அறிந்துகொள்வோம்

நார்மன் ராபர்ட் போக்சன்

வெ. சுப்ரமணியன் நேற்று விண்மீன்களின் பொலிவு குறித்த ஒரு காணொலி தயாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது விண்மீன்களின் தோற்றப் பொலிவெண் (Apparent magnitude) குறித்த தற்போது நடைமுறையில் பயன்படுத்தப்படும் எண் மதிப்பு அளவீட்டு முறையை (magnitude scale) உருவாக்கிய  நார்மன் ராபர்ட் போக்சன் (Norman Robert Pogson) சென்னையில் வாழ்ந்து மறைந்த ஆங்கிலேயர் என்ற விபரம், அவரைப் பற்றி இன்னும் அதிகமான விவரங்களை அறிந்துகொள்ள என்னைத் தூண்டியது. அதனால் இணையத்தளத்தில் அவர் குறித்துத் தேடிய போது ஆங்கிலத்தில் கிடைத்த தகவல்களைத் திரட்டித் தமிழில் தருகிறேன். நார்மன் ராபர்ட் போக்சன் ...

Read More »

சென்டாரஸ் உடுத் தொகுப்பு

வெ. சுப்ரமணியன் எழுதிக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான இராசி விண்மீன் தொகுப்புகளை நட்ட நடுவில்  மேஷம், இரிஷபத்துடன் நிறுத்தி  விட்டுத் திடீரென்று, “எல்லாம் கிடக்க கிழவனைத் தூக்கி மனையில் வை” என்பது   மாதிரி சென்டாரஸ் உடுத் தொகுப்பை நான் ஏன் இப்போது எடுக்க வேண்டும் என்ற வினா உங்கள் மனதுக்குள் கண்டிப்பாக இருக்கும். தற்போது இரவு சுமார் 8.00 மணி முதல்  தென்கிழக்கு அல்லது தெற்குத் திசையில் கிழக்கு மேற்காக அருகருகில் அமைந்த இரு பொலிவான உடுக்களை வெறும் கண்களால் தொலைநோக்கி அல்லது ...

Read More »

உடுத் தொகுப்புகளின் குடும்பங்கள் (Constellation families)

வெ. சுப்ரமணியன் உடுத் தொகுப்புகளின் பெயர்களுமே (Names of the Constellations), உடுக்களின் பெயர்களைப் (Names of the stars) போலவே, பலவிதமான மூலங்களிலிருந்து வந்தவை. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கதையையும் பொருளையும் கொண்டவை. பொதுவாகப் பழைய உடுத் தொகுப்புகளின் பெயர்கள் கிரேக்க புராணங்களிலிருந்து வந்தவை. அதே நேரத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட உடுத் தொகுப்புகள் பெரும்பாலும் அறிவியல் கருவிகள் மற்றும்  அயல் விலங்குகளைக் கொண்டு பெயரிடப்பட்டன. உடுக்களுடன் தொடர்புடைய கதைகள் ஒரு உடுத் தொகுப்பிற்கும் அடுத்த உடுத் தொகுப்பிற்கும் இடையிலேயே வேறுபடுவதால் பெயரிடுவதில் கண்டிப்பான விதிமுறைகள் எதுவும் ...

Read More »

கிரகணங்கள் – ஒரு பார்வை

வெ. சுப்ரமணியன் பூமி சூரியனைச் சுற்றும் அதே பாதையில் சந்திரனும் பூமியைச் சுற்றி வந்தால் இரண்டின் சுற்றுப் பாதைகளும் ஒரே தளத்தில் அமைந்திருக்கும். அந்த மாதிரியான நிலையில் ஒவ்வொரு அமாவாசையிலும் சூரிய கிரகணமும், ஒவ்வொரு பௌர்ணமியிலும் சந்திர கிரகணமும் நிகழும். காரணம் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே அச்சில் நேராக அமையும் போது கிரகணம் நிகழ்கிறது. பூமியின் சுற்றுப்பாதையும், சந்திரனின் சுற்றுப்பாதையும் நீள்வட்டமாக உள்ளன. மேலும் சந்திரனின் சுற்றுப்பாதை 5.1o  கோணம் புவியின் சுற்றுப்பாதைக்குச் சாய்வாக அமைந்துள்ளது. ஆகவே கிரகணத்தளமும், ...

Read More »

டென்சர்ஃப்ளோ – ஓர் அறிமுகம்

நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன் இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) என்று சொல்லப்படுகின்ற தரவுப் போக்குகளின் முன்கணிப்பு மற்றும் தரவுப் போக்குக் கணிப்புகளில் தலையீட்டு நடவடிக்கைகளின் விளைவு ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடிய பயனுள்ள தகவல்களைப் பிரித்தெடுக்கச் சிக்கலான தரவுத் தொகுப்புகளைப் பகுப்பாய்வு செய்ய, தொழில்நுட்பச் சந்தை மற்றும் அறிவு சார்ந்த அமைப்புகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இத்தகைய செயற்கை நுண்ணறிவுத் தகவல்கள், வருங்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்வுகளை மாற்றவும் எதிர்காலப் போக்குகளை வழிநடத்தவும் பயன்படுத்தலாம். இயந்திரக் கற்றலும், ஆழமான கற்றலும் செயற்கை நுண்ணறிவின் குறிப்பிட்ட ...

Read More »

நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி

நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகளை ஏந்தி  முதன் முதல் அகில விண்வெளி நிலையத்துடன் இணைப்பு   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 2020 மே மாதம் 30 ஆம் தேதி பிளாரிடா கனவரல் முனை ஏவு தளத்திலிருந்து, முதன்முதல் இரு விமானிகளை ஏற்றிக்கொண்டு, ஸ்பேஸ்X பால்கன் 9 பூத ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக பூமிச் சுற்று வீதியில் சுற்றத் தொடங்கியது. 2011ஆம் ஆண்டில் ஓய்வெடுத்த எல்லா விண்வெளி மீட்சிக் கப்பல்கள் [Space Shuttle] ஆட்சிக்குப் பிறகு, ...

Read More »

இஸ்ரேலில் 2021இல் எழும் மிகப்பெரும் சூரியக் கதிர்ச்சக்தி மின்திட்டம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூரியக்கதிர் மின்சக்தி பரிமாற முந்நூறு மெகாவாட் ஆற்றல் உள்ள ஓரரும்பெரும் மின்சார நிலையம் தாரணியில் உருவாகி வருகிறது, வாணிபப் படைப்புச் சாதனமாய் ! தட்டாம்பூச்சி போல் பறக்க வானூர்திக்குப் பயன்படப் போகுது ! பரிதி சக்தியால் பறக்கும் ! எரிவாயு இல்லாமல் பறக்கும் ! பகலிலும் இரவிலும் பறக்கும் ! பசுமை மீள்பயன் புரட்சியில் பிறக்கும்  ! பாதுகாப்பாய் இயங்குவது ! நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில்  நான்கு காற்றாடி உந்துது ! பன்னிரண்டாயிரம் சூரியச் ...

Read More »

ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க, சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்

சி.ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள் துருவப் பகுதி பணிகளுக்கு, சுவைநீர் உற்பத்திக்கு, வீட்டுக் கணப்புக்குப் புதிய சிற்றணுவுலை நிலையங்கள் அமைப்பு 2020ஆம் ஆண்டில் இப்போது 30 நாடுகளில் சுமார் 100 மெகாவாட் முதல் 1600 மெகாவாட் திறத்தில் இயங்கி வரும் 460 அணுமின் நிலையங்கள் மின்சாரம் உற்பத்தி செய்து, மின்வடங்களில் பரிமாறி வருகின்றன.  இதுவரை உலகில் முப்பெரும் அணுவுலை விபத்துகள் [அமெரிக்காவில் திரிமைல் ஐலண்டு விபத்து, சோவித் ரஷ்யாவில் ...

Read More »

இந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear), கனடா   அமெரிக்கா இந்தியாவில் கட்டும் ஆறு 1000 MWe அணுமின்சக்தி நிலையங்கள்  2020 பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய வெளிநாட்டு அமைச்சு செயலாளர் விஜய் கோகலேயும் அமெரிக்க அகில் நாட்டுப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாடு துணைச் செயலாளர் ஆன்டியா தாம்ஸன் ஆகியோர் கலந்துரையாடலில் வெளியான செய்தி இது. பொதுநல அணுசக்திப் பயன்பாட்டில் இருநாட்டுக் கூட்டுறவு உடன்பாட்டின்படி, ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்களை, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்ட வாஷிங்டன் D.C. இல் ...

Read More »

பல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தருக்கு ஏற்படும் பேரிடர்கள், பெருஞ் செலவுகள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா     உலக நாடுகளில் விளையும் நச்சு வாயுக்களால் நாள் ஒன்றுக்கு நேரும் நிதி இழப்புகள்   1. இந்தியா : விநாடிக்கு நிதி விரையம் : 3.39 லட்ச ரூபாய் [பிப்ரவரி 13, 2020 தேதியில் மேம்படுத்தப் பட்டது].  ஆண்டுக்கு நிதி விரையம் : 10.7 லட்சம் கோடி ரூபாய்.   2.  இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகும்  ஆஸ்த்மா நோயில் வருந்தும் குழந்தைகள் புதிய எண்ணிக்கை:  350,000.   3.  இந்தியாவில் ஒவ்வோர் ...

Read More »

காலவெளிப் பிரபஞ்சத்தை வெகு விரைவாக விரித்து வருவது கருஞ்சக்தியா?

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P. Eng (Nuclear) கனடா பிரபஞ்சத்தின் ஊழ்விதியை வரையப் போவது புரியாத கருஞ்சக்தியா? விரைவாய்க் குடை விரிக்கும் பிரபஞ்சத்தைக் கருஞ்சக்தி உருவாக்குமா அல்லது முறித்து விடுமா? ஒளிமந்தைகளின் ஈர்ப்பு விசைக்கு எதிராய் விலக்கு விசைபோல் கலக்குவது எது ? காலவெளிக் கடல் அலையில் விண்வெளியின் உண்மை நிறம் கருமையா? ஆழியைச் சுற்றிக் கோள்கள் படைக்கும் காலக் குயவனின் களிமண் கட்டிகள் கருமைப் பிண்டமா? இருந்தும், இல்லாத கரும்பிண்டமும் கருஞ்சக்தியும், மெய்யாக இல்லையென பிரபஞ்சத்தின் ஊழ்விதியை வரையப் போவது புரியாத ...

Read More »

இரட்டை விண்மீன் சுற்றமைப்பு நடனத்தில் கால-வெளி அரங்கு இழுப்பு உறுதி ஆயிற்று

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா The white dwarf-pulsar binary system [PSR J1141–6545.] Credit: Mark Myers/ARC Centre of Excellence for Gravitational Wave Discovery Animation depicting a neutron star orbiting a rapidly-spinning white dwarf. The white dwarf’s spin drags the very fabric of space-time around with it, causing the orbit to tumble in space. +++++++++++ Credit: Mark Myers, OzGrav ARC Centre of Excellence. ++++++++++++++++++++ ...

Read More »

2022இல் ககன்யான் – நான்கு விமானிகளுக்கு ரஷ்யாவில் பயிற்சி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான் உளவிச் சென்று நாசா துணைக்கோளுடன் தென் துருவத்தில் ஒளிமறைவுக் குழியில் பனிப் படிவைக் கண்டது ! நீரா அல்லது வாயுவா என்று பாரதமும் நாசாவும் ஆராயும் ! சந்திரனில் சின்னத்தை இறக்கியது இந்திய மூவர்ணக் கொடி ! யந்திரத் திறமை காட்டும் இப்பயணம் பந்தயமில்லை ! விந்தை புரிந்தது இந்தியா ! இரண்டாம் சந்திரயான் விண்சிமிழ் 2019  செப்டம்பரில் முதன்முதல்  இறக்கும்  தளவுளவி தகவல் இணைப்பு இழந்து, சரிந்துபோய் விழுந்தது ...

Read More »

பிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு 5 லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா https://www.cnn.com/2020/01/12/asia/taal-volcano-eruption-philippines-trnd/index.html https://www.cnn.com/2020/01/12/asia/gallery/taal-volcano-eruption/index.html காலக் குயவன் ஆழியில் படைத்த ஞாலத்தின் நடுக் கருவில் அசுர வடிவில் அணுப்பிளவு உலை ஒன்று கணப்பளித்து வருகுது பில்லியன் ஆண்டுகளாய் ! எருப் பொருளை இடையே பெருக்கும் வேகப் பெருக்கி அணு உலை ! உட்கரு உள்ளே கட்டுப் பாடுடன் இயங்கியும் நிறுத்தம் அடைந்தும் விட்டு விட்டு வேலை செய்வது ! வெளிக் கருவிலே கனல் குழம்பைச் சமைத்துக் கொதிக்க வைக்குது ! குவல யத்தைக் குத்தூசி போல் குடைந்து ...

Read More »

2020இல் சந்திரயான் -3: புதிய நிலவுப் பயணத் திட்டம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா India targets New Moon Mission Chandrayaan -3 in 2020 ******************************* http://www.moondaily.com/reports/India_targets_new_moon_mission_in_2020_999.html ++++++++++++++++++++++ 2020 ஆண்டில் இந்தியா மீண்டும் சந்திரயான் – 3 அனுப்பி  நிலாவில் தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது. 2019 செப்டம்பரில் வெற்றிகரமாகச் சந்திரயான் -2 நிலவைச் சுற்றி, தளவுளவியைப் பாதுகாப்பாக இறக்கினாலும், நேராக நிற்க இயலாமல், சரிந்து போய் தளவூர்தி நகர்ந்து ஊர்ந்திட முடியாமல் சிக்கிக் கொண்டது.  மேலும் தளவுளவி மெதுவாக இறங்கி, நிலவைத் தொடும் முன்பே, தகவல் ...

Read More »