இயற்கையும், மனிதனும்!
-ரா.பார்த்தசாரதி
விதை செடியாகி, மரமாகி நிமிர்ந்து நின்றதே!
பூவாகி, காயாகி கனிகளை கொடுக்கின்றதே!
கதிரவன் ஒளி எல்லோர்க்கும் இன்றியமையாததே!
அதன் ஒளியால் பல உயிர்கள் வாழ்கின்றதே!
மழை மண்ணை நனைத்து குளிர வைக்கின்றதே!
இதுவே பயிருக்குச் சிறந்த நன் நீராகிறதே!
நிலவும் குளிர்ச்சி தந்து தண்ணொளி வீசுகின்றதே!
நிலவும், தென்றலும், நல்லுறக்கம் அளிக்குதே!
மனிதனே மரங்களை அழித்துக் கூறுபோடாதே!
நிலங்களை அழித்து வீடு மனை ஆக்காதே!
இயற்கையோடு இணைந்து வாழக் கற்றுக்கொள்!
மரக்கன்றுகளை நட்டுச் சுற்றுப்புற சூழலை காப்பாற்றுங்கள்!
நாடும், வீடும் சுத்தமாக இருந்தால் நோய்கள் அகலுமே!
சுற்றுப்புறம் அசுத்தமாய் இருந்தால் நோய்கள் வந்தடையுமே!