகங்காட்டிய மணமலி தாமரையும் வாசமிகு குவளை மலர்களும் இராமனுக்குச் சீதையின் திருமுகமாகவும் கண்களாகவும் காட்சியளித்து, அவளின் பிரிவுத்துயரால் புண்பட்ட அவன் மனத்திற்கு மருந்து தடவியதுபோல் சிறிது ஆறுதலளித்தன. அந்தப் பொய்கையை ஆழ்ந்துநோக்கிய இராமன், ”என் சீதையின் கண்களையும் முகத்தையும் காட்டிய பொய்கையே! அவளின் முழுவடிவத்தையும் காட்டமாட்டாயா? தம்மால் இயன்றதைச் செய்யாமல் உலோபம் செய்பவர்கள் உயர்ந்தவர்கள் ஆகமாட்டார்கள்!” என்றான். வண்ண நறுந் தாமரை மலரும்      வாசக் குவளை நாள்மலரும் புண்ணின் ...

Read More »

படக்கவிதைப் போட்டி 295இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி குட்டிப் பூனையைத் தாய்ப்பூனை கவ்விச் செல்லும் இக்காட்சியை அழகாய்ப் படம்பிடித்து வந்திருப்பவர் திரு. கிஷோர் குமார். இப்படத்தை அவரின் ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றி! பூனை தன் குட்டியை வாயால் கவ்விச் செல்வதை ஆன்மிகத்தோடு தொடர்புபடுத்தி ’மார்ச்சால நியாயம்’ என்று கூறுவர். இதன் விளக்கமாவது, பூனை தன் குட்டிகளைத் தானே தூக்கிச்சென்று பல இடங்களிலும் வைத்துப் பாதுகாப்பதைப் போல ஆண்டவனே வந்து நம்மைக் காப்பாற்றிப் பரமபதத்தை அளிப்பான் என்பது தென்கலை ...

Read More »

படக்கவிதைப் போட்டி 294இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி புகைப்படக் கலைஞர் திரு. சரவணன் தண்டபாணி  எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்து படக்கவிதைப் போட்டி 294க்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி! மலரும் மலர்முகச் சிறுவனும் அருகருகே ஒருவரையொருவர் நோக்கிக் கொள்ளும் எழிற்காட்சி நம் உள்ளம் கவர்கின்றது. இதற்குப் பொருத்தமாய்க் கவிதை தீட்ட, காட்சிக்குக் கவினைக் கூட்ட அழைப்போம் நம் கவிஞர்களை! ***** ”விரிந்து மலர்ந்த மலரைப்போல் சிரித்து மலர்ந்த முகத்தோடும் பொய்யில்லாச் சொல்லோடும் பிள்ளையாய் இருந்தால் தொல்லையில்லை” என்று பிள்ளைப் பருவத்தைப் போற்றுகின்றார் ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 25

-மேகலா இராமமூர்த்தி ஏன் இன்னும் இலக்குவன் மீளவில்லை? ஒருவேளை சீதையை கவர்ந்துசென்ற அரக்கர்களைக் கண்டு அவர்களோடு வெஞ்சமர் புரியத் தொடங்கிவிட்டானோ? இராவணன் என் இளவலையும் கவர்ந்துசென்று கொன்றுவிட்டானோ? என்றெல்லாம் எண்ணிக் கவன்ற இராமன், தன்னைத்தானே வாளால் குத்திக்கொண்டு மாள எத்தனித்த வேளையில், அயோமுகியால் தூக்கிச்செல்லப்பட்ட இலக்குவன் அவளின் வசிய வித்தையிலிருந்து மீண்டு, சூர்ப்பனகையின் நாசியை அறுத்து அவளைத் தண்டித்ததுபோலவே, அயோமுகியின் நாசியையும் அறுத்தான். அவள் வலிதாளாது அலறிய பேரொலி இராமன் செவிகளில் விழுந்தது. இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு எழுகின்ற இந்தப் பேரொலி ஏதோ ஓர் ...

Read More »

படக்கவிதைப் போட்டி 293இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி தோளில் வீற்றிருக்கும் கிளிகளோடு அமர்ந்திருக்கும் இளைஞரைப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. ஆர். கே. லக்ஷ்மி. இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகளை நவில்கின்றேன். தோளிலே தத்தைகளோடும் முகத்திலே தீவிரச் சிந்தனைகளோடும் அமர்ந்திருக்கின்றார் இந்த இளைஞர். கவிஞர்களின் சிந்தனைக்கும் வேலை தந்திருக்கின்றது இந்த ஒளிப்படம் என்றே கருதுகின்றேன். படத்திற்குப் பொருத்தமாய்க் கருத்துக்களை அள்ளித்தர வாரீர் கவிஞர்களே! ***** ”முதுகில் கிளிகளைச் சவாரி செய்ய அனுமதி! காதிற்குக் கிடைக்கும் தேனிசை; மனத்திற்குள் ...

Read More »

படக்கவிதைப் போட்டி 292இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி வல்லமை வாசகர்கள், படைப்பாளர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! பொங்கட்டும் தைப்பொங்கல்! தங்கட்டும் மகிழ்வெங்கும்! ***** கிளியேந்திய பெண்கொடியாய்க் காட்சிதரும் இந்தக் கயற்கண்ணாளின் கோலம், காண்போரின் கண்களுக்குக் காட்டிடுதே வர்ணஜாலம். இவ்வழகிய ஒளிப்படத்தின் சொந்தக்காரர் திரு. மாரியப்பன் கோவிந்தன். இப்படத்தை அவரின் ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தெரிந்தெடுத்து நமக்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்பதிவாளர், தேர்வாளர் இருவர்க்கும் என் நன்றிகள் உரித்தாகுக! மீனாட்சியின் கோலம் புனைந்த இந்தப் பெண்ணைப் பார்க்கையில் மதுரை அரசாண்ட மீனாட்சியும் அவளைப் பாவில் ஆண்ட பாவலர் குமரகுருபரரும் ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 24

-மேகலா இராமமூர்த்தி பன்னசாலையில் சீதையைக் காணாது இராமனும் இலக்குவனும் கலங்கி நின்ற வேளையில் தரையில் தெரிந்த தேர்ச்சக்கரச் சுவடுகளைச் சுட்டிக்காட்டிய இலக்குவன், இவற்றை நாம் பின்தொடர்ந்து செல்வோம் என்று கூறவே இராமனும் அக்கருத்தை ஏற்று இலக்குவனோடு அச்சுவடுகளைத் தொடர்ந்து சென்றான். ஆனால் சற்றுத் தூரத்திலேயே அச்சுவடுகள் காணாமல் போய்விட்டதைக் கண்டு திகைத்தனர் இருவரும். ”இனி நாம் என்ன செய்வது இளவலே?” என்று இராமன் வருந்த, ”அண்ணா! தேர்ச்சுவடு மறைந்தால் என்ன…தேர் தெற்கு நோக்கித்தான் சென்றிருக்கின்றது என்பதை நாம் அறிந்துகொண்டுவிட்டோம் அல்லவா? ஆதலால், தென் திசையிலேயே ...

Read More »

பன்முக ஆளுமை கொண்ட பேரறிஞர்! 

-மேகலா இராமமூர்த்தி தமிழிலக்கிய வரலாறு படைத்த பேராசிரியர் மு. வரதராசனார் எனும் மு.வ.வை நம்மில் பலர் நன்கறிவோம். அதேசமயம் தமிழ் இலக்கிய வரலாற்றை மிக விரிவாக 9ஆம் நூற்றாண்டு தொடங்கி 17ஆம் நூற்றாண்டுவரை நூற்றாண்டு வாரியாக விரிவாகவும் விளக்கமாகவும் எழுதிய இலக்கிய வரலாற்றறிஞர் மு. அ. எனப்படும் மு. அருணாசலனாரை நம்மில் பலருக்குத் தெரியாது. அருணாசலனார் இலக்கிய வரலாற்றறிஞர் மட்டுந்தானா? இல்லை! கட்டுரையாளர், சொற்பொழிவாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், தமிழிசை ஆய்வாளர், சைவசமய அறிஞர், காந்தியச் செயற்பாட்டாளர் எனும் பன்முக ஆளுமை கொண்ட பேரறிஞராவார். ...

Read More »

படக்கவிதைப் போட்டி 291இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி புன்னகை பூக்கும் மழலை மலர்களைத் தம் படக்கருவிக்குள் அடைத்து வந்திருப்பவர் திருமிகு. ஆர். கே. லட்சுமி. இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து அளித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. பெண்மணிகள் இருவர்க்கும் என் நன்றிகள்! ”கள்ளமிலாப் பிள்ளைகள் சிரிப்பில் நம் உள்ளக் கவலைகள் ஓடி மறையும் கேடில் கல்வியை இவர்கள் பெற்றால் நாடும் வீடும் நலமுற் றோங்கும்!”  கவிஞர்களே, இனி உங்கள் சிந்தனை முத்துக்களைக் கவிதைகளாக்கித் தர வாருங்கள்! ***** ”மின்னல்வெட்டியதுபோல் புன்னகை பூக்கும் இம்மழலைக் கூட்டங்கள் தோல்வியே காணாத தோழமையோடு இருக்கட்டும்” ...

Read More »

படக்கவிதைப் போட்டி 290இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி வல்லமை வாசகர்கள், படைப்பாளர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! நமைப் பீடித்திருக்கும்… இன்னல்கள் மறைக! இன்பங்கள் நிறைக! ***** கம்பிகளுக்குப் பின்னே நிற்கும் இந்தத் தம்பியைப் படமெடுத்து வந்திருப்பவர் திரு. ஐயப்பன் கிருஷ்ணன். இந்த ஒளிப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து நமக்கு வழங்கியிருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்பதிவாளருக்கும் தேர்வாளருக்கும் நம் நன்றிகள்! ”இரும்புக் கம்பிகள் உன்முகத்தைச் சற்றே மறைத்திடினும் அரும்பே உன்றன் பார்வையின் கூர்மை எமை ஈர்க்கிறதே!” என்று சொல்லத் தோன்றுகின்றது இச்சிறுவனைக் காண்கையில்! கரும்புக் கவிதைகளை இந்த ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 23

-மேகலா இராமமூர்த்தி சீதையை அவள் தங்கியிருந்த பன்னசாலையோடு பெயர்த்தெடுத்துக்கொண்டு தன் தேரில் ஏறிய இராவணன், தேரை விரைந்து செலுத்து என்று தேர்ப்பாகனுக்குக் கட்டளையிட்டான். இந்த அசம்பாவிதங்களைச் சிறிதும் எதிர்பாராத சீதை, தீயில் வீழ்ந்து வெந்தழியும் கொடிபோல் துடித்து எழுந்தாள்; அழுதாள்; அரற்றினாள்; அறமே என்னை இத்துன்பத்திலிருந்து விரைந்து காத்திடு என்று முறையிட்டுக் கதறினாள். விடு தேர் என வெங் கனல்      வெந்து அழியும் கொடிபோல் புரள்வாள்      குலைவாள் அயர்வாள் துடியா எழுவாள்      துயரால் அழுவாள் கடிதா அறனே இது      ...

Read More »

படக்கவிதைப் போட்டி 289இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி தையல் இயந்திரத்தில் கண்ணும் கருத்துமாய்த் துணி தைக்கும் பெரியவரைப் படமெடுத்து வந்திருப்பவர் திரு. ஐயப்பன் கிருஷ்ணன். இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 289க்கு அளித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. படப்பதிவாளர், தெரிவாளர் இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்! ”செய்யும் தொழிலதனைத் தெய்வமென் றெண்ணியே தையல் இயந்திரத்தில் மையலொடு பணிசெய்ய ஐயம் இன்றியே வாழ்க்கையது உயர்ந்திடும் வையம் போற்றுகின்ற நன்னிலையும் வாய்த்திடும்” எனும் நம்பிக்கை மொழிகளை இத்தொழிலாளர்க்கு நல்கிவிட்டுப் படக்கவிதைப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைப் படித்துச் சுவைக்கப் புறப்படுவோம் ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 22

-மேகலா இராமமூர்த்தி இராவணனின் வீர பராக்கிரமங்களை இலைக்குடிலில் அமர்ந்திருக்கும் துறவியார் விதந்தோதுவதைக் கண்ட சீதை, அதனைச் சிறிதும் இரசிக்காது, ”ஐய! உடம்பையும் மிகையாகக் கருதும் இயல்புடைய துறவி நீர்! அப்படியிருக்க வேதங்களையும் வேதியர்களின் அருளையும் விரும்பாமல், மன்னுயிர்களைக் கொன்று புசிப்பவர்களும் பாதக வினைகளையே நன்றெனப் புரிபவர்களுமாகிய அரக்கர்தம் பதியில் வதியக் காரணம் என்ன?” என்றாள் வியப்போடு! வேதமும் வேதியர்      அருளும் வெஃகலா சேதன மன்உயிர்      தின்னும் தீவினைப் பாதக அரக்கர்தம்      பதியின் வைகுதற்கு ஏது என் உடலமும் மிகை      ...

Read More »