திரை

நடிகர் விவேக்கிற்குச் சிலை வைக்கணும் – ஓவியர் ஸ்யாம்

மறைந்த நடிகர் விவேக்கிற்கு ஓவியர் ஸ்யாம், தன் ஓவியத்தின் மூலம் அஞ்சலி செலுத்துகிறார். விவேக் உடனான தம் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். விவேக்கிற்குச் சிலை வைக்கணும் என்று அவர் சொல்வது ஏன்? பதிவைப் பாருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

நான் நடிக்க வந்தது எப்படி? – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 10

‘கட்டில்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார் ஸ்யாம். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் நடிக்க அழைத்தபோது ஸ்யாம் நடிக்காதது ஏன்? இப்போது தாடி வளர்ப்பது ஏன்? கத்திச் சண்டை கற்றுக்கொள்ளுங்கள் என்று இயக்குநர் சொன்னது ஏன்? சட்டென அழுவதற்குச் சக நடிகை பயன்படுத்தும் உத்தி எது? அதிகமாக ரீ டேக் வாங்கிய காட்சி எது? பிடித்த நடிகர்கள் யார் யார்? இதோ மனம் திறக்கிறார், ஸ்யாம். பார்த்து மகிழுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலிவுட் வளாகத்தில்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலிவுட் வளாகத்தில் ஓர் உலா. ஜூராசிக் பார்க் உள்ளிட்ட பல படங்கள் இந்த வளாகத்தில் எடுக்கப்பட்டுள்ளதை வழிகாட்டி விளக்குகிறார். திரைப்பட ரசிகர்களும் திரைத் துறையில் ஆர்வம் உள்ளவர்களும் பார்த்துப் பயன்பெறுங்கள். படப்பிடிப்பு – ஹேமமாலினி லோகநாதன் (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

Story of How Ganapathy Subramaniam became Gemini Ganesan

Seshadri Baskar On this day, hundred years ago, when Ganesan was born in Pudukkottai never in their family had even thought that he would make it big one day . Ganesan wanted to become a Doctor but after the graduation in Maharaja College (He did B.Sc., Physics), he had to face many turbulences in life and he came to Chennai ...

Read More »

“கந்தர் சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

நடிகர் ராஜ்கிரண் ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்குப் பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம். முருகப் பெருமானை நம்புவோர்க்கு, “கந்தர் சஷ்டி கவசம்” என்பது, “ஒரு பாதுகாப்பு அரண்”. இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்துவரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன… இறைவனை நம்பாதோர்க்கு, “நம்பாமை” என்பது, அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு, “நம்புதல்” என்பது, அவர்களின் சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடு அவரவர் நின்றுகொள்வது தான், மேன்மையானது. தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது, மிகவும் கீழ்மையானது… இந்த ...

Read More »

ஒடாங்குட்டான் பாடல் – வைரமுத்து

ஒரு புதுப்படம்; எல்லோரும் இளைஞர்கள். பெரியவர் சிறியவர் பார்த்துத் தமிழ் வினைப்படுவதில்லை. எந்தச் சிப்பியில் எந்த முத்தோ? பெரும்படம் போலவே இந்தச் சிறுபடத்திற்கும் ஒரு காதல் பாடல்.  இசை – மாரிசக்தி, இயக்கம் – மகிமைதாஸ், பாடகர்கள் – யது – ஜாஹ்நவி , படம் – ஒராங்குட்டான். பாடல் நண்பா! எப்போது காதல் வாய்த்தது? அப்போது என்ன நேர்ந்தது? ஒரு சூறாவளி இதயச் சிறுகூட்டில் சுழன்றதா? ஒரு கோதாவிரி முதுகின் நடுக்கோட்டில் நகர்ந்ததா? இலவம்பஞ்சு போலே உடல் மிதந்து போகாதோ உன்னை நினைத்தால் ...

Read More »

டாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்

சுப்ரபாரதிமணியன் திருப்பூரில்  கனவு அமைப்பு நடத்திய ஒருநாள் திரைப்பட விழாவில் டாலர் சிட்டி, இன்ஷா அல்லாஹ் ஆகிய படங்கள், 24.1.2020 அன்று திரையிடப்பெற்றன. இதில் டாலர் சிட்டி பற்றிய அறிமுகம் இங்கே. டாலர் சிட்டி ஆவணப் படம் – இயக்குநர் ஆர்.பி. அமுதன் – 77 நிமிடங்கள் பனியன் தொழிலாளி, கைத்தறி நெசவுத் தொழிலாளி, விசைத்தறித் தொழிலாளிகள், பனியன் உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் பார்வையில் – அவர்களின் நேர்காணல்கள் மூலம் இப்படம் சொல்லப்பட்டிருக்கிறது. திருப்பூர் நொய்யல் பற்றியும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் பல படங்கள் வந்துள்ளன. ஆனால் தொழில்ரீதியான ஆவணப்பட இயக்குநர் ஒருவரிடமிருந்து திருப்பூரைப் பற்றிய ...

Read More »

ஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’

மக்கள் தொடர்பாளர் ஜான்      இயக்குநர் தரணி ராசேந்திரன்   இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘ஞானச் செருக்கு’. ஓவியர் வீர சந்தானம், வ.ஐ.ச. ஜெயபாலன், தமிழ்மாறன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தரணி ராசேந்திரன் பூர்வீகம் திருவாரூர் என்றாலும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்தவர். பொறியியல் படித்தபோதே படிப்பில் நாட்டம் இல்லாமல் இவரது கவனம் சினிமா பக்கம் திரும்பியது. இதோ அவரே இயக்குநரான அனுபவங்களையும், ஞானச்செருக்கு உருவான விதம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.. “பொறியியல் படித்தாலும் சினிமா ஆர்வம் அதிகமாக இருந்ததால் ஒளிப்பதிவு பக்கம் என் கவனம் திரும்பியது. ...

Read More »

ஒருநாள் ஈரானியத் திரைப்பட விழா

ஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா ஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா திருப்பூரில் சேவ் அலுவலகம், (கலைஞர் அறிவாலயம் அருகில்) 5, அய்ஸ்வர்யா நகர், அரசு பொது மருத்துவமனை அருகில். தாராபுரம் சாலையில் 12/1/2020 அன்று நடைபெற்றது. திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு, (Federation of Film Societies of India) ,  கனவு –  “ சேவ்  “ இணைந்து நடத்தின. விழாவில் திரைக்கதையாசிரியர் கதிர் பேசுகையில்: ஒரு திரைப்படத்திற்கு நூறு சதவீதம் அடிப்படை பலமாக விளங்குவது திரைக்கதையாகும். திரைக்கதையை பயிலும் இளைஞர்கள் ...

Read More »

ஏ ஆர் ரஹ்மான் முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’

ஏ ஆர் ரஹ்மான் முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’   ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ – நமது பாரம்பரிய கலை, இசை, கலாச்சார வடிவங்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் ஒரு முற்றிலும் புதுமையான கூட்டு முயற்சி. கலாச்சாரம் என்பது தொடர்ச்சியானது; கலாச்சாரம் என்பது கால அடைவுகளுக்கு அப்பாற்பட்டது; அத்தகைய ஒரு பாரம்பரியமிக்க கலாச்சாரம் கொண்ட தமிழகத்தின் ஒலியை, ஒளியை, இசையை, ஓசையை, வலியை, வெளியை இசையின் மொழி கொண்டும் கலையின் வழி கொண்டும்  பாதுகாத்துப் ...

Read More »

83 – கபில் தேவின் வாழ்க்கைத் திரைப்படம்

சுரேஷ் ரங்கநாதன் இந்திய கிரிக்கெட் அணியின்  புகழ்மிக்க முன்னாள் தலைவர் கபில் தேவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு, ’83’ என்ற தலைப்பில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. கான், விஷ்ணு வர்தன் இந்தூரி, மது மந்தனா, தீபிகா படுகோனே, சஜித் நதியாத்வாலா ஆகியோரது கூட்டுத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தைக் கபீர் கான் இயக்கியுள்ளார். கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். படத்தில் தீபிகா படுகோனே, தஹிர் ராஜ் பாசின், சாகிப் சலீம், ஹார்டி சந்தூ, அம்மி விர்க், அமிர்தா பூரி, பங்கஜ் திரிபாதி, போமன் ...

Read More »

சிவாஜி – ஒரு சுயம்பு

-சேஷாத்ரி பாஸ்கர் ஒரு படத்தின் இறுதிக் காட்சி. படப்பிடிப்புக் குழு தயார். இதற்காக அந்த நாயகர் மூன்று நாட்கள் தூக்கத்தைத் தொலைத்து ஒரு வாடிய முகத்தை ஏற்படுத்திக் கொண்டார். அந்தச் சில நாட்கள் அவர் பேசுவதைக் குறைத்து, அந்தப் பாத்திரத்தின் உணர்வைப் புரிந்துகொண்டு, அதில் லயித்து எப்படிச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். தூக்கம் இழந்த முகம் கொஞ்சம் உப்பியது. கண்கள் கொஞ்சம் பெரிதாகின. பெரும் களைப்பு முகத்தில் தெரிந்தது இரவு வீட்டுக்குச் சென்ற போதும், அவர் சகஜமாகவில்லை. பின்னர் போட்டுக் ...

Read More »

தனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்

The Extraordinary Journey of the Fakir என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் கென் ஸ்காட் (கனடா நாட்டு இயக்குநர்) இயக்கிய படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பெற்று வெளிவந்துள்ளது. புதிய கதைக் களத்துடன் சுவையான படமாக அமைந்துள்ளதாகத் திரை விமர்சனங்கள் பலவும் தெரிவிக்கின்றன. வல்லமை வாசகர்கள் யாரும் இந்தப் படத்தைப் பார்த்திருந்தால், உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Read More »

‘ஜோக்கர்’ இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகள்

-நாகேஸ்வரி அண்ணாமலை சர்கார் படத்தைப் பார்த்து மிகவும் ஏமாற்றமடைந்திருந்த எனக்கு சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘ஜோக்கர்’படம் மிகுந்த மன நிறைவைத் தந்தது. அதன் விமர்சனத்தைப் படித்திருந்த எனக்கு அதைப் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் – அதாவது சர்கார் படத்தைப் பார்த்த பிறகுதான்– கிடைத்தது. இந்தப் படம் அமெரிக்காவில் திரையிடப்படவில்லை என்று நினைக்கிறேன். எல்லா வகையிலும் சர்கார் படத்திற்கு நேர் மாறு ஜோக்கர் படம். முதலில் விஜய்யின் சண்டை போடும் திறனையும் exercise dance ஆடும் திறமையையும் நம்பி சர்கார் படத்தை எடுத்திருக்கிறார்கள். ...

Read More »

இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரை விமர்சனம்

-விவேக்பாரதி “இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று” என்னும் கவிஞர் கண்ணதாசனின் பிரபல பாடல் வரி ஒன்று படமாகியிருக்கிறது. தனது முதல் படத்தின் முயற்சியில் நல்ல முத்திரையும் முதிர்ச்சியையும் காட்டி இருக்கிறார் இயக்குநர் மு.மாறன் அவர்கள். பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் மற்றும் நடிகர் இயக்குநர் ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த மு.மாறன் ஒரு நல்ல திரைக்கதையைக் கொண்ட படத்தை இயக்கியிருக்கிறார். இதன் திரைக்கதை அமைப்பு தான் இந்தப் படத்திற்கு பலம் என்று தோன்றுகிறது. இதன் திரைக்கதையைக் குறித்து முதலில் ...

Read More »