Search Results for: என் பார்வையில் கண்ணதாசன்

என் பார்வையில் கண்ணதாசன்!

அன்பு நண்பர்களுக்கு காவிரிமைந்தனின் கனிவான வணக்கம்! மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக முதல் கட்டுரைப் போட்டியாக வல்லமையில் நாங்கள் நடத்திய “என் பார்வையில் கண்ணதாசன்” கட்டுரைகள் 35 வரப்பெற்றதும் அவற்றை பேராசிரியர் வ.வே.சுப்பிரமணியன் அவர்கள் நடுவராக இருந்து தேர்வு தந்தமையும் நினைவிருக்கும் என்று கருதுகிறேன். அக்கட்டுரைகளை அடுத்து.. அவற்றை இன்னும் வளர்த்து.. இன்னபிற எழுத்தாளர்கள்.. படைப்பாளர்களிடமிருந்து பெற்று நூறு கட்டுரைகள் என்கிற அளவில்.. ஒவ்வொரு கட்டுரைக்கும் காவிரிமைந்தன் எனது பின்னூட்டம் வரையப்பட்டு… இதோ.. “என் பார்வையில் கண்ணதாசன்” என்கிற நூலாக வெளியிடப்பட இருக்கிறது.. கவியரசு கண்ணதாசன் ...

Read More »

என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி முடிவுகள்!

அன்பு நண்பர்களே, இதோ நாமெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த, நடுவர் திரு வ.வே.சு. அவர்கள் வழங்கியுள்ள  “என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி” முடிவுகள் இதோ  போட்டியில் உற்சாகமாக பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். போட்டியை முன்மொழிந்துள்ள கவிஞர் திரு காவிரி மைந்தன், தம்முடைய இடைவிடாத பணிச்சுமையிலும், நடுவர் பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று, வல்லமையுடன் தம் தீர்ப்பை சிறந்த முறையில் வழங்கியுள்ள கவிஞர் திரு வ.வே.சுப்பிரமணியம் அவர்களுக்கும் மற்றும் அனைத்து எழுத்தாளர்களையும், ஊக்குவித்தும், உற்சாகப்படுத்தியும், மென்மேலும் சிறப்பாக காவியம் படைக்க உந்து சக்தியாகத் ...

Read More »

என் பார்வையில் கண்ணதாசன்

–ப.கண்ணன்சேகர்.  “கவியரசர் பார்வையில் மகளிர்”   பாரதிக்கு பின் வந்த பார்போற்றும் கவிஞர் நமது கவியரசு கண்ணதாசன்தான். இவர் எழுத்து வடிவில் தமிழ் சமுதயாத்திற்கு எண்ணற்ற காவியங்களையும் கவிதைகளையும் படைத்திருக்கிறார். இவை அனைத்தும் தலைமுறைகளைத் தாண்டி தமிழ்ச்சமுதாயத்திற்கு  பயன்படும் கல்வெட்டுக்களாக திகழ்கின்றன. இவர் பேனா தொடாத துறைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு எழுத்துலகில் கோலோச்சியுள்ளார். குடும்பத்தில் ஒவ்வொரு உறவுக்கும் இவரின் வழிகாட்டுதல்கள் எல்லாத் தலைமுறையும் ஏற்றுக்கொள்ளும் முறையாக அமைந்துள்ளது. குறிப்பாக  மகளிர்காக இவரின் படைப்புக்கள் சிறப்பாகவே இருப்பதை அறிய முடிகிறது.பெண்மை, பக்தி, ஆளுமை, ...

Read More »

என் பார்வையில் கண்ணதாசன்

—பி.எஸ்.டி. பிரசாத் என் பார்வையில் கண்ணதாசன்   “வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மன‌தில் நிற்பவர் யார் மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்” என்று பாட்டாலே வீரம் ஊட்டிய கவியரசு கண்ணதாசன், இன்று சரித்திரமாகி நிற்பதற்கான முக்கியமான காரணம் என நான் எண்ணுவது, பல்லாயிரம் தமிழ் ஆர்வலர்களுக்கு, கவிதை மற்றும் பாடல் அமைப்பு செய்வதற்கான இலக்கண எடுத்துக்காட்டுக்களாக விளங்கிய அவரது திரைப் பட பாடல் வரிகள்தான். அவரது பாடல் வரிகளை ரசித்து, நாமும் முயலலாம் எனக் கவிதை எழுத ...

Read More »

‘என் பார்வையில் கண்ணதாசன்’

– தென்றல் கமால் – பாவையைக் காதலிக்கிற வயது வந்த போது பாவையை விட்டு என்னைப் “பா“வைக் காதலிக்க வைத்தவன் கண்ணதாசன். கண்ணதாசன் என்ற களஞ்சியத்தில் நான் எடுத்துக் கொண்ட கவிதை இது ஒன்றே என் கட்டுரைக்கு இது நன்றே ! ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தையென்ன தேடிய செல்வமென்ன திரண்டதோர் சுற்றமென்ன கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் ...

Read More »

என் பார்வையில் கண்ணதாசன்

–மஸ்கட். மு. பஷீர். என் பார்வையில் கண்ணதாசன் கவிஞன் என்பவன், தன்படைப்புக்கள் பேரறிவாளர் விருதுகள் பலபெற்று பெட்டகத்துள் அடைபட்டு, சட்டத்துக்குள்  வரம் பெற்று அலங்காரம் பெறுவதில் அல்ல வெற்றிபெறுகிறான். பட்டமும், பத்திரமும், பதக்கமும், பணமுடிப்பும், பளிங்கு விளக்குகள் மேடையில் பெறும் பரிசளிப்பும் என்றெல்லாம்  ஒரு குறுகிய வட்டத்துள் அடைபடும் கவிஞனாக என் பார்வையில் கவியரசர் கண்ணதாசனைக் காண முடியவில்லை. அந்தக் கவிவெளிச்சத்தை  சட்டங்களுக்குள்ளோ, குறுகிய கவிவட்டதுக்குள்ளோ  கட்டிப்பபோட என்னால் முடியவில்லை. மாறாக மக்கள் இதயக் கூட்டில் மட்டும் அடையும் பறவையாய் , தினம் தினம் ...

Read More »

என் பார்வையில் கண்ணதாசன்

விசாலம் என் பார்வையில் கண்ணதாசன் . {கற்பனையில் உண்மை}  இரவு மணி எட்டு. நான் என் வேலைகளை முடித்துக்கொண்டு ‘அப்பாடி ‘ என்று அமர்ந்தேன்..என் மனம் “ என் பர்வையில் கண்ணதாசன் என் பார்வையில் கண்ணதாசன்” என்று ஜபம் செய்தது..இரு வாரங்களாக இந்த ஜபம் தான் . அது அப்படியே ஆழ் மனதில் போய் அமர்ந்து கொண்டது .சுமார் ஒன்பது மணி இருக்கும் வாசல் கதவு திறந்தாற்போன்று ஒரு உணர்வு .தலை நிமிர்ந்து பார்த்தேன் . ஆ என்னையே என்னால் நம்ப முடியவில்லை. என் ...

Read More »

என் பார்வையில் கண்ணதாசன்

–பி.தமிழ்முகில் நீலமேகம் பொதுவாக, திரையிசைப் பாடல்கள் காலத்தால் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. இன்று நாம் முணுமுணுக்கும் இக்காலத்துத் திரையிசைப் பாடல்கள், நாளை நம் நினைவில் நிற்குமா என்று கேட்டால், நிச்சயமாக இருக்க முடியாது என்று அடித்துச் சொல்லலாம். இன்றைய பாடல்கள் காளான்கள் போன்றவை. அவற்றிற்கான ஆயுட்காலம் மிகக் குறைவு. கருத்தாழம் மிக்க பாடல்களே காலமெலாம் நிலைத்து நிற்கும். காலத்தால் அழியாத அற்புதப் படைப்புகள் பலவற்றை நமக்குப் பெரும் பொக்கிஷங்களாகக் கொடுத்தவர் கவிஞர் கண்ணதாசன் என்பது நிதர்சனமான உண்மை. காதல் ஆயினும் சரி, தத்துவமாயினும் ...

Read More »

என் பார்வையில் கண்ணதாசன்

-பாலகணேஷ் கண்ணதாசனை என் பார்வையில் எழுதுவது என்றதுமே பலத்த யோசனை சிந்தையை ஆட்டி வைத்தது. நண்பனாய், அண்ணனாய், ஆசானாய், ஞானியாய் பலப்பல முகம் காட்டி வாழ்வில் பங்குபெற்றவரான கண்ணதாசனின் எந்த முகத்தைச் சொல்வது நான்? சற்றே ஆழ்ந்து யோசித்தால் நான் கண்ணதாசனைக் கண்ணதாசனாகவே அதிகம் ரசித்திருக்கிறேன். அதாவது கண்ணனுக்கு அவர் தாசனாக இருந்த காரணத்தாலேயே எனக்கு அவரைப் பிடிக்கும். பாரதியார் கண்ணனை அம்மாவாக, தோழியாக, காதலியாக, சேவகனாக இப்படிப் பலப்பல ரூபங்களில் கண்டு நெகிழ்ந்து கவிதைகளைப் பொழிந்தது போலக் கண்ணதாசனும் கண்ணனை நினைந்து நெகிழ்ந்து ...

Read More »

என் பார்வையில் கண்ணதாசன்

–எஸ். கிருஷ்ணசாமி என் பார்வையில் கண்ணதாசன் நம் செந்தமிழ் நாட்டில் இருபதாம் நுற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற கவிஞர்களில் தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவர்கள் மூவர். அவர்கள் தான் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசு கண்ணதாசன். அந்த மூவரின் படைப்புக்களில் நான் அதிகமாக படித்தது கவியரசு கண்ணதாசன் படைப்புக்களைத்தான். என் பார்வையில் கவியரசு கண்ணதாசன் மிகப்பெரிய கவிஞராக காட்சியளிக்கிறார். கவிஞர், பாடலாசிரியர், வசனகர்த்தா, படத்தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி, ஆன்மீகப் பேச்சாளர், இலக்கியவாதி என்று பன்முகம் கொண்ட பண்பட்ட மனிதராக நான் கவியரசு கண்ணதாசனை ...

Read More »

என் பார்வையில் கண்ணதாசன் – சத்தியமணி

முன்னுரை ஓராயிரம் பார்வையிலே என் பார்வையை நீயறிவாய்  , என் பார்வையில் உன்வடிவம்  ஓர் மாபெரும் கவியரங்கம். முத்தய்யா, உன்னை யொன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்  என்னைக் கட்டுரை  எழுதச் சொன்னால் ஒரு நாள்  போதுமா ஒரு மாதம் தான் போதுமா? எத்தனைப் படைப்புகள் …அப்பப்பா ! சின்ன கண்ணன் புன்னகையில் என்னத்தான் ரகசியமோ ? தட்டு தடுமாறும் எனைப் பார்த்து கேட்கிறீர் மயக்கமென்ன இன்னும் மெளனமென்ன என்று கேளிக்கையுடன்.? ஆயிரம் மலர்களே மலருங்கள் ஆயிரம் வார்த்தைகள் பகிருங்கள் கவியரசே என்றே தொடர்கிறேன். ...

Read More »

என் பார்வையில் கண்ணதாசன்

–ரா.பார்த்தசாரதி.   என் பார்வையில் கண்ணதாசன்   கவியரசு கண்ணதாசன், 1974ஆம் ஆண்டு , பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ் பேரவைக்கு தலைமை தாங்க வந்தார். வந்தவர், சற்று நேரம் கழித்து வந்தமையால், எனக்கென்று ஓர் தனிமதம், அதுவே தாமதம்.என்று கூறி கவிதை பாங்குடன் கூறி, கைதட்டல் பெற்றதை நினைத்துப்பார்த்தேன். அன்று, கண்ணதாசன், நா.பார்த்தசாரதி ( தீபம் இதழ் ) மற்றும் புரட்சி எழுத்தாளர் ஜெயகாந்தன் மூவரும் ஒரே மேடையில் பேசினார்கள். எண்ணிப் பாருங்கள் எப்படியிருக்கும் என்று ! அரங்கமே களை கட்டியது. இடை, இடையே, ...

Read More »

என் பார்வையில் கண்ணதாசன்

-எஸ். பழனிச்சாமி என் பார்வையில் கண்ணதாசன் என்ற தலைப்பைப் பார்த்ததுமே ஓராயிரம் பாடல்கள் மனதில் வந்து போனது. எழுபதுகளில் நான் பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே, எப்படி கண்ணதாசனால் ஈர்க்கப் பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை என்னைக் கவர்ந்த எல்லாச் சினிமாப் பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை என்று செய்தித்தாள்களில் படித்துத் தெரிந்து கொண்டதனால் இருக்கலாம். அப்போது கிராமங்களில்கூடப் பிரபலமாக இருந்த இலங்கை வானொலி நிகழ்ச்சிகளும், அதில் தன்னுடைய குரல் வித்தையினால் பல்லாயிரம் மனிதர்களைக் கட்டிப் போட்டிருந்த கே. எஸ். ராஜா என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் ...

Read More »

என் பார்வையில் கண்ணதாசன்

–மேகலா இராமமூர்த்தி கண்ணதாசன் என்ற பெயரைக் கேட்டதுமே காலத்தால் அழியாத அவருடைய காவியப் பாடல்களும், அவற்றின் இலக்கிய நயமும், கலங்கரை விளக்காகத் திகழ்ந்துவரும் அவருடைய தத்துவப் பாடல்களுமே பலருடைய நினைவிற்கும், கவனத்திற்கும் வருபவை. ஆயினும் பன்முகத் திறனும், பரந்துபட்ட ஆற்றலும் கொண்ட அம்மாமேதை திரைப்படத்துறை அன்றியும் வேறுபல் தளங்களிலும், களங்களிலும் செயலாற்றி வெற்றி கண்டவர்; தனி முத்திரை பதித்தவர். அவ்வகையில், இன்றைய தலைமுறையினர் அதிகம் அறிந்திராத அவருடைய பத்திரிகைத்துறை அனுபவங்கள், அரசியல் அனுபவங்கள், பத்திரிகைவழி அவராற்றிய தமிழ்த்தொண்டு ஆகியவை குறித்துப் பகிர்ந்துகொள்ள விழைந்ததன் விளைவே ...

Read More »

என் பார்வையில் கண்ணதாசன்

–முகவை முத்து.   என் பார்வையில் கண்ணதாசன்     மனிதப் பிறப்பின் மகத்துவம் சிலருக்கு நிரந்தரமானவை!! அவ்வரிசையில் நான் கண்ட மகத்துவத்தின் “சுடர் ஒளியாய்”  திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள்; எண்ணற்ற எழுத்தாளர்கள் இருந்தபோதிலும் கவிதை உலகில் ஒரு “சூப்பர் ஸ்டார்” என்றே அவரைச் சொல்லலாம். புராணங்களாக இருக்கட்டும் இதிகாசங்களாக இருக்கட்டும் அத்தனை  நூட்களையும் கற்று அதற்கும் சில விளக்க உரைகளும் எழுதியவர். இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு திறமை இருக்கும் என்பார்கள். ஆனால் இவருக்கு ஒரு  திறமை இருந்ததாக தெரியவில்லை,  ...

Read More »