கண்ணால் காண்பதும்
ரா.பார்த்தசாரதி
கண்ணால் காண்பதும், மனத்தாலே நினைப்பதும்,
கண்ணால் உறவாடி, உள்ளத்தால் தவிப்பதும்
காதலன், தன் காதலை காதலியிடம் உணர்த்துவதும்
காதலர்கள் இரு பார்வைகளால் சொந்தமாவதும் !
கண்ணிற்கு இன்றியமையாத ஒன்று இரக்கமோ
கண்ணின் இரக்கமே, பாசமாய் மாறுமோ
காதலனிடம், இரு விழிகள் சிறகடித்து பேசுமோ
நினைக்கத் தெரிந்த மனதிற்கு மறுக்கவும் தெரியுமோ !
கண்ணால் காண்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்
நல்லதையும், கெட்டதையும் வெளிப்படுத்தும் கண்களே
மனம் நினைப்பதை, கண்கள் என்றும் மறுக்கும்
கண்கள் சொல்வதை மனம் நினைக்க மறுக்கும் !
கண்கள் பார்க்காததை மனம் மறுக்குமா
மனதினால் தியானம் செய்தால் ஞானம் கிடைக்குமா
கண்களோடு கண்கள் கலந்தால் காதல் உண்டாகுமா
நினைக்கத் தெரிந்த மனதிற்கு மறக்கத் தெரியுமா !
கண்களின் வார்த்தைகள் புரியாதா, காத்திருப்பதும் தெரியாதா
இரு கண்கள் சந்திப்பதால் என்றும் காதல் மலராதா
கண்ணின் அருகே, இமை இருந்தும் கண்கள் பார்ப்பதில்லை
துணைவன் அருகில் இருந்தும், அவனது அருமை தெரிவதில்லை!
