வாசகர் கடிதம்

அப்பா

சேசாத்திரி பாஸ்கர் பள்ளி நாட்கள் எப்படிப்பட்டவர்க்கும் ஒரு இனிமையான் விஷயம். படிப்பவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் , ஆளுமை எல்லாம் தாண்டி பள்ளிநாட்கள் ஒரு கூட்டு வாழ்க்கை. அதுவும் இரண்டு மாத விடுமுறை முடிந்து அடுத்த வகுப்பில் எல்லோரும், புதுஇடத்தில கூடும்போது ஏற்படும் சந்தோஷம் எந்த சினிமாவும், பணமும் , கொடுக்க முடியாதது.சின்ன சட்டை , அதில் பிய்ந்த பொத்தானை தைய்க்க வேண்டாம். அதனை அப்பாவோ , அம்மாவோ உள் வழியாக பின்னை வைத்து குத்தி ( தலையை குனியாதடா) ஊக்கு மாட்டி அனுப்பும் ...

Read More »

கொடுத்த அல்வா போதும்!

சேசாத்திரி பாஸ்கர் தமிழிசை பற்றி எழுதியதற்காக சூர்யா தேவி என்ற பெண்மணி கைது செய்யப்பட்டு உள்ளார் . ஜாமீன் மறுக்கப்பட்டும் எஸ் வீ சேகரை காவல்துறை நெருங்க முடியவில்லை .ஒன்று தமிழக அரசு இதில் ஞாயம் பார்த்து காவல் துறையை பணித்து கைது செய்து இருக்கலாம் .பா ஜ க வினர் அரசியல் நேர்மையை கருதி அவரை சரண் அடைய சொல்லியிருக்கலாம் .குறைந்த பட்சம் சட்டத்தின் மாண்பினை மதித்து சேகராவது நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கலாம் . இதை எல்லாம் தாண்டி அவர் பழைய மோடியுடன் ...

Read More »

தமிழக அரசின் நுண்புலன் திறனற்ற நிலை

சேசாத்திரி பாஸ்கர் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு தமிழக அரசின் நுண்புலன் திறனற்ற நிலையைக் காட்டுகிறது. போராட்டம் உச்ச நிலையை எட்டிய நிலையில் காவல்துறை சுதாரித்துக் கொண்டு நிலையை கட்டுக்குள் கொண்டு வரத் தவறியது பெரும் தவறு . இரண்டு சாமானியன் சண்டையிட்டுக் கொள்ளும்போது உணர்ச்சி மேலோங்கி வன்முறை நிகழலாம் . ஆனால் காவல் துறையினர் சட்டென உணர்ச்சி வசப்பட்டு பதிலுக்குப் பதில் வன்மத்தில் இறங்கியது கொடூரம் .போரட்டக்காரர்கள் அந்நிய நாட்டை சேர்ந்தவர்களா என்ன ? இராணுவத்தில் தான் எதிரி சுடப்பட்டு கீழே வீழ்ந்து ...

Read More »

கர்நாடக ஆளுநர் கவனத்துக்கு

“கூட்டுக் குடும்பமே நாட்டுக்கு உயர்வு கூட்டணி ஆட்சியே மாநிலத்துக்கும் உயர்வு” பல்வேறு நிகழ்வுகளுக்கு பின் கர்நாடக தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளிவந்து நிலையான ஆட்சி நிம்மதி தராது “கூட்டணி ஆட்சிதான் நாட்டுக்கு நல்லது” என்றதொரு உறுதியான முடிவை எடுத்துள்ள கர்நாடக மக்களைக்  கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். பாராட்டுகள். உண்மையை உணராமல் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளவர்களை உடனடியாக அழைக்காமல், தனிப்பெரும் கட்சியை அழைக்கலாமா, வேண்டாமா என்ற தடுமாற்றத்தில் கர்நாடக கவர்னர் யோசனையில் காலந்தாழ்த்துவது குதிரைபேர வியாபாரத்துக்கு வழிவிட்டதாக ஆகிவிடும் சூழ்நிலையை உண்டாக்கிவிடும் என்று நடுநிலையாளர்கள் ...

Read More »

“ஆத்துப் பாலக் கச்சேரி”

மீ.விசுவநாதன் “ஆசிரியரே…வாரும் பாலத்துல நடுசெண்டர்ல ஒக்காந்து பேசுவோம்..காத்து நல்லா வீசுதில்லா…” “அது என்னவே நடுசென்டறு….நம்மூரு கேட்டுவாசல் தெருமாரில்லாருக்கு ஒம்மோடு பேச்சு…..” “ஆசிரியரே…நீங்க மெட்ராசுக்குப் போனாலும் போனீய..எங்களுக்கு இங்க ஊர் நடப்பச் சொல்ல ஆளே இல்லபோம்…மெட்ராசுல என்ன சமாசாரம்,,,எதாவது உப்பு புளி தேறுமா” “மெட்ராசுல புத்தகக் காட்சிக்குப் போனேன்…ஒரு நாலு புத்தகம் வாங்கினேன்…அதுலயே முங்கிட்டேன் போம்” “எங்களப்போல திண்ணை தேய்க்கரவரா நீரு…படிப்பாளியாச்சே….என்ன புத்தகம் வாங்கியாந்தீரு…நமக்கு எதாவது அதுல தீனி உண்டா?” “நீதிபதி சந்துரு எழுதின ” அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்”, ” நீதிபதி சந்துரு” ...

Read More »

பழுதாகி வரும் பட்டிமன்றங்கள்

— மு. கோபி சரபோஜி. பண்டிகைகள் தோறும் ஒரு பட்டிமன்றத்தை அரங்கேற்றி விட வேண்டும் என்பதை எழுதா விதியாகக் கொண்டிருக்கும் எல்லாத் தொலைக்காட்சி சேனல்களும் தயவு செய்து அதை மறுபரிசீலனை செய்தால் நல்லது என்றே தோன்றுகிறது. மின்னல் கீற்றைப் போல ஒரு கருத்தை, சிந்தனையைக் கலகலப்பு என்ற இரசவாதத்திற்குள் வைத்து கவிதையும், கதையும், இலக்கியமும், இன்னபிறவுமாய் இழைத்துச் செவிகளில் அரங்கேற்றி விசேச நாட்களை விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்களாய் மாற்றிக் கொடுத்த பட்டிமன்றங்கள் இன்றைக்கு அரிதாகி வருகின்றன. பழுது பார்க்க வேண்டிய நிலையில் அவை இருக்கின்றன. ...

Read More »

அநாகரீக அரசியல்வாதிகள்

நமது நாட்டில் அதுவும் நம் தமிழ்த் திருநாட்டில் எத்தனை தலைவர்கள் தங்கள் செயலிலும், பேச்சிலும் நாகரீகம் காத்தனர். கொள்கைளை விமர்சித்தார்கள். வெள்ளையர்களோ கொள்ளையர்களோ அவர்களை நாகரீகமான முறையிலேதான் விமர்சித்தார்கள். என்னுடைய தலைமுறையில் நான் நேரில் பார்த்து வியந்த தலைவர்களில் பெருந்தலைவர் காமராஜர் என் மனதில் இன்றும் சிம்மாசனம் போட்டு அமர்துள்ள அரிய தலைவர். இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டிய அருமையான தலைவரும் கூட. 1973ம் வருடம் சென்னையில் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் துவங்குவதற்கு முன்பாக திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் ...

Read More »

இல்லாதவன் விடமாட்டான் …

—கவிஜி. உங்கள் வீட்டில் உள்ள ஒருவரை திட்டமிட்டுக் கொன்று புதைத்தவருக்குத் தூக்கு தண்டனை விதித்தால், “வேண்டாம், மனிதனை மனிதன் கொல்வது தவறு” என்று நீங்கள் கூறுவீர்களா? அப்படி நீங்கள் கூறினீர்கள் என்றால் நீங்கள் இந்தச் சட்டத்துக்கும், இந்த வாழ்வு முறைக்கும் ஏதோ ஒரு வகையில் முரண்பட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சரி, உடன்பாடுதான் வாழ்க்கையா என்றால், அதுவும் இல்லை முரண் பட படத்தான் உடன்பாடு பற்றிய புரிதல் ஏற்படும். அடித்தால் மறுகன்னம் காட்டுதல் அன்பின் தீர்க்க தரிசனம். ஆனால், அதே சமயம் ஒரு கை ...

Read More »

“மது விலக்கு”

மீ.விசுவநாதன் “குடி குடியைக் கெடுக்கும்”என்ற முதுமொழியை மறக்கச் செய்த அரசியல் போலிகளை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று அரசியல் தலைவர்களே குடித்து விட்டும், ஒழுக்கம் கெட்டும் இருப்பதால் அவர்களால் மக்களுக்கு வழிகாட்டவோ முன்னுதாரணமாக இருக்கவோ முடியாது. தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இருந்தார்கள். பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, மது ஒழிப்பிற்காகத் தன் வீட்டுக் கொல்லையில் வளர்ந்திருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டி எறிந்த பெரியார் ஈ.வே.ராமசாமி, எளிய மனிதர் கக்கன், ப.ஜீவானந்தம், பாலதண்டாயுதம், பி.ராமமூர்த்தி போன்ற தன்னலம் இல்லாத , மக்கள் ...

Read More »

யாக்கோபும் தூக்குதண்டனையும்!

-சேசாத்திரி பாஸ்கர் யாக்கோப் தூக்கில் இட்டதற்கு எல்லோரும் எம்பி குதிக்கிறார்கள். சரி, இவர்களின் ஹுமன் ரைட்ஸ் இத்தனை வருஷம் என்ன செய்தது ? வன்முறையைத் தடுக்க முடிந்ததா ? இவர்கள் வன்மம் ஒரு பக்கம், இவர்கள் கோபம் ஒரு பக்கம். இத்தனை உயிர்களைப் பிரித்த இவர்களுக்கு மன்னிப்பு கொடுத்தால் மக்கள் அவனைக் கல்லடித்து கொன்று விடுவார்கள். நம் ’செகுலர்’ என்ற அன்புப் போர்வை இவர்கள் துப்பாக்கி வைத்து கொள்ளும் மறைவிடமா? சட்டத்திற்கு என்ன மரியாதை?தூக்கில் போட மாட்டார்கள் என்ற தைர்யம் தானே இவர்களை மேலும் ...

Read More »

அவர் விஸ்வநாதம்

பத்து வருஷங்களுக்கு முன்பு நான் மந்தவெளி பக்கம் வசித்து வந்தேன். காலை கொஞ்சம் சாந்தோம் பக்கம் நடை பயிற்சி செல்வேன். அப்போது என் கால்களில் பாதிப்பு இல்லை. உடன் என் மனைவி வருவாள். எம் எஸ் வீ . வீட்டு பக்கம் ( அது பழைய வீடு ) வரும்போது அவரை பார்ப்பேன். பொதுவாக எந்த பிரபலத்தையும் தொந்தரவு செய்ய பிடிக்காது. ஆனால் அன்று அவர் பால்கனியில் லுங்கியில் உலாவி கொண்டிருந்தார். கீழே நாங்கள் பார்த்து வரவா என வினவினோம். அவருக்கே உரிய தோரணையில் ...

Read More »

என்னையா ஊர் இது .?

சேசாத்திரி பாஸ்கர் ஒரு சினிமா கொட்டகையில் இப்போது குறைந்த பட்சம் டிக்கெட் விலை நூற்றி இருபது ருபாய் .இரு சக்கர வாகனம் நிறுத்த கட்டணம் முப்பது ருபாய் .வெளியே வாங்கிய தின்பண்டங்களை உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை . முன்பு கபாலி காமதேனு தியேட்டர்களில் கூட ஒரு எவர்சில்வர் அண்டா போல பாத்திரத்தில் குடிநீர் இருக்கும் .ஒரு டம்ப்ளரில் நீரை பிடித்து குடிக்க வேண்டும் .களவு போகாமல் இருக்க டம்ப்ளரில் ஒரு செயின் கட்டி இருப்பார்கள் .தலையை கீழே குனிந்து குடிக்க சட்டையெல்லாம் ...

Read More »

யாருடைய எலிகள் நாம் ?

எஸ்.வி. வேணுகோபாலன் அன்பானவர்களுக்கு மிகவும் தற்செயலாக சனிக்கிழமை மாலை அழைத்துப் பேசுகையில், மறுமுனையில் எழுத்தாளர் சமஸ், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தமது நூல் வெளியீடு நிகழ்வு நடக்க இருப்பதைத் தெரிவித்து அழைக்கவும் செய்தார். நல்லவேளையாக, தமுஎகச கே கே நகர் கிளையில் நிகழ்ந்த ஒரு கூட்டத்திற்குப் பிறகு அருகேயே டிஸ்கவரி புத்தக நிலைய அரங்கில் நடந்து கொண்டிருந்த நூல் வெளியீட்டுக்குச் சற்று தாமதமாகப் போய்ச் சேர்ந்துவிட முடிந்தது. யாருடைய எலிகள் நாம் என்கிற தலைப்பில் 384 பக்கங்கள், துளி வெளியீடு என்ற முறையில் அவரது வாழ்க்கை ...

Read More »

வளர்ச்சியான பாதையில் இந்தியா செல்ல.. குடும்ப அட்டையில் முதலில் மாற்றம்….!

சித்திரை சிங்கர் புதியதாக இப்போது விண்ணப்பித்துள்ள பொது மக்களுக்கு, ஏப்ரல் மாதம் புதிய ரேசன் அட்டைகள் வழங்குவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றாலும்  இந்த ரேசன் அட்டைகள்…. அதில் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகளின் “உண்மை நிலை” கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டியதே. இது வரை போனது போகட்டும் என்றாலும் இனியாவது  முறையாக உண்மையாக பதிவுகள் இருக்கும் வண்ணம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான சாதாரண மக்களின் நெடுநாள் ஆசை. இதில் முதலில் குடும்ப வருமானம் அரசுப் பணியில் உள்ளவர்கள் கூட தங்களது சம்பளத்தை ...

Read More »

வேண்டாத அலம்பல்

சித்திரை சிங்கர்சமீபத்தில் ஒரு நண்பரின் இல்லத் திருமணத்தில் மூன்று நாட்கள் முழுமையாக இணைந்து செயல்படவேண்டியிருந்தது. பெண் வீட்டுத் திருமணம் என்பதால் கொஞ்சம் கவனமாகவே எங்கள் “டீம் வொர்க்” செயல்பட்டது. என்னதான் மாப்பிளையின் அம்மா, அப்பா, அண்ணன் தங்கை மற்றும் மாப்பிள்ளையும் அமைதியாக இருந்தாலும், வந்திருந்த அவர்களின் உறவினர்களின் அலம்பல் கொஞ்சம் நஞ்சமில்லை. பெண் வீட்டார் ஓரளவுக்கு வசதியானவர்கள் என்றாலும், எந்தவிதமான குறையும் இல்லாமல் தங்களின் பெண் திருமணம் நடக்கவேண்டும் என்ற ஆர்வத்தினாலும் பார்த்து பார்த்துதான் எல்லா செயல்களையும் செய்தார்கள்.  அப்படியும் அது இப்படி… இது ...

Read More »