கர்நாடக ஆளுநர் கவனத்துக்கு

“கூட்டுக் குடும்பமே நாட்டுக்கு உயர்வு
கூட்டணி ஆட்சியே மாநிலத்துக்கும் உயர்வு”

பல்வேறு நிகழ்வுகளுக்கு பின் கர்நாடக தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளிவந்து நிலையான ஆட்சி நிம்மதி தராது “கூட்டணி ஆட்சிதான் நாட்டுக்கு நல்லது” என்றதொரு உறுதியான முடிவை எடுத்துள்ள கர்நாடக மக்களைக்  கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். பாராட்டுகள்.

உண்மையை உணராமல் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளவர்களை உடனடியாக அழைக்காமல், தனிப்பெரும் கட்சியை அழைக்கலாமா, வேண்டாமா என்ற தடுமாற்றத்தில் கர்நாடக கவர்னர் யோசனையில் காலந்தாழ்த்துவது குதிரைபேர வியாபாரத்துக்கு வழிவிட்டதாக ஆகிவிடும் சூழ்நிலையை உண்டாக்கிவிடும் என்று நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

பழைய சரித்திரங்களை புரட்டிப் பார்க்க வேண்டாம். சமீபத்தில் கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் இந்நிலை வந்தபோது அம்மாநில கவர்னர்கள் கடைப்பிடித்த பாணியை இங்கும் கடைப்பிடித்து உடனடியாக மதசார்பற்ற ஜனதாதளம் + காங்கிரஸ் அணியை ஆட்சியமைக்க அழைப்பதுதான் முறையென்று இந்திய அரசியல் நடுநிலையாளர்கள் எதிர்நோக்கியுள்ளார்கள்.

கூட்டுக் குடும்பமே நாட்டுக்கு உயர்வு, கூட்டணி ஆட்சியே மாநிலத்துக்கும் உயர்வு
என்பதை கர்நாடக மாநில கவர்னர் கவனத்துக்கு பதிவு செய்கிறேன்.

சித்திரை சிங்கர்
அம்பத்தூர்
(நடுநிலையாளர்)
16.05.2018.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.