நாசாவின் ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய பூமியின் முதல்படம்

NASA’s Artemis 1 Shares First Image of Earth on the Way to the Moon
https://twitter.com/i/status/1592918520337088512
சி. ஜெயபாரதன், கனடா
2022 நவம்பர் 23 இல் நாசா ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய பூமியின் முதல் படம்
காமிரா அனுப்பிய நிலவின் முதல் படத்தில் நெடுங் குழிகள் தெரிந்தன. பாதாளக் குழிகளில் பனிப்பாறைகள் காணப் பட்டன. நிலவில் நீர் உறைந்த நெடும் பாறைகள் இருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது.
ஓரியன் விண்சிமிழ் காமிரா நிலவை நெருங்கி 80 மைல் உயரத்தில் பாதாளக் குழிகளை உற்று நோக்கிப் படம் எடுத்தது. ஆழத்தில் தெரிந்த நீர்ப்பனி உறைவுப் படங்கள் பதிவு செய்யப்பட்டன.
ஓரியன் விண்சிமிழ் நிலவை நோக்கி
அடுத்துத் திட்டமிட்ட ஓரியன் விண்சிமிழ் ஆறு பேர் அமரும் வசதி உடையது. சில நாட்களில் ஓரியன் விண்சிமிழ் நிலவை விட்டு தள்ளி தூரப் பின்சுற்றுப் பாதையில் [Distant Retrograde Orbit] 50,000 மைல் தொலைவில் செல்லும். அப்பாதையில் ஓரியன் ஆறு நாட்கள் சுற்றும். எதிர்காலத்தில் இப்பாதையில் ஒரு நிலா சுற்று நிலையம் அமைக்கத் திட்டம் உள்ளது. நிலவுக்கு வரும் விண்வெளிப் பயண விமானி களுக்குத் தங்க இந்த நிலையம் ஓர் ஓய்வு சிமிழாகப் பயன்படும். ஆறு நாட்கள் சுற்றிய பின், விண்சிமிழ் 2022 டிசம்பர் 11 இறுதியில் புவியீர்ப்பு கடந்து பூமிக்கு மீளும். பசிபிக் கடலில் மூன்று பாராசூட் குடைகள் தாங்க மனிதரற்ற விண்சிமிழ் வந்து இறங்கும். 2025 ஆண்டுக்குள் மீண்டும் ஓரியன் விண்சிமிழ் மூலம் புவி மனிதர் பயணம் செய்து தமது தடம் வைப்பர் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Unmanned Spaceship Orion
As far as the next priority for Artemis missions, NASA says “they will land the first woman and the first person of color on the Moon, paving the way for a long-term lunar presence, and serving as a steppingstone to send astronauts to Mars.”