Author Archives: சக்தி சக்திதாசன்

பிரித்தானியக் குடியரசின் கோமகன் பிலிப் – ஒரு பார்வை

சக்தி சக்திதாசன் இலண்டன் கிரிக்கெட் விளையாட்டில் சதம் அடிப்பதே ஒரு சாதனை எனும்போது வாழ்க்கையில் சதம் அடிப்பவர்களின் சாதனையை என்ன சொல்வது? அப்படியான ஒரு அருமையான சாதனைச் சந்தர்ப்பத்தை ஒரு இரண்டு மாத கால இடைவெளியில் தவற விட்டு விட்டார் எமது இங்கிலாந்து மகாராணியார் இரண்டாவது எலிசபெத் அவர்களின் கணவர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் (Duke Of Edinbrugh Prince Philip). ஆமாம் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது 09.04.2021 அன்று காலை 9 மணிக்கு தனது 99வது வயதில் காலமாகிய கோமகன் பிலிப் ...

Read More »

பெண்களின் வித்தக விந்தைகள்

சக்தி சக்திதாசன் என் இனிய அன்பு உள்ளங்களே ! மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினம். இத்தினத்தில் எனை இவ்வுலகில் ஈன்ற என் அன்னைக்கு, என்னை ஒரு மனிதனாய் உருமாற்றம் செய்ய அவள் செய்த அளப்பரிய தியாகங்களுக்கு, என்னை பண்புடை மனிதனாக வளர உதவிய என் சகோதரிகளுக்காக, சிதைந்து போன என் வாழ்வை தூக்கி நிறுத்தி இன்று என் அனுபவங்களை என் இனிய உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள வழி சமைத்த என் மனைவி, என் உயிர்த்தோழி, என் அன்பு மனைவிக்காக, இன்று என்னோடு ...

Read More »

கடந்து போயினும் மறந்து போகுமோ 2020?

சக்தி சக்திதாசன் லண்டன் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி சென்னையை நோக்கிய எனது பயணத்தின் முக்கிய நோக்கம், என் மனைவியின் நீண்டநாள் கனவு, தன்னுடைய பிறந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்த பின்னால் ஒருமுறையாவது ஆண்டு தொடங்கும் போது தான் பிறந்த மண்ணில் இருக்க வேண்டும் எனும் அவாவிலே எழுந்ததாகும். 28ஆம் திகதி சென்னையைச் சென்றடைந்த நாம் 31ஆம் திகதி எனது மனைவி பிறந்த ஊரான தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் உள்ள கிருஸ்ணாபுரத்தைச் சென்றடைந்து 2020இன் புத்தாண்டுப் பிறப்பை கிருஸ்ணாபுரத்தில் கொண்டாடினோம். ...

Read More »

கொரோனாவைத் தாண்டி

சக்தி சக்திதாசன் லண்டன் தொலைக்காட்சிப் பெட்டியைத் திருப்பினாலும் சரி, வானோலியைத் திருகினாலும் சரி கொரோனா எனும் வார்த்தையைத் தாண்டிச் செல்வது என்பது இப்போ எண்ணிப்பார்க்கவே முடியாத ஒரு சூழலில் நாமனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் வாழும் ஐக்கிய இராச்சியத்தில் கொரோனா வைரஸின் கட்டுப்படுத்துதலுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் தளர்த்தப்படுவதற்கான அறிகுறிகள் எதுவுமே இன்றுவரை தெரியவில்லை. இந்நிலையில் கொரோவைத் தாண்டி என்று எதைப்பற்றிச் சிந்திக்க முடியும் என்று நீங்கள் எண்ணினால் அது நியாயமே! ஆயினும் ஒரு நாளிலோ அன்றி ஒரு வருடத்திலோ நாம் இந்தக் கொரோனா எனும் ...

Read More »

கொரோனாவின் கோரப்பிடியும், இங்கிலாந்தும்

சக்தி சக்திதாசன் லண்டன் அசாத்தியமான நிலை, அசாதாரணமான சூழல் நான்கு மாதங்களுக்கு முன்னால் எண்ணிப்பார்த்திருக்கக் கூட முடியாத ஒரு சூழலில் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து மக்கள். இங்கிலாந்து மட்டுமல்ல முழு உலகுமே என்று கூடச் சொல்லலாம். எதையும், எப்படியும், எப்போதும் சமாளித்து விடுவோம் என்று பொருளாதாரத்திலும், முன்னேற்றத்திலும் முன்னனி வகித்து அனைத்து வசதிகளும் நிறைந்திருக்கும் நாடுகள் எனும் உல்கக்கணிப்பில் இருந்த நாடுகள் பல. பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கி வெளியேவர அந்நியநாட்டு உதவிகளை எதிர்பார்த்து தத்தளித்துக் கொண்டிருந்த நாடுகள் பல கலந்து நிறைந்த உலகினை ஒரு கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்க்கிருமி இன்று தன்னிலை உணரப் ...

Read More »

அன்பின் உறவே

சக்தி சக்திதாசன் நான் இங்கிலாந்திலே நீயோ தாயகத்திலே வசதிகள் நிறைந்தது இதுவென்றும் வசதிகள் வளர்ந்திடும் நாடு அதுவென்றும் வாயோயாது உரைத்திடும் பலருண்டு ஆனால் இன்றோ! உனக்கும் ஊரடங்கு எனக்கும் ஊரடங்கு வசதிகள் நிறைந்திடினும் வசதிகள் வளர்ந்திடினும் வேறுபாடு தெரிந்தா கொரோனா நுழைந்தது ? எனக்கொரு மதம், உனக்கொரு மதம் எனக்கொரு மொழி, உனக்கொரு மொழி நானொரு நிறம், நீயொரு நிறம் நீயொரு ஜாதி, நானோரு ஜாதியென எத்தனை, எத்தனை பேதமை பார்த்து வக்கிரமாக பற்பல உயிர் கொய்தோம் அகிலம் முழுவதும் நிறைந்திட்ட மாந்தர் அனவரும் ...

Read More »

இன்றைய உலகும் மகளிர் பலமும்

சக்தி சக்திதாசன், லண்டன் 2020 சர்வதேச மகளிர் தினம் இன்று. அன்றைய மகாகவி பாரதி காலத்திலிருந்து இன்றைய உலகம் எத்தனையோ மாற்றங்களைக் கண்டுவிட்டது. இம்மாற்றங்களு உள்ளாகியிருக்கும் மனித இனமும் அதனூடு பயணித்து, தம்மைப் பலவித மாற்றங்களுக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும் என்பதே சரியான எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் மனத்தளவில் மானிட சமூகம் அத்தனை மாற்றங்களையும் சரியான வகையில் உள்வாங்கியிருக்கிறதா? சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டியது அவசியமா? எனும் விவாதம் பல மேடைகளில் நடைபெறுகின்றது. இவ்விவாதத்துக்குச் சார்பான வாதமும் பல வகைகளில் முன்வைக்கப்படுகின்றது. பெண்களுக்கென ஒரு தினத்தைக் கொண்டாடுவது அவர்களை ஆண்களின்றும் பிரித்து வைக்கும் ஒரு செயலாக அமைந்துவிடாதா? ஆணும் பெண்ணும் சமமான பலம் கொண்டவர்கள் ...

Read More »

வெள்ளை இராச்சியத்தில் ஒரு கறுப்புப் புயல்

சக்தி சக்திதாசன் “இங்கிலாந்து”, “லண்டன்”, “ஐக்கிய இராச்சியம்” என்றதுமே பெரும்பான்மையான உலக மக்களின் மனங்களில் முன்னிற்பது ஐக்கிய இராச்சியம் அன்றி பெரிய பிரித்தானியா என்றழைக்கப்பட்ட நாட்டின் இராஜ குடும்பமே! இராஜ குடும்பத்தை அதாவது நாட்டின் கெளரவத் தலைவராக ஒரு இராஜாவையோ அன்றி ஒரு ராணியையோ கொண்டிருக்கும் ஒரு சில உலக நாடுகளில், முன்னணியில் இருப்பது ஐக்கிய இராச்சியம் என்றால் அது மிகையில்லை. எனது 45 வருட கால ஐக்கிய இராச்சிய வாழ்க்கை அனுபவத்தில் நான் கண்ட உண்மை, கலாச்சார விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாதுகாத்து ...

Read More »

பாதை வகுத்தபின் பயந்தென்ன லாபம் ?

சக்தி சக்திதாசன் லண்டன் ஐக்கிய இராச்சியம், வரும் ஐந்து வருட காலத்துக்கு தனது பயணத்தின் பாதையை நிர்ணயித்து விட்டது . ஆமாம் வருகிறது! வருகிறது! என்று பயமுறுத்திக் கொண்டிருந்த ஒரு நிகழ்வு வந்து எம்மைக் கடந்து சென்ற பின்பு அது போன பாதையைப் பார்த்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். ஐக்கிய இராச்சியத்தின் அரசியல்களத்தை ஆட்டிக்கொண்டிருந்த தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்தேறி பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களின் கட்சி அமோகமான வெற்றியை ஈட்டியுள்ளது. 1986ம் ஆண்டுக்குப் பின்னால் கன்சர்வேடிவ் கட்சி பெற்ற அதி பெரும்பான்மை வாக்குகள் இதுவென்று சரித்திர ஏடுகள் ...

Read More »

மாறுமோ இந்த நிலை?

சக்தி சக்திதாசன் வருமா? வராதா? வருமா? வராதா? எனும் கேள்வி இங்கிலாந்து மக்கள் அனைவரின் மனங்களிலும் இழையோடிக்கொண்டிருந்தது. அக்கேள்வியின் விடை பீரிட்டுக்கொண்டு வெளிவந்துவிட்டது. எதை நான் சொல்ல வருகிறேன் என்று எண்ணுகிறீர்களா? கடந்த மூன்றரை வருடங்களாக இங்கிலாந்து அரசியல் களத்தில் நர்த்தனமாடிக் கொண்டிருந்த “பிரெக்ஸிட்” எனும் பூதாகரமான பிரச்சனையின் தீர்வு ஒரு பொதுத்தேர்தலினால்தான் தீர்க்கப்பட முடியும் எனும் நிலையை எட்டிய பின்பு அந்தப் பொதுத்தேர்தல் வருமா? வராதா? எனும் கேள்வியே ஊசலாடிக் கொண்டிருந்தது. புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட போரிஸ் ஜான்சன், இந்த பிரெக்ஸிட் எனும் பிரச்சனையை அக்டோபர் மாதம் 31ஆம் திகதி முடித்து விடுவேன் ...

Read More »

நதியினில் வெள்ளம்! கரையினில் நெருப்பு!

சக்தி சக்திதாசன்  (இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 302) அக்டோபர் 31! இங்கிலாந்து அரசியல் காலண்டரில், இதுவும் முக்கியமான நாளாக ஐக்கிய இராச்சிய மக்கள் மத்தியில் மட்டும் அல்ல, ஐரோப்பிய ஒன்றிய நாட்டு மக்களின் மத்தியில் மட்டும் அல்ல, உலக மக்கள் அனவரினதும் மனங்களிலேயும் அழுத்தமாகப் பதிந்துவிட்ட தேதி. ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் எனும் ஒரு கூட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயலும் தேதி . சுதந்திரமாக, தமது இறைமையைத் தமது கைகளிலே கொண்டுள்ள நாடாக வாழ வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் மட்டுமே முடியும் என்று வாக்களித்தோரில் பெரும்பான்மையான ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (301)

-சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். சரித்திர நிகழ்வுகளின் முக்கியமான திருப்பங்கள் நிகழும்போது அதற்குச் சாட்சியாக இருப்பது, ஒரு அபூர்வமான சந்தர்ப்பம். இது மறுக்கப்பட முடியாத உண்மை. இன்று நான் உங்களுடன் மனந்திறந்து கொண்டிருக்கும் இம்மடல் எனது 301 வது மடலாகும். என் வாழ்வின் பெரும்பான்மையான காலப்பகுதியை இங்கிலாந்து எனும் இந்நாட்டினிலே கழித்து விட்டேன் என்பதுவே உண்மை. மாணவனாக இங்கு வாழ்வைத் தொடங்கிய நான் இன்று ஒரு பேரக்குழந்தையைக் கண்டு விட்ட நிலையிலே முதுமை எனும் வாயிலினுள் கால்கள் பதித்து நிற்கிறேன். இங்கிலாந்திலிருந்து எனது ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (300)

-சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்கள். காலவோட்டம் தமக்குள் எத்தனையோ நிகழ்வுகளைப் புதைத்துக் கொண்டு செல்கின்றன. அவற்றை வெறும் நிகழ்வுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களாக மட்டும் நாமிருந்து விட முடிகிறதா? இல்லையே! புதையும் நிகழ்வுகளுக்குள் எமது வாழ்வினைக் கட்டுப்படுத்தும் வல்லமையும் அடங்குகிறதே ! சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் நிலையை நிர்ணயிக்கும் பல முடிவுகள் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் அவர்களின் பெயரால் எடுக்கப்படுகிறது. இதனால் பல சமயங்களில் விரும்பாமலே பார்வையாளர்களாக ஆக்கப்பட்டு விடுகிறோம். இதற்கு நியாயமாக ஜனநாயகம் எனும் முத்திரையும் குத்தப்படுகிறது. இது ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (299

சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே! அன்பான வணக்கங்களைத் தாங்கி வருகிறது எந்தன் அடுத்த மடல். உள்ளத்தின் கதவுகளைத் திறந்து வெள்ளமாய் இருக்கும் எண்ணங்களின் சிலதுகள்களை அள்ளித் தெளிப்பதில் ஆனந்தமடைகிறேன். கடுகதி வேகத்தில் காற்றைப்போல் பறந்து செல்கிறது காலம். இந்தக் காலக் காற்றினுள் அகப்பட்ட சருகுகளாக அடித்துச் செலப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அத்தகைய சூறாவளிக்குள் சிக்கப்பட்ட நிலையிலும், வசதியான ஒரு வாழ்வைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உலகின் ஒரு பக்க மக்களும், அன்றாடத் தேவைகளையே தீர்க்க முடியாமல் அல்லலுறும் உலகின் மற்றொரு பகுதி மக்களும் வாழ்கின்ற நிலை. இந்நிலையில் இவ்விரு வகையான மக்களின் ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)

சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்களுடன் இதோ அடுத்த மடலில் உங்களோடு உளக் கருத்தை பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். ஐக்கிய இராச்சியம், அதாவது இங்கிலாந்து, இன்று ஒரு முக்கியமான திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கிறது. எமது அடுத்த பிரதமர் யார்? எனும் கேள்வி அனைத்து மக்களின் மனங்களிலேயும் தொங்கிக் கொண்டிருந்தாலும் அதற்கான விடை, பெரிதான ஒரு புதிராக ஒன்றும் இல்லை. பொதுவாகப் பொதுத்தேர்தல் நடைபெறும் போதுதான் இந்தக் கேள்விக்குச் சரியான பதில், கொஞ்சம் புதிராக இருக்கும். இப்போது இது ஒன்றும் புதிர் இல்லையே! ...

Read More »