இமிகிறேஷன் ! இமிகிறேஷன் ! இமிகிறேஷன்
சக்தி சக்திதாசன்
இமிகிறேஷன் அது இன்றைய இங்கிலாந்தின் அரசியல் அரங்கில் ஒரு மையக் கோள்
இது எங்கே ஆரம்பித்தது ?
அண்மை வரலாற்றினை எடுத்துப் பார்த்தால்,
இமிகிறேஷன் என்பது இங்கிலாந்தின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் நீண்ட காலமாகவே முக்கிய பங்கு வகித்துள்ளது.
1948-ம் ஆண்டு British Nationality Act மூலம் Commonwealth நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் பிரிட்டிஷ் குடிமக்களாகக் கருதப்பட்டனர்.
1960களில் இங்கிலாந்தில் கட்டிடம், மற்றும் பஸ் , இரயில், லொறி ஓட்டுனர் போன்ற தொழிளார்களை மேற்கிந்திய தீவுகளிலிருந்து வின்றஷ்(Windrush) எனும் கப்பல் மூலம் இங்கிலாந்து அரசாங்கம் இறக்குமதி செய்தது.
அந்தத் தலைமுறை வந்ததிலிருந்து, இமிகிறேஷன் தொடர்பான அரசியல் விவாதங்கள் தீவிரமடைந்தன.
1970களில் கன்சர்வேடிவ் (Conservative) கட்சி கட்டுப்பாடுகளை வலுப்படுத்தத் தொடங்கியது.
1990களில் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) உறுப்பினராக இருந்ததால் EU குடிமக்கள் சுதந்திரமாக யூ கே விற்கு வர முடிந்தது.
பிறேக்ஸிட் (Brexit)க்கு பின், இமிகிறேஷன் மீண்டும் ஒரு தேசியக் கோளாக மாறியது.
இன்றைய சூழ்நிலை ஏன் இமிகிறேஷன் முக்கிய அரசியல் பேசுபொருளாக மாறியது?
பொதுமக்கள் உணர்வு ஒரு காரணம் எனச் சொல்லலாம்
யூ கவு (YouGov) மற்றும் எக்கனொமிஸ்ட் (Economist) கருத்துக்கணிப்புகள் படி, பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் இமிகிறேஷனை முக்கிய பிரச்சனையாகக் கருதுகின்றனர்.
சிறிய படகுகள் (Small Boats Crisis): ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாக வரும் அகதிகள் பற்றிய செய்திகள் மக்கள் மனதில் பாதுகாப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாடு குறித்த கவலையை ஏற்படுத்துகின்றன.
ரீபோர்ம் யூ.கே (Reform UK) கட்சியின் எழுச்சி இமிகிறேஷன் அதாவது வெளிநாட்டவர் குடியேற்றத்தை மையப்படுத்தியே ஏற்பட்டது என்பதே உண்மை.
நைஜல் பராஜ் (Nigel Farage) தலைமையிலான ரீபோர்ம் (Reform UK) கட்சி, இமிகிறேஷனை மையக் கோளாக வைத்து தேர்தலில் வெற்றிபெற்று மற்ற கட்சிகளையும் அதே கோளில் பேச வைக்கிறது.
சமூக சேவைகள் மீது அழுத்தம் ஏற்பட தேசிய சுகாதார சேவை (NHS), வீடுகள், பள்ளிகள் போன்ற சேவைகள் அதிக குடியேற்றத்தால் சிரமப்படுகின்றன என்பது கன்சர்வேடிவ் (Conservative) கட்சியின் வாதம்.
அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் என்ன என்பதை நோக்கின்,
கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party)
கன்சர்வேடிவ் (Conservative) கட்சி, இமிகிறேஷனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
அவர்கள் “மொத்த வெளிநாட்டவர் குடியேற்றம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்” என்ற கொள்கையை முன்வைக்கின்றனர்.
நிரந்தர வதிவிட உரிமை(Indefinite Leave to Remain) பெறும் காலம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
குடிமகனாக மாறும் காலம் 1 → 5 ஆண்டுகள் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு நன்மைகள் பெறும் குடியேற்றவர்களுக்கு தங்க அனுமதி வழங்கப்படுவதில்லை.
இவர்கள் பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் தேசிய அடையாளத்தை முன்னிறுத்தும் கோட்பாட்டில் செயல்படுகின்றனர்.
தொழிற் கட்சி (Labour Party)
தொழிற் கட்சி, “நடுநிலையான ஆனால் கட்டுப்பாடான குடியேற்றம்” என்ற சமநிலை கொள்கையை பின்பற்றுகிறது.
ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாக வரும் சிறிய படகுகள் மூலம் வருவோரை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரான்ஸ் உடன் “உள் வரும் ஒருவருக்கு ஒருவர் திருப்பி அனுப்பப் படுவர்” என்ற ஒப்பந்தம் மூலம் அகதிகள் வருகையை கட்டுப்படுத்த முயற்சி.
அகதிகள் முறை விரைவாக செயல்படுத்தும் திட்டம் உள்ளது.
இவர்கள் மனித உரிமைகள் மற்றும் நடைமுறை அரசியல் இடையே சமநிலையை நோக்கி நகர்கின்றனர்.
ரீபோர்ம் யூ.கே (Reform UK)
ரீபோர்ம் யூ.கே (Reform UK) கட்சி, கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
– “அதிகாரபூர்வமற்ற குடியேற்றவாசிகள் முற்றாகத் தடை” என்பது இவர்களின் அடிப்படைத் தத்துவம்.
தொகையாக வெளியேற்றம் (Mass deportations), தடை முகாம்கள் (detention camps) போன்ற திட்டங்களை முன்வைக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் அகதிகள் திட்டம் ( UN Refugee Convention ) இல் இருந்து விலகும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது.
நைஜல் வராஜ் (Nigel Farage) தலைமையில், ட்ரம்ப் (Trump-style) பேச்சு முறையை பின்பற்றி, இமிகிறேஷனை மையக் கோளாக மாற்றியுள்ளனர்.
இவர்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை முன்னிறுத்துகின்றனர்.
லிபரல் டெமகிரட்ஸ் கட்சி (Liberal Democrats)
லிபரல் டெமகிரட்ஸ் (Liberal Democrats) கட்சி, அனுதாபத்துடன் கூடிய நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய குடியேற்றம் (Compassionate and practical immigration) என்ற கொள்கையை பின்பற்றுகிறது.
அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் கொள்கையை ஆதரிக்கின்றனர்.
ரீபோர்ம் யூ.கேயின் கடுமையான திட்டங்களை விமர்சிக்கின்றனர்.
மனிதநேயம் மற்றும் நடைமுறை தீர்வுகள் ஆகியவற்றை இணைக்கும் முயற்சி.
இவர்கள் அகதிகளின் உரிமைகளை மதிக்கும் நாகரிகப் பார்வையை கொண்டுள்ளனர்.
கிறீன் கட்சி – Green Party
கிறீன் கட்சி Green Party, மனித உரிமைகள் மற்றும் ஆதரவான நடைமுறை (“Human rights and inclusion”) என்ற தத்துவத்தில் செயல்படுகிறது.
சக் போலன்ஸ்கி (Zack Polanski) போன்ற சூழல் பிரபல்ய (eco-populists) கட்சி நிலைப்பாட்டை வலுப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
சிறு படகுகள் (Small boats) மூல அகதிகள் வரவு பற்றிய தேசிய அரசியல் மாயையை (obsession) விமர்சிக்கின்றனர்.
அகதிகள் மற்றும் குடியேற்றவர்களின் மனித உரிமைகளை முன்னிறுத்துகின்றனர்.
இவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை இணைக்கும் பார்வையை கொண்டுள்ளனர்.
எதிர்மறை மற்றும் ஆதரவு வாதங்களை எடுத்துப் பார்க்க விழைந்தால்,
ஆதரவு வாதங்கள்
பொருளாதார நன்மைகள் என வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, பல்துறை திறமைகள்.
பல்வேறு கலாச்சாரங்கள் சமூக ஒற்றுமை, கலாச்சார பரிமாற்றம்.
மனித உரிமைகளாக அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நாகரிகப் பொறுப்பு.
எதிர்மறை வாதங்களாக
சமூக சேவைகள் மீது அழுத்தங்களாக என்.எச்.எஸ்(NHS) வீடுகள், கல்வி என்பனவற்றின் மீதான தாக்கங்கள்.
பாதுகாப்பு பற்றிய கவலை, சட்டவிரோத குடியேற்றம், குற்றச்செயல்கள் எனனவற்றின் அதிகரிப்பு.
இங்கிலாந்து நாட்டு மக்களின் அடையாள இழப்பு
புதுமுகங்கள் நிறைந்த தீவு (Island of strangers) என்ற பிரதமர் ஸ்டாமரின் (Starmer) அண்மைய பேச்சு, இனோக் பவல் ( Enoch Powell) எனும் முன்னாள் இனவேற்றுமையை முன்னிறுத்திய அரசியலை முன்னெடுத்த சர்ச்சைக்குரிய அரசியல்வாதியின் இரத்த ஆறு (Rivers of Blood) பேச்சை நினைவுபடுத்துகிறது.
இதனால் எழுப்பப்படும் சிந்திக்க வைக்கும் கேள்வி
இமிகிறேஷன் தொடர்பான அரசியல் விவாதங்கள் உணர்வுப்பூர்வமானவை, ஆனால் உண்மை தரவுகள் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் சிந்திக்க வேண்டியவை.
இங்கிலாந்து, அதன் வரலாற்று அடையாளத்தையும், நாகரிகப் பொறுப்பையும், பொருளாதார தேவைகளையும் சமநிலைப்படுத்த முடியுமா?
வாசகர்களுக்கான கேள்வியாக
“இங்கிலாந்து, ஒரு பாதுகாப்பான, நாகரிகமான நாடாகவும், அதேசமயம் அதன் எல்லைகளை கட்டுப்படுத்தும் நாடாகவும் இரட்டை அடையாளத்தை ஏற்க தயாரா?”
எனும் கேள்வியை முன்வைத்து இக்கட்டுரை நிறைவுறுகிறது.
