அறியாயோ சிறுகிளியே (கலித்தாழிசை)
அறியாயோ சிறுகிளியே (கலித்தாழிசை)
நமக்கானது என்பதெலாம் நமைவிட்டு போகாது
நம்மைவிட்டு போவதெலாம் நமக்கென்று ஆகாது
கிடைக்காத எதுவுமெளிதாய் தானாயாய கிடைக்கும்
நிலைக்காதது காலவயதும் கர்மம் வினையில் நடக்கும் அறியாயோ சிறுகிளியே
எதுவும் இல்லை என்றே சொல்வார்
பணமும் பகட்டும் செருக்கும் கண்டார்
அதுவும் அவரை அழிக்கும் ஒருநாள்
பழிக்கும் விதிக்கும் பலியாய் சுருண்டார் அறியாயோ சிறுகிளியே
கதவை மூடிட கண்ணை மூடிட
செய்திடும் தப்புகள் காண்பான்
காலசக்கர மேந்திட புவிபோல்
பால்வெளி பலவும் ஏற்பான் அறியாயோ சிறுகிளியே
கெடுதல் செய்தார் செழிப்பார் தெரியும்
வளரும் அவர்தம் ஆசையும் வெறியும்
நொடியில் முன்வினை புண்ணியம் அழியும்
யாவும் கரைந்த பின்னால் மரியும் அறியாயோ சிறுகிளியே
வரவும் செலவும் கணக்கு எல்லாம் உனக்கும் மட்டுமல்ல
பிறவிகள் நோக்கம் அறியும் இறைவன் கணக்கும் தப்புமல்ல
உறவுகள் பிரிவும் இன்பம் துன்பம் பக்தியும் அதுபோலல்ல
மனமும் தெளிவும் சரணம் அடைந்தால் இறைவன் தூரமல்ல அறியாயோ சிறுகிளியே
பார்க்கும் சுவற்றின் சிற்றெரும்பேநீ
பாரில் முழுதும் உனைக்கண்டால்
கார்க்கும் சிறுகரு கடுகளவேதான்
பாரும் வளிக்கு நம்முன்னால் அறியாயோ சிறுகிளியே
பெற்றவர் அன்பும் கற்றவர் பண்பும் உற்றது பக்திசாலை
விற்றவர் வணிகர் மற்றவர் மடையர் பற்றிடு கடவுளின்காலை அறியாயோ சிறுகிளியே