Author Archives: admin

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 14

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] நன்னூலில் உவமங்கள் – 3 முன்னுரை நல்லாசிரியர, அல்லாசிரியர் முதலியோருக்கு இருக்க வேண்டிய பண்புகளை நேரடியாகக் கூறிக் கூடுதல் சிறப்பியல்புகளை உவம அளவையால் எடுத்துரைத்த பவணந்தியார் மாணாக்கரை அவ்வாறு தகுதி நோக்கிப் பிரித்தாரல்லர். காரணம் கற்பித்தலுக்குத் தகுதி தேவை. கேட்பதற்கு அது தேவையில்லை. எல்லாரும் ஆசிரியர் ஆகிவிட இயலாது. ஆயின் அனைவரும் மாணவர் ஆகலாம். கற்பித்தல் ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 13

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] நன்னூலில் உவமங்கள் – 2 முன்னுரை உள்ளத்தில் மென்மையும் முகத்தில் மலர்ச்சியும் அறிவில் அடர்த்தியும் பண்பில் நடுவுநிலையும் கொண்டிருப்பதே நல்லாசிரியர் ஒருவருக்கு இருக்க வேண்டிய இயல்பு என்பதற்கு மலர், மலை, துலாக்கோல் முதலியவற்றை உவமமாகச் சொல்லிக் காட்டிய பவணந்தியார், அல்லாசிரியருக்கு அவற்றினும் முரண்பட்ட பொருட்களை உவமமாக்கியிருக்கிறார். ‘இனிய கனி’ என்பதற்கு ‘ஔவை உண்ட நெல்லிக்கனி’ என்றும் ‘இன்னாத ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 12

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் –  613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] திருக்குறளும் நன்னூலும் முன்னுரை ‘இலக்கியத்திற்குத்தான் இலக்கணமே தவிர இலக்கணத்திற்காக இலக்கியமன்று’ என்பது மரபு. இலக்கியம் என்பது ஈண்டு வாய்மொழி இலக்கியங்களையும் உள்ளடக்கியதே. அதனால்தான் இலக்கண விதிகளுக்கு மாறுபட்டு மக்கள் வழக்கு அமைகிறபோது இலக்கண ஆசிரியர்கள் அவற்றுக்குப் புறனடை கண்டு அமைத்துத் தழுவிக்கொண்டனர். இந்தக் கட்டுரை ‘இலக்கியத்திற்கு இலக்கணம்’ என்பதை இலக்கியத்தில் பயின்று வந்துள்ள உவமங்கள் இலக்கணத்துள்ளும் பயின்று ...

Read More »

ஒரு போஸ்ட் பொக்ரான் ஷெனோரியா (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

முனைவர் நா.தீபாசரவணன் உதவிப் பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை. மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன் மொழி: மலையாளம் தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் ”என்னுடைய பேரு தயாவந்தி”, தொலைக்காட்சி கேமராவுக்கு நேராகப் பார்த்துக்கொண்டு அவள் தடுமாறாமல் கூறினாள்,” எனக்கு மூணு புள்ளைகள். மல்லிகா, மதுரிகா, பிரவீன், அவுங்க அப்பா ஆதித்யா ஆப்தெ. சென்ற மார்ச் மாதம் எங்களைப் பொறுத்தவரை துன்பங்கள் நிறைந்த மாதம். மார்ச்சில் தான் நான் விதவையானேன். என் கணவரை யார் கொன்றார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் ...

Read More »

கம்பனில் உருவெளித்தோற்றம்

முனைவா் பா. பொன்னி உதவிப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், தமிழ்த்துறை தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராசரத்தினம் மகளிா் கல்லூாி (தன்னாட்சி) சிவகாசி. கம்பராமாயணம் மனிதா்களை மட்டும் அல்லாது அரக்கா்கள், குரங்குகள், கரடிகள் என்று பல்வேறு வகையான நிலையில் உள்ள பாத்திரங்களையும் மையப்படுத்தி அமைந்த காப்பியம். ஆகவே அக்காப்பியத்தில் மனிதா்களின் இயல்புகளை மட்டும் அல்லாது பல்வேறு வகைப்பட்ட உயிா்களின் இயல்புகளையும் மனநிலைகளையும் நாம் காணஇயலுகின்றது. கம்பா் இத்தகைய பல்வேறு வகையான பாத்திரங்களையும் அவரவா் குலத்திற்கு ஏற்ற வகையிலும், குலத்திற்கு மாறுபட்ட நிலையிலும் படைத்துக்காட்டியதன் வழி சிறந்த ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 11

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] நன்னூலில் உவமங்கள் – 1 முன்னுரை தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பயின்று வரும் உவமங்கள் சிலவற்றின் பயன்பாட்டுச் சிறப்பை அறிந்த நிலையில் அதன் வழிநூலான நன்னூலில் பயின்று வரும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. எழுத்து, சொல் என்னும் இரு கூறுகளை மட்டுமே ஆராய்ந்திருக்கும் இந்த நூலிலும் இலக்கணக் கருத்துக்களை விளக்குதற்கு அவ்வளவாக உவமங்கள் பயன்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ...

Read More »

சித்திரைப் பெண்ணே வருக

சரஸ்வதி ராசேந்திரன் சித்திரைப்  பெண்ணே  வருக சிறப்பெல்லாம் அள்ளித் தருக சாதகம்   ஆக்கவே    வருக சாற்றிட   நற்செயல்    புரிக தீநோய்   தீர்த்திட   வருக திருத்தமாய்  நல்வழி   புரிக உறவுகள்   சிறந்திட  வழிசெய்க உள்ளம்  மகிழ்வுற  அருள்புரிக விளைபயிர்  காத்திட மழைதருக விலைபொருள் குறைய அருள்புரிக நசித்திட வேண்டும் வீணர்களை இசைத்திட வேண்டும் நல்வாழ்க்கை வாட்டிட வேண்டும் வறுமையினை வதைத்திட  வேண்டும் நோயினையே காத்திட  வேண்டும்  குழந்தைகளை கற்றிடப்  பள்ளிகள் திறந்திடவேண்டும் சித்திரப்    பெண்ணே    வருக சீக்கிரம்   சிறப்பை  அள்ளித்தருக ஊர்நலம்   கூடிட  வேண்டும் உறவுகள்  பலப்பட   வேண்டும்

Read More »

(Peer Reviewed) அகஇலக்கியத்தில் முதுபெண்டும் முதுவாய்ப் பெண்டும்

ச.கண்மணி கணேசன்(ப. நி.), முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. முன்னுரை அகஇலக்கியத்தில் இடம்பெறும் முதுபெண்டு, முதுவாய்ப் பெண்டு ஆகிய இரு பாத்திரங்களின் பெயர்க்  காரணத்தையும் தன்மைகளையும் எடுத்துக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். முதுபெண்டை முதுவாய்ப்  பெண்டு எனப் பிறழ உணரும்  இடத்தை எடுத்துக்காட்டித் தெளிவிக்க வேண்டிய தேவை உள்ளது. அகப்பாடல்கள் முதல்நிலைத் தரவாக அமைய; உரையாசிரியர் கூற்றுகளும் பிறவும் இரண்டாம்நிலைத் தரவாக அமைந்து; விளக்கமுறை ஆய்வாகக் கட்டுரை உருப்பெற்றுள்ளது. முதுபெண்டிர்க்குரிய தகுதியும் வயதும்    பெண்ணானவள் மணம்புரிந்து; கற்புநெறி வழுவாது ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 10

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] தொல்காப்பியப் பொருளதிகார உவமங்கள் – 3 (வெட்டுண்ட அட்டையும் வீரனின் கவந்தமும்) முன்னுரை காஞ்சி, பாடாண் முதலிய வாழ்வியல் திணைகள் பெருமை சேர்த்தாலும் வெட்சி முதலியனவே புறத்திணைகளின் சாரமாகும். அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன அகத்திணைக் களங்களெனின் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என்பனவே புறத்திணைக் களங்களாகும். அவற்றுள் தும்பை ...

Read More »

ஆய்ந்தே கடந்தவர் அறிவென்னும் அளக்கர்!

முனைவர் ஒளவை நடராஜன் ஸ்ரீராம் குழுமம் நடத்தும் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவில் கண்டு(8.2.2020) பேசினேன் . அப்போது சேக்கிழார் அடிப்பொடி பாரதி பதிப்பு வெளியிட வேண்டும் என்றார். திடுமென மறைந்த செய்தியறிந்து கலங்கினேன். முதுமுனைவர் டி என் ஆர்.  (18.8.1934-6.4.2021) அவர்களை நான் அறுபதாண்டுகளாக அறிவேன் என்றால் பலர் வியப்பார்கள். தஞ்சையில், சரபோசி மன்னர் கல்லூரியில் நான் பணியில் சேர்ந்த ஆண்டு 1958. பணியில் சேர்ந்து முடிந்த மறுவருடம் நான் சேக்கிழார் அடிப்பொடி அவர்களின் இல்லத்தில் விருந்துண்டேன். உண்டு முடித்த பிறகு அவரோடு ...

Read More »

இதயம் திறந்த அனுபவங்கள் – 5

வெ. சுப்ரமணியன் நோயாளி ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) உள்ளவராகவோ அல்லது இல்லாதவராகவோ இருக்கலாம். நோயாளிக்கு ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) இருந்து அவரது சிகிச்சைக்காக முன்பணம் காப்பீட்டு நிறுவனத்தால் அனுமதித்து வழங்கப்பட்டிருப்பின் மீதமுள்ள தொகைக்கான கேட்பு (claim) மருத்துவமனையால் அனுப்பி வைக்கப்படும். காப்பீட்டு நிறுவனம் முன்பணத்தைக் கழித்துக் கொண்டு அனுமதிக்கக் கூடிய மீதமுள்ள தொகையை மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தி விடும்.  காப்பீட்டு நிறுவனம் செலுத்திய தொகைக்கும் அதிகமாக நோயாளி  ஏதாவது தொகை செலுத்த வேண்டியிருப்பின் அதைச் செலுத்தியதும் மருத்துவமனையை விட்டு ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 9

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்  உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] தொல்காப்பியப் பொருளதிகார உவமங்கள் – 2 முன்னுரை தொல்காப்பியம் பொருட்பகுதியின் பொருள் புலப்பாட்டுக்காகப் பொருத்தமான உவமங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் பாங்கினை ஆராயும் முந்தைய கட்டுரைப் பொருளுடன் இந்தக் கட்டுரையும் இதற்கு அடுத்து வரும் கட்டுரையும் தம்மை இணைத்துக் கொள்கின்றன. இலக்கண ஆசிரியன் ஒருவனுடைய இலக்கிய உள்ளத்தை அறிந்து கொள்வதற்கும் இவை பயன்படக்கூடும். மேலும் இலக்கணத்தை இலக்கியமாக்கும் ...

Read More »

இதயம் திறந்த அனுபவங்கள் – 4

வெ. சுப்ரமணியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மீட்பு அறைக்கு (recovery room) மாற்றப்படுவார். ஒரு அறுவை சிகிச்சைக்கோ அல்லது செயல்முறைக்கோ மயக்க மருந்து (anesthesia) செலுத்தப்பட்டதால்  நோயாளி உணர்வற்ற நிலையில் இருப்பார். உணர்விழந்த நிலையிலிருந்து விழித்தெழுவதற்காக, நோயாளி மயக்கநிலைக்குப் பின்னரான பராமரிப்பு பிரிவுக்கு (Post Anesthesia Care Unit – PACU) மாற்றப்படுவார். சில மருத்துவமனைகளில் இப்பிரிவு இல்லாமலும் இருக்கலாம். கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற ஊழியர்களைக் கொண்ட இப்பகுதி பெரும்பாலும் மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சை அரங்கங்களுக்கு (operation theatres) அருகிலேயே ...

Read More »

இதயம் திறந்த அனுபவம் – 3

வெ. சுப்ரமணியன் அடுத்தது அறுவைச் சிகிச்சை அறைக்கு (Operation theatre)  வந்த பிறகு என்ன நடக்கும் என்று காணலாம். சிஏபிஜி (CABG) அறுவைச் சிகிச்சையைப் பொறுத்தளவில் நடைமுறைகள் (procedures) பெரும்பாலான  மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் சிற்சில வேறுபாடுகளும் இருக்கலாம். (1) மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் பல அறுவைச் சிகிச்சை நிபுணர்களுடனும் (Surgeons) இணைந்து செயல்பட மருத்துவர்கள் (Doctors), செவிலியர்கள் (Nurses) மற்றும் மருத்துவக் கருவிகளைக் கையாளும் தொழில் நுட்பப் பணியாளர்கள் (Technical staff) அடங்கிய அனுபவம் வாய்ந்த பணியாளர் குழுக்கள் ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 8

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்  உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] தொல்காப்பியப் பொருளதிகார உவமங்கள் (1) முன்னுரை தொல்காப்பியத்தில் உவமம், சங்க இலக்கியங்களில் உவமம், பிற்கால இலக்கியங்களில் உவமம் என்பன தனித்தனி ஆய்வுக்கு உட்பட்ட பொருண்மை என்பது இக்கட்டுரையாளர் கருத்து. ‘கவிதையில் உவமம்’ என்பது செய்யுளியலில் குறிப்பிடப்படாத காரணத்தால் தொல்காப்பிய உவமவியலின் உள்ளடக்கம் சாதாரண உவம ஆய்வினின்றும் வேறுபடுகிறது. தலைமக்களின் கூற்றுப் பகுதியாக இருந்த உவமக் கோட்பாடு ...

Read More »