கர்மவீரர் காமராசர்

கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி முடிவுகள்

அன்பினிய நண்பர்களுக்கு, வணக்கம் . நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த, வல்லமை மின்னிதழும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும் இணைந்து வழங்கும் கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டியின்  நடுவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் தீர்ப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். தமிழருவி மணியன் வணக்கம். வளர்க நலம். பெருந்தலைவர் குறித்த கட்டுரைகளின் முடிவுகளை அனுப்பி வைத்துள்ளேன். கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்… முதல் பரிசு : 1. ச. சசிகுமார் – ”பார்க்கட்டும்… ஆகலாம் …” – கர்மவீரர் காமராசர்! ...

Read More »

கர்மவீரர் காமராசர்

–ச. பொன்முத்து. “அன்னை சிவகாமி பெற்றெடுத்த தமிழ்ச் சிங்கம்.. பொற்கால ஆட்சியை நடத்திக் காட்டிய தலைவர்! தர்மமே மானிடப் பிறப்பெடுத்துத் தரணியிலே வந்துதித்து ஏழைகளைக் காத்து நின்றதென்றால் காமராசருக்கே அது சாலப் பொருந்தும். நம் தமிழ் நாட்டில் இலட்சோப லட்சம் மக்கள் கல்விச்செல்வம் பெற்றுத் திகழ்வதற்கு காமராசர் ஒருவரே காரணம் என்பதை மறுக்க இயலாது. எளிமைக்கு இவர், இனிய எடுத்துக்காட்டு! கருப்புத் தங்கம்.. காங்கிரஸ் பேரியக்கத்தில் மாநிலத் தலைவர் – இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்- இரண்டுமுறை இந்தியாவின் பிரதம மந்திரிகளை நிர்மாணித்த கிங் ...

Read More »

“பெருந்தலைவர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்!

—கீதா மதிவாணன். நாடறிந்த ஒரு நல்லவரைப் பற்றி என்ன எழுதுவது? என்ன எழுதாமல் இதுவரை விட்டுப்போயிருக்கிறது? காமராஜர் என்னும் கம்பீரத் தோற்றத்துள் அடங்கிக் கிடந்த எண்ணற்ற ஆளுமைகளுள் எதைப்பற்றிப் பேசுவது? பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்தம் புகழ்பாடும் நாவுகளிலிருந்து அன்னாரது தனிப்பட்ட குணநலன்கள் பற்றியும் அவருடைய தன்னிகரில்லா சேவையைப் பற்றியும் அறியமுடிகிறது. கட்சி பேதமற்று அனைவரும் அவர் ஆட்சியைப் போற்றுவதிலிருந்தே அம்மாமனிதரின் தீர்க்கமான அரசியல் வாழ்வைப் பற்றியும், ராஜதந்திர காய்நகர்த்தல்கள் பற்றியும் ஏராளமாய் அறியமுடிகிறது… இவற்றுள் எதைச்சொல்ல? எதை விட? வெற்றுப்பேச்சும் வீராப்பும், போலி ...

Read More »

“பார்க்கட்டும் … ஆகலாம் …” – கர்மவீரர் காமராசர்!

—ச.சசிகுமார். “ஏதாவது செய்யதான் நாமெல்லாம் இங்க இருக்கோம். இந்த கோட்டையில வந்து உக்காந்திருக்கோம்னேன்… முடியாதுன்னு சொல்ல ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கவா படிச்சிருக்கோம்? முடியும்னு சொல்ல ஒரு காரணம் கண்டுபிடிங்கன்னேன்…” —முதலமைச்சரின் அறை அதிர்ந்தது. சில அதிகாரிகளும், அமைச்சர்களும் இருக்கைகளில் அமர்ந்திருக்க, சில நொடிகள் அசாத்திய அமைதி… மின்விசிறியின் சப்தம் மட்டும் சன்னமான இரைச்சலில் … “Dead investment… பிரயோஜனம் இல்லாத திட்டம்னு எல்லாம் சொல்ல நம்மை மக்கள் தேர்ந்து எடுக்கலை… ஏதாவது செய்வோம்னு தான் மக்கள் காத்திருக்காங்க… உங்க பட்ஜெட்ல இதுக்கெல்லாம் பணமில்லேன்னாக்கூட இது ...

Read More »

கர்மவீரர் காமராசர்

— ஸ்வேதா மீரா கோபால். கனவு மெய்ப்பட வேண்டும் … அந்தச் சிவகாமி மகனிடம் போய் செய்தி சொல்பவர் எவருமுண்டோ? புகழுரைகள் கண்டு மயங்காத சிந்தனையாளரைப் பற்றி இங்கே அனைவரும் புகழ்ந்து எழுதும் கட்டுரைகளை அவரிடம் ஒப்படைக்க இறைவா நீயே ஒரு நல்லவழியைக் காட்டிவிடு… பட்டியை நகராக்கி விருதுகள் பல பெற்ற மாமனிதனைப் பற்றி எழுதுவது சுலபமல்லவே… இப்படியும் ஒருவர் வாழ முடியுமோ என்ற ஆச்சரியக்குறிக்குச் சொந்தமான தமிழன்னையின் செல்லப்பிள்ளை… இமாலய சாதனைகள் பல இவர் ஆற்றிய பொழுதும் அனைத்தையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதன்றோ? ...

Read More »

கர்ம வீரர் காமராசர்

—சி. உமா சுகிதா. முன்னுரை: சுயநலமின்றி, நேர்மையுடன் நெறி தவறாமல் நாட்டுக்காகப் பணியாற்றியவர்கள் மறைந்துவிட்டாலும், ஈடு இணையற்ற தலைவர்களாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில், “பெருந்தலைவர்” என்று மக்கள் தங்கள் இதயங்களில் வைத்துத் துதிக்கும் தலைவர்தான் கர்ம வீரர் காமராசர்! பிறப்பும் சிறப்பும்: ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் அயராத உழைப்பால் தூய்மையான தொண்டால் ஒரு மனிதன் வான் போல் உயர முடியும் என்பதை உலகத்துக்கு நிரூபித்துக் காட்டியவர்! “நாட்டு நலனே எனது நலன்” என்று கருதி காந்தி வழியில் அரும்பாடுபட்ட காமராசர், ...

Read More »

கர்ம வீரர் காமராசர்

—ஞா.கலையரசி “முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி பழநிமலை ஆண்டிக்குப் பக்கத்திலே குடியிருப்போன் பொன்னில்லான் பொருளில்லான் புகழன்றி வசையில்லான் இல்லாளும் இல்லான் இல்லையெனும் ஏக்கமிலான் அரசியலைக் காதலுக்கே அர்ப்பணித்தார் மத்தியிலே காதலையே அரசியலிற்குக் கரைத்துவிட்ட கங்கையவன்!” ஆயிரம் சொற்களில் பெருந்தலைவர் காமராசரைப் பற்றி நாம் சொல்ல நினைப்பதை, ஆறே வரிகளில் அற்புதச் சொல்லோவியமாகத் தீட்டியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன். காமராசரின் பற்பல சாதனைகளில், முதலில் என்னைக் கவர்ந்தது, பொதுவாழ்வில் அவர் கடைபிடித்த நேர்மையும், கண்ணியமும், எளிமையும் தான்.  ஒரு தடவை பதவியிலிருந்தாலே பத்துத் தலைமுறைகளுக்குச் சொத்து சேர்க்கும், ...

Read More »

கர்மவீரர் காமராஜ்!

–தஞ்சை வெ.கோபாலன். பெருந்தலைவர் காமராஜ் பற்றி எத்தனை எழுதினாலும் மனம் முழுத் திருப்தி அடையவில்லை. மேலும் மேலும் அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கவே மனம் விரும்புகிறது. அவரைப் பற்றி நாம் என்ன சொல்கிறோம் என்பதுகூட அத்தனை முக்கியமில்லை. அவருடைய தாய் சிவகாமி அம்மையார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போமா? “நான் ஒரு மாணிக்கத்தைப் பெற்றேன், இப்போ உலகத்தில் உள்ள எல்லா மாணிக்கங்களும் என்னைப் பார்க்க வர்றாங்க”. இப்படி அவர் சொன்ன செய்தியை சென்னையிலிருந்து வெளிவரும் வாராந்தரி ராணி எனும் பத்திரிகை வெளியிட்டது. இவரைப் பற்றிய ...

Read More »

“தங்கத் தலைவர்”– கர்மவீரர் காமராசர்!

—ஜியாவுத்தீன். முன்னுரை: கர்மவீரரைப் பற்றித் துவங்கும் முன் சமீபத்தில் மறைந்த நமது அன்பின் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களைப் பற்றிக்குறிப்பிடுவது இங்குப் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோதுகடைப்பிடித்த நேர்மையும், அரசு இயந்திரத்தைத் தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளாததும், தன் குடும்பத்தினருக்கானசெலவுகளையும், வசதிகளையும், அரசாங்கக் கணக்கில் சேர்க்காமல், சொந்தப் பணத்தில் செலவு செய்ததையும், தன்பதவியைப் பயன்படுத்தி சொத்தோ லாபமோ அடையாததும், எந்தச் சூழ்நிலையிலும் தன் பதவியை தவறாகப்பயன்படுத்தாததும் என்று 5 வருடங்கள் பதவியில் இருந்தபோது அவர் நடந்துகொண்ட விதம் பற்றி சிலாகித்துப்பேசுகிறோம். ...

Read More »

“பெரும் தலைவர்” – கர்மவீரர் காமராசர்!

—திருக்குவளை மீ.லதா. தமிழ்நாட்டின் தலைமகன் இந்தியாவின் பெருந்தலைவன் பிள்ளை மனம் கொண்ட தங்கமகன் கம்பீர நடை கொண்ட சிங்கமகன் செல்வம் சேர்க்காத செல்வமகன் ஏழைகளின் செல்ல மகன் சாதனைகளின் சரித்திர நாயகன்… எங்கள் கல்விக்கண் திறந்த ஐயா உங்கள் பாதம் பணிகிறோம் தந்தை பெரியார் அவர்களால் தமிழ் நாட்டின் இரட்சகர் என்று அழைக்கப்பட்ட கல்வி வள்ளல் பெருந்தலைவர் காமராசர். நூற்றுப் பத்து ஆண்டுகளுக்கு முன் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, தம் கடுமையான உழைப்பால் அகில ...

Read More »

“கடமை வீரர்”– கர்மவீரர் காமராசர்!

– எஸ். நித்யலக்ஷ்மி. “கர்ம வீரர்” என அன்பாக அழைக்கப்பட்ட காமராஜர், 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று, இந்நாளில் விருதுநகராக வளர்ந்திருக்கும் அன்றைய திருநெல்வேலி மாவட்டம் விருதுப்பட்டியில் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். கடமை வீரர் என்று புகழப்பட்ட காமராசரின் பிறந்த தினம், “கல்வி வளர்ச்சி தினமாக” கடைபிடிக்கப்படுகிறது. கலைஞர் கருணாநிதி தனது சென்ற ஆட்சிக்காலத்தில் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி தினமாக அறிவித்து பள்ளிகள் தோறும் கொண்டாட வைத்தார். தமிழகத்தில் ஏழைகளும் கல்விபயில காமராஜர் ...

Read More »

“வான்புகழ் கொண்ட பாரத ரத்தினம்”– கர்மவீரர் காமராசர்!

— ஜெயஸ்ரீ ஷங்கர். பகைவர்களும் மதிக்கும் பண்பாளரான காமராசரின் தலைமையில் தமிழகம் கண்ட வெற்றிகரமான நல்லாட்சி ‘பொற்குடத்தில்’ வைத்துப் பாதுகாப்பதைப் போல இணையத்தில் கல்மேல் எழுத்துக்களாக காலத்துக்கும் மாறாமல் இருக்குமாறு பதிவுகளாகி உள்ளன. ஆடம்பரமில்லா எளியவாழ்கை வாழ்ந்தவரை வெறும் ஆயிரம் வார்த்தைகளுக்குள் எளிமையாகவே எழுதத்தான் இயலுமா? விருதுப்பட்டியில் குமாரசாமி நாடார்,சிவகாமி அம்மாள் தம்பதியர்க்கு, ஜூலை 15-ஆம் தேதி 1903 ஆம் ஆண்டில் உதித்த ‘வரலாற்று நாயகன்’. தன் தமிழகத்திற்குத் தாரை வார்த்துக் கொடுக்கவென்றே, ‘சிப்பிக்கு- நித்திலமாக, குலதெய்வம் அன்னை ‘காமாட்சி’யின் அருளால் ‘காமராசர்’ வந்து ...

Read More »

“தங்கத் தலைவர்” – கர்மவீரர் காமராசர்!

–சுமதி ராஜசேகரன்.  முன்னுரை: பண்டித ஜவஹர்லால் நேரு புகழ்ந்தது: காமராசரின் ஆட்சியில் பெரிய திட்டங்களிலும் சரி, அன்றாட அரசாங்க நிர்வாகத்திலும் சரி, ஊழலே இல்லை. காமராசரின் நிர்வாகத் திறமைக்கு இது ஓர் உதாரணம் ! என்றும் … மத்திய மந்திரி நந்தா புகழ்ந்த உரை: எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு முன்னேற்ற மானிய நிதி வழங்குகிறது. இருப்பினும் அதை முறையாகப் பயன்படுத்தி தமிழகத்தை வளர்ச்சி காணச் செய்தவர் காமராசர். “ என்றும் … குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் புகழ்ந்துரைத்தது: காமராசர் தமிழக ...

Read More »

“படிக்காத மேதை” – கர்மவீரர் காமராசர்!

— சித்ரப்ரியங்கா பாலசுப்பிரமணியன். “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு” என்னும் கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு உகந்தவரான நம் படிக்காத மேதை காமராஜர் பற்றி எழுதுவதற்கான வாய்ப்பு பெற்றதில் நான் அகம் மகிழ்கிறேன். காமராஜர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் விருதுப்பட்டி என்னும் ஊரில், 1903 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 15 ஆம் நாள் அவதரித்தார். தந்தையார் குமாரசாமி நாடார் விருதுப்பட்டியில் தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார், தாயார் சிவகாமி அம்மாள். அவரின் தங்கை நாகம்மாள். ...

Read More »

“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்!

— பி. தமிழ்முகில் நீலமேகம். படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு ! என்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியவர் நமது பெருந்தலைவர் காமராசர் அவர்கள். இவர்தம் ஆட்சிக் காலத்தில் தமிழகம் கல்வியில் அபார வளர்ச்சி பெற்றமையால் இவர் “கல்விக்கண் திறந்த காமராசர்” என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறார். தனது ஆட்சிக் காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த காமராசர் அவர்கள் படித்தது ஆறாம் வகுப்பு வரை மட்டுமே. இவரது கல்வி ...

Read More »