Author: ரா. பார்த்த சாரதி

  • தும்பிக்கையானே நம்பிக்கை

    ரா.பார்த்தசாரதி 

    வேழமுகத்தோடு    பிறந்த  இறைவனே
    முழுமுதற் கடவுளாய்  காட்சி அளிப்பவனே
    ஔவைக்கு  காட்சி தந்த  விநாயகனே
    மூலைமுடுக்கு தெருவினில் குடிகொண்டவனே !

    கல்விக்கும், ஞானத்திற்கும் ஞான முதல்வனே
    சிவனின் மூத்த மகனே, வேலவனுக்கு  மூத்தவனே
    சிவபார்வதியின்  அருமை  புதல்வனே
    முதன்முதலில் அருந்ததியிடம் மோதகம் பெற்றவனே !

    கஜமுகாசுரனை  அழித்து கணேசா என பெயர்பெற்றவனே
    முருகனுக்கு காட்சியளித்து, திருமணம் செய்வித்தவனே
    அசுரனை அழித்து எலியாக வாகனம் அமைத்துக்கொண்டவனே
    சங்கடம் கொடுக்கும் சனிபகவானை அடக்கி ஆண்டவனே !

    மோதகப் பிரியனே, பாம்பினை இடுப்பில் அணிந்தவனே
    மஹாபாரதம் எழுத  வியாசருக்கு  உதவி செய்தவனே

    காட்சிக்கு  எளியவனே எல்லோராலும் கும்பிடப்படுபவனே

    தும்பிக்கையானே நம்பிக்கையுடன் நன்மை தருபவனே !

     

    Share
  • தாயும் குழந்தையும்

    மண்ணுக்கு மரம் பாரமாகுமா, 
    மரத்திற்கு  கிளை பாரமாகுமா, 
    கொடிக்கு  காய் பாரமாகுமா 
    குழந்தை தாய்க்கு பாரமாகுமா 
    பிழைப்பிற்காக குழந்தையை 
    தோளை தூளியாக்கிச் சுமந்து 
    வயிற்று பிழைப்பிற்காக தினம் 
    சுமந்து செல்லும் மலைஜாதிப் 
    பெண்ணே !
    உடலில் வலுவும், நெஞ்சில் துணிவுடன் 
    உழைத்து பிள்ளையை காப்பாற்று 
    கல்வியை புகட்டி, அறிவினை பெருக்கி 
    நல்லறிஞ்சனாய்  வளர்ப்பாயாக 
    இன்று உன் நிழலில் உன் பிள்ளை 
    நாளை அவன் மடியில் உன் தலை 
    அவனே உன்னை தாங்கும்  தூண் !
    என எண்ணி செயலாற்று !

    ரா.பார்த்தசாரதி 

    Share
  • வெல்லும் சொல்

     

     

    பழகும் விதத்தில் பழகினால் பகைவனும் நண்பனே

    சொல்லும் விதத்தில் சொன்னால் தலையாட்டுவானே

    பேசும் பேச்சும்,சொல்லில் நயமும் நம்மை உயர்த்திடுமே

    பிறர் விரும்பும் சொல்லைக் கூறினாலே புகழுண்டாகுமே!

    சொல்வன்மை என்றாலே சொல்லை திறம்பட கூறுபவனே

    பிறர்மனம் நோகாமல் சொல்லை சொல்பவன் நல்லவனே

    இனிய சொற்கள் இருக்கும்போது தீச்சொல் கூறுவானேன்

    பழமாக இனிய சொல்லிருக்க, காயை சாப்பிடுவது தீமைதானே !

    அவையறிந்து சொல்லைச் சொல்பவன் அறிவுடையவன் ஆவான்

    தவறான சொல்லை சொல்பவனே முட்டாள் எனப்படுவான்

    சொல்லாற்றல் மனிதனை என்றும் மண்டியிடச் செய்யாது

    எவர் எதிர்த்து வரினும் அவர் எதிரில் தலை வணங்காது !

    சொன்னதை எல்லாமே உடனே செய்துவிட முடியுமா

    காலம் கருதி, உரிய சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டாமா

    பழி பாவங்கள் வராமல் பார்த்து எடுத்துரைக்கவேண்டாமா

    நியாயத்தை நினைந்து உண்மையை நிலைநாட்டவேண்டாமா!

    கவிஞ்சன் சொல்லைக் கொண்டு வெல்லும் கவிதை புனைகிறான்

    பேச்சாளனோ பேச்சாற்றலால் சபையில் மதிக்கப்படுகின்றான்

    சொல்லாமல் சொன்ன சொல்லுக்கு ஏதாவது விலையுண்டா

    வெல்லும் சொல்லை உடையவனுக்கு பகைமை உண்டா !

    Share
  • உலக சூற்று சூழல் தினம்

     

    நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வை

    தேவை இல்லாத பிளாஸ்டிக் குப்பைகளை பிரித்து வை

    காய்கறி கழிவு களையும் பிரித்து தனியாக வை.

    வருடம் ஒரு முறை மனித கழிவை வெளியேற்ற வை

    இன்று தண்ணீரும், காற்றும் மாசு படுகின்றதே

    இதனால் மக்களின் உடல் நலம் பாதிக்கின்றதே

    கழிவு நீர் கலப்பதால் கடல்வாழ் இனங்கள் இறக்கின்றதே

    காற்று மாசு பாட்டால் நாட்டின் தலைககரமே தவிக்கின்றதே !

    சுற்றுப்புறம் தூய்மையாய் இருப்பதற்கு உதவுங்கள்

    தனிமனிதா, தூய்மையை அன்றாடம் கடை பிடியுங்கள்

    வீட்டின் சுத்தமே , நாட்டின் சுத்தம் என எண்ணுங்கள்

    குழந்தைகள், முதியோர்கள் நலனை கருத்தில்கொள்ளுங்கள் !

    அழகாக வீடு கட்டினால் மட்டும் போதாது

    அழகாக தோட்டம் அமைத்தால் மட்டும் போதாது

    வீட்டைச் சுற்றி குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

    மக்களுக்கு மாசு கட்டுப்பாடின் மாண்பினை எடுத்துரையுங்கள் !

    வானத்தைப்போல் பரந்த மனமும் உயர்ந்த லட்சியம் கொள்

    கடல் அலைபோல் சுறுசுறுப்பினை கற்றுக்கொள் ,

    கண்ணுக்கு தெரியாத உயிரூட்டும் காற்றுபோல் உதவ கற்றுக்கொள்,

    உலகின் சுற்றுசுழலையும் பாதுகாக்க எண்ணம்கொள் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • என்றும் என் இதயத்தில்

     

     

    என்னருகில் நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலதே

    உன்னருகில் நான் இருந்தால் உன் இதயம் சிறகடுக்குதே

    காதல் இதுதானோ உன் கண் விழிப் பார்வையிலே

    என் இதயம் துடிக்காதோ உன் மோகன புன்னகையிலே !

    காதலுக்கு தேவை கனிவான பார்வையே

    இருவிழிகள் சந்திப்பின் காந்த பார்வையே

    இரு இதயங்கள் சேர்ந்து இணையம் சுகமே

    இரு மனங்கள் ஒரு மனமாய் திகழ்ந்திடுமே !

    காதலியே, நீ என் இதயவானில் ஓர் வெண்ணிலா

    உன் அழகை எண்ணி பாடுவேன் கவிதை உலா

    உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதினிலே

    இன்பம் எனும் சுவர்க்கம் தோன்றிடும் வாசலிலே !

    நான் சந்திரன் என்றால் நீ மலர்ந்திடும் அல்லிப் பூ

    நான் இமை என்றால் நீ என் கண்

    நான் உடல் என்றால் நீ என் உயிர்.

    நான் பேச்சு என்றால் நீ என் மூச்சு .

    காதல் எனும் மொழி பேச வருவேன் உன் வாசலுக்கே

    விழி நிறைய நீர் சுமந்து வழி நனைய உன்னை காண்பதற்கே

    உன்னை நான் பார்க்கும்போது நான் ஊமையாகின்றேன்

    உன்னை சிறை வைப்பேன் என்றும் என் இதயத்தில் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • ஏன் இந்த கொடுமை

     

     

    முத்துக்குளிக்கும் ஊரில் ஓர் கொடுமை நடந்தேறியதே

    அப்பாவி மக்களை காவல் துறை கொன்று குவித்ததே

    அரசின் பயங்கர வாதத்தை எதிர்க்க துணிவு இல்லையே

    மக்களுக்காக அரசா, இல்லை அரசுக்காக அரசா தெரியவில்லையே !

    இறந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கினால் மட்டும் போதுமா

    வேலையும் தருவதாக போக்கு காட்டுவதும் நியாயமாகுமா

    யூனியன் கார்பைட் போல் இங்கும் ஸ்டெரிலைட் செயல்படுகின்றதே

    சுற்றுபுற சூழலை மாசு படுத்தி மக்கள் உயிரை வாங்குதே!

    மக்கள் துன்பத்தை போக்காமல், அழிவிற்கு துணை போகிறதே

    துரித நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி செயல் படுதே

    அரசு ஆணை இன்றி துப்பாக்கிச் சூடு நடத்தமுடியுமா !

    கல்நெஞ்சு கொண்டவர்கள், தன்னை ஹிட்லர் என நினைக்கலாமா !

    அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தேறியதே !

    சுதந்திரம் பெற்ற பின்பும் ஜனநாயகப்படுகொலை நடக்கின்றதே

    மக்கள் உயிரை துச்சமாக மதித்து அரசு ஆட்சி செய்யுதே

    பின்விளைவுகள் பற்றி கவலைப்படாத அரசாக நிலவுதே !

    பாட்டாளிகளையும், மக்களையும் துன்புறுத்தி அடக்குவதா

    அவர்களின் போராட்டம் நியாயம் என் தெரியாமல் ஒடுக்குவதா

    மின்னல் போல் பளிச்சென்று வந்து உண்மையை உணர்த்துங்கள்

    போராட்டம் எனும் புரட்சியில் இறங்கி வெற்றி பெற்றிடுங்கள் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • சற்றே சிந்தித்துப்பார் மனிதா

    சற்றே சிந்தித்துப் பார் மனிதா !

    பலத்த காற்றிலும் நாணல் வளைந்து கொடுக்கின்றதே
    மனிதா வளைந்து கொடுக்க கற்றுக்கொள் !

    காகங்கள் கற்றுக்கொடுக்கின்றன ஒற்றுமையுடன் கூடி வாழ
    எறும்புகள் கற்றுக்கொடுக்கின்றன சேமிப்பின் சிறப்பை !

    தேனீக்கள் கற்றுக்கொடுக்கின்றன சுறு சுறுப்பின் சூட்சமத்தை
    ஆமைகள் கற்றுக்கொடுக்கின்றன விடாமுயற்சி எனும் பண்பை !

    நாயும், பசுவும் செய்ந்நன்றி என்ன என்பதை அறிவுறுத்துகின்றன
    எருதுகள் தனது கடினஉழைப்பை உதாரணமாக காட்டுகின்றது!

    சிங்கமும்,யானையும், வீரத்திற்கும்,பலத்திற்கும் உவமையாகின்றன
    மயிலும், குயிலும் அழகுக்கும், குரலுக்கும் எடுத்துக்காட்டாகின்றன!

    ஐந்தறிவு ஜீவன்களே நமக்கு நல்லவைகளையே கற்றுக்கொடுக்கின்றன
    ஆறறிவு உள்ள மனிதனே, நீ மட்டும் கெட்டதையே கற்றுக்கொடுக்கின்றாய்!

    ரா.பார்த்தசாரதி

    Share
  • ஒரு தாயின் ஏக்கம்

       ரா.பார்த்தசாரதி

     

    நீ அயல்நாடு  சென்றாய் ! கடந்தன இருபது வருடங்கள் !

    நான் வளர்த்தேன், வீட்டின் பின்புறம் தென்னை, வாழை !

    இன்று அவைகள் உயர்ந்து  வளர்ந்து விட்டது !

    இவைகள் என் பசியையும்,  தாகத்தையும்   தணிக்கிறது!

     

    தினமும் இன்டர்நெட் மையத்திற்கு செல்வேன் !

    உன்னை ஸ்கைப்பில் காண ! உன் இரு வரி ஈமெயில்தான் பார்க்கமுடிந்ததே !

    பல நாள் ஈமெயில் தகவல் இல்லாமல் திரும்பியுள்ளேன் !

    மனமும், உள்ளமும் சோர்ந்து  தவிக்கின்றதே  !

     

    என்று உன்னை ஸ்கைப்பிளும்,  ஹாங் ஹௌட்டில் காண்பேனோ

    உன் நிலமைகண்டு நான் தவிக்கின்றேன்,

    ஏனோ, நீ அடிமைப்பட்டு அங்கே தவிக்கின்றாய் !

    நான் பச்சை தென்னை ஓலையில்  படுக்கும் முன்னே,

    என் உடம்பை  ஈக்கள் மொய்க்கும்  முன்னே,

    உனது  ஈமெயில், ஸ்கைப்பும்,ஹாங் ஹௌட்டிலும்

    என்  உ டலைக் காட்டும்மா !

    நான் தெரிந்துகொண்டது, பணம் எட்டிப்பார்க்கும்,

    பாசம், உறவு  இவைகள்  தொலைவில் நிற்கும் !

     

     

     

    Share
  • இயற்கையும், மனிதனும்! 

    -ரா.பார்த்தசாரதி 

    விதை  செடியாகி, மரமாகி நிமிர்ந்து நின்றதே!
    பூவாகி, காயாகி  கனிகளை கொடுக்கின்றதே!
    கதிரவன் ஒளி எல்லோர்க்கும் இன்றியமையாததே!
    அதன் ஒளியால் பல உயிர்கள் வாழ்கின்றதே!
    மழை மண்ணை நனைத்து  குளிர வைக்கின்றதே!
    இதுவே பயிருக்குச் சிறந்த நன் நீராகிறதே!
    நிலவும் குளிர்ச்சி தந்து தண்ணொளி வீசுகின்றதே!
    நிலவும், தென்றலும், நல்லுறக்கம்  அளிக்குதே!
    மனிதனே  மரங்களை அழித்துக் கூறுபோடாதே!
    நிலங்களை அழித்து வீடு மனை  ஆக்காதே!
    இயற்கையோடு இணைந்து வாழக் கற்றுக்கொள்!
    மரக்கன்றுகளை நட்டுச் சுற்றுப்புற சூழலை காப்பாற்றுங்கள்!
    நாடும், வீடும் சுத்தமாக இருந்தால் நோய்கள் அகலுமே!
    சுற்றுப்புறம்  அசுத்தமாய் இருந்தால் நோய்கள் வந்தடையுமே!

     

    Share
  • தொழிலாளர் தினம்  

    ரா.பார்த்தசாரதி

     

    கடவுள் எனும் முதலாளி,  கண்டு எடுத்த விவசாயி எனும்  தொழிலாளி

    வீதியை சுத்தம் செய்யும்   துப்புரவாளர்  எனும்  தொழிலாளி

    பூங்காவை சுத்தம் செய்யும் தோட்டக்காரன் எனும் தொழிலாளி

    சொல்லை வைத்து விளையாடும் கவிஞ்சன் எனும் தொழிலாளி !

    உழவுக்கும், தொழிலுக்கும்  வந்தனை செய்வோம்

    வீணில் உண்டு  களிப்போரை நிந்தனை செய்வோம்

    ஏரோட்டம் , நின்றால் , இங்கு காரோட்டம்  நிற்கும்

    விவசாயின் இறக்கம் , நாட்டில்  ஏற்படும்  கலக்கம்  !

    துப்புரவாளர்கள் நாட்டின் சுத்தத்திற்காக பாடுபடுகின்றான்

    பூந்தோட்ட தோட்டக்காரன் பூங்காவை அழகுற செய்கின்றான்

    அநீதிகள் நடப்பதை கவிஞ்சர்கள் எடுத்துரைக்க மறுக்கின்றான்

    ஆள்பவர்களும்,,அரசியல்வாதிகளும், தன்னையே காத்துக்கொள்கிறான்!

    தாய்தந்தையர், பட்ட கடனுக்கு பிள்ளைகள் கொத்தடிமை

    பலமணி நேரம் வேலை, படிப்பதற்கு நேரமில்லா  நிலைமை

    தீ பெட்டி , பட்டாசு தொழிலில்  சிறுவர்கள் கடன்பட்ட  கொத்தடிமைகள்

    இன்றும் தீர்க்கப்படாத அடிமைபட்டு கல்வியறிவு இல்லா சிறுவர்கள் !

     

    வியர்வினாலே  மேனி கரைந்து வெயிலாலே முகம் கறுத்து

    பசியாலே பலமும் குறைந்து, கேள்வி குறிபோல் முதுகு வளைந்து,

    துயரமடைந்த  கொத்தடிமைகள் இருக்கும்போது சந்தோஷ நாள் ஏது ?

    தொழிலாளர்களின்  மதிப்பை உணர்ந்து நலம்பெற செய்வது யாரு?

    தொழிலாளியின்  மதிப்பினை கார்ல் மார்க்ஸ் எடுத்துரைத்தான்

    இன்றைய முதலாளிகள் அதனை கவலையின்றி  மறுத்துரைத்தான்

    பேருக்காக தொழிலாளர் தினம் நாட்டில் கொண்டாடப்படுகின்றதே

    தொழிலாளர்களை  அடிமையாக முதலாளி மனம் நினைக்குதே !

    உலகை ஆளும் உழைக்கும் கரங்களே, ஒன்று கூடுங்களே

    இந்த நாடு முழுதும் மலரவேண்டும் புரட்சி மலர்களே !

    அடிமை எனும் மடமையை நீக்கி, உரிமையை நிலைநாட்டுங்கள்

    தொழிலாளர்  தினத்தை எண்ணியாவது வளம்பெற நினைத்திடுங்கள்  !

    Share
  • விளம்பியே விரும்புவதை தா !

     

    ஆண்டுக்கு ஆண்டு புது பெயருடன் பிறக்கின்றாய்

    அறுபது எண்ணிற்குள் அடங்கி வருகின்றாய்

    விளம்பி என்ற பெயருடன் பிறக்கின்றாய்

    நாங்கள் விரும்பியதை தர மறுக்கின்றாய் !

    புத்தாண்டிற்கு ஓர் தோரணம் கட்டுவோம்

    தமிழரிடையே ஒற்றுமை எனும் பாலம் அமைப்போம்

    ஆட்சியாளர்கள் அடிமைத்தனத்தை ஒழித்திடுவோம்

    நீதி,நியாத்தை என்றும் நிலை நாட்டிடுவோம் !

    நீரின்றி அமையாது இவ்வுலகம் என அறிந்ததே

    விவசாயம் நீரின்றி அழிவதும் எல்லோர்க்கும் தெரிந்ததே ,

    வாடிய பயிரை கண்டு வாடிய நந்தனாரே

    மனம் மாறாத தன்மையுடைய ஆட்சியாளர்களே !

    வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அறிவுடைமை

    ஒன்று கூடி செயல் படுத்துவோம் நதிநீர் மேலாண்மை

    எங்கே சென்றிடும் காலம், அது நம்மை வாழவைக்கும்

    விளம்பி ஆண்டில் அடையவேண்டியதை அடைந்திடுவோம் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • வளையல்

    ரா.பார்த்தசாரதி

     

     

    நன்மனத்துடன்  வளையல்களை அணிவிக்க கையை நீட்டச்சொன்னார்

    கைகளின்  அளவிற்கேற்ப வளையலை பெண்ணிற்கு அணிவித்தார்

    என்றுமே வண்ண  கண்ணாடி வளையல் அணிய விருப்பமுண்டு

    இதில் ஏழை, பணக்காரன் என்ற மாறுபாடு இல்லாமல் இருப்பதுண்டு!

     

    வண்ண வளையல் அணிய  கன்னிப்பெண்களுக்கு அதிக விருப்பமுண்டு

    அணிந்தவுடன் அவள் முகத்தில் புன்னகை மலர்வதுண்டு

    அந்த  வலையோசையுடன் பிறர்க்கு காண்பிப்பதில் பெருமையுண்டு

    வலையோசையும், மெட்டிஒசையுமே ஆடவன் மனதை அசைப்பதுண்டு!

     

    ஆபரணங்களிலே வளையலே பெண்களை அதிகம்  மகிழ்விக்கும்

    வலையோசையும், மெட்டி ஓசையுமே, ஈர்க்கும் தன்மை  அதிகம்

    பெண் வளையல்களை  அணிவதன் காரணம்தான்   ஏனோ ?

    கணவன் தன்னை வளைய,வளைய வருவதற்குத்தானோ ?

     

    தாய்மையின் சிறப்பை, வளைகாப்பின் மூலம் சிறப்படையச்செய்யுதே

    வண்ண வளையல்கள் அணிந்த கருவுற்ற  தாயும் மகிழிச்சி அடைந்ததே

    தானும் அணிந்து, பிறர்க்கும் அதனை வெகுமதியாய் கொடுக்கப்படுதே

    வளையலின் ஓசை அவள் குழந்தைக்கும், கணவனுக்கும் சொந்தமானதே !

     

     

     

     

    Share
  • குற்றமும், குறையும்

      ரா.பார்த்தசாரதி

     

    குற்றம்  சொல்லவும், குறைகளை பேசவும் முற்றம் தேவையில்லை

    வென்றவனை கண்டால் அதிர்ஷ்டம்  என்று அலட்டிக்  கொள்வர்

    தோற்றவனை  கண்டால் இது தேவைதானா என எகத்தாளம் பேசுவர்

    உள்ளவனை  கண்டால் கொள்ளை அடித்த பணம் என குற்றம் சொல்வர்

     

    குற்றம் சொல்பவன் என்றும் தன்குறையினை நினைக்க மாட்டார்

    கட்டின   வீட்டிற்கு நம் முன்னே குறை சொல்பபவர்கள் இருப்பர்

    வென்றவனை கண்டால்  அதிர்ஷ்டம் என்று அலட்டிக் கொள்வர்

    இல்லாதவனை கண்டால் பிழைக்கத் தெரியாதவன்  எனக் கூறுவர் !

     

    தப்பு செய்தவன்  தண்டனை பெற்றால், சட்டம் சரியில்லை என்பர்

    தப்பு செய்யாதவன் தண்டனை பெற்றால் சரியான நீதி  என்பர்

    பிழைப்பு தேடி பிற நாட்டிற்கு சென்றால் பேராசைக்காரன் என்பர்

    உழைப்பைத் தேடி உள் நாட்டில்  உலாவினால் ஊர் சுற்றி என்பர் !

     

    ஊருக்கு உதவினால்,  ஊர் கழுதை   என்று  பட்டம் சூட்டுவர்

    சும்மா இருந்தால் சோம்பேறி என்று  முத்திரை   குத்துவர்

    பிறர் குறை காண்பவன், தன் குற்றம்,குறைகளை உணர மாட்டார்

    இறைவனே புலவன் பாட்டில் குற்றம் கண்டுபிடித்தார் என்பர் !

     

    குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என  யாவரும் நினைப்பதில்லை

    குற்றம் கடிதலை பற்றி வள்ளுவன் கூறுவதை செவிசாய்ப்பதில்லை

    இறுமாப்பு, சீற்றம், இழிந்தகுணம் இவை குற்றத்தின் தூண்டிலாகும்

    குற்றங்களுக்கு  அஞ்சி நடப்பவன் மனமே மாணிக்க கோவிலாகும் !

     

     

     

    Share
  • கண்ணால் காண்பதும்

     

     ரா.பார்த்தசாரதி

     

    கண்ணால்   காண்பதும்,  மனத்தாலே நினைப்பதும்,

    கண்ணால்  உறவாடி,  உள்ளத்தால்  தவிப்பதும்

    காதலன், தன்  காதலை  காதலியிடம் உணர்த்துவதும்

    காதலர்கள்  இரு பார்வைகளால்  சொந்தமாவதும் !

     

    கண்ணிற்கு இன்றியமையாத  ஒன்று  இரக்கமோ

    கண்ணின் இரக்கமே,  பாசமாய்   மாறுமோ

    காதலனிடம், இரு விழிகள்  சிறகடித்து  பேசுமோ

    நினைக்கத்  தெரிந்த மனதிற்கு மறுக்கவும் தெரியுமோ !

     

    கண்ணால் காண்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்

    நல்லதையும், கெட்டதையும் வெளிப்படுத்தும் கண்களே

    மனம்  நினைப்பதை, கண்கள் என்றும்  மறுக்கும்

    கண்கள் சொல்வதை  மனம் நினைக்க மறுக்கும் !

     

    கண்கள் பார்க்காததை  மனம்  மறுக்குமா

    மனதினால்  தியானம்  செய்தால் ஞானம் கிடைக்குமா

    கண்களோடு கண்கள் கலந்தால் காதல் உண்டாகுமா

    நினைக்கத்  தெரிந்த  மனதிற்கு மறக்கத்  தெரியுமா !

     

    கண்களின் வார்த்தைகள் புரியாதா, காத்திருப்பதும் தெரியாதா

    இரு கண்கள்  சந்திப்பதால் என்றும்  காதல் மலராதா

    கண்ணின் அருகே, இமை இருந்தும் கண்கள் பார்ப்பதில்லை

    துணைவன் அருகில் இருந்தும், அவனது அருமை தெரிவதில்லை!

     

     

     

     

     

     

    Share
  • மழைநீர் போல

     

     ரா.பார்த்தசாரதி

     

     

    மழை  வேண்டாத  மக்கள்  உண்டோ !

    மழைநீர்  சேமிக்க  வழியும் உண்டோ !

    மழை வேண்டி யாகமும்,பூஜையும் நடக்கின்றதே!

    ஒரு சிலர் செய்த பாவத்தால் மழை வர தயங்குதே !

     

    மழைநீர்  இன்று மக்கள்  உயிரை காக்கும்  உயிர் நீர்

    மழைநீர் இல்லையெனில் பசும்புல்லையும் காணமுடியாது

    மழைநீர் வெள்ளமாய் உருவெடுத்து பலவற்றை அழிக்கிறது

    மழைநீர் இன்மையால்   பல இடங்கள் வறட்சியாயிருக்கிறது

     

    மழைநீரை  தேக்கி வைக்க திட்டங்களை அரசு செய்யவேண்டும்

    மழைநீர் வீணாவதை தடுக்க முயற்சி  செய்யவேண்டும்

    நதிநீர்  வீணாகி  கடலில் கலப்பதை தடுக்கவேண்டும்

    ஆறுகளையும் குளங்களையும்  தூர் வார  வேண்டும்

     

    மழைநீர் திட்டம் வீடு வரைக்கும் செயல் படுத்தியதே

    வெள்ளம் வரும்போது மழை நீரை சேமிக்க மறந்ததே

    மக்களுக்கு உதவியும், நிவாரணங்களும் அளிக்கப்பட்டதே

    மழைநீர் நிலத்தடியில் சேர்க்காமல் கடலில் கலந்ததே!

     

    மழைநீர்   மக்களுக்கும், விவசாயத்திற்கும் இன்றியமையாததே

    மழைநீரை அணையிலும், நிலத்தடியிலும் சேமிப்பது நல்லதே

    நீரின்றி  அமையாது உலகம் மக்கள் வாழ்க்கையும் சரிவர  நடக்காதே

    பருவ மழை பொய்த்ததாலே   மழைநீர்  தட்டுப்பாடு  ஏற்பட்டதே !

     

     

    Share