Author Archives: பி.தமிழ்முகில்

சிறகை விரித்திடு !

பி.  தமிழ்முகில்    சிறகை விரித்திடு சித்திரப் பெண்ணே ! உலகிற்கே பொதுவான வானம் – அது உன்னையும் ஏந்திக் கொள்ள எந்நாளும் தயாரே ! அடிமைத் தளைகளை உடைத்தெறிந்து உன்னதமாய் உலகை வலம் வா ! அடக்கமும் அமைதியும் உன்னுள் இருக்கட்டும் ! வீரமும் விவேகமும் விழிப்புடனே இருக்கட்டும் ! அச்சமும் நாணமும் கொண்டிருந்த காலம் மலையேறட்டும் ! தைரியமும் தெளிவும் எப்போதும் உனக்கு துணையாகட்டும் ! ரவுத்திரம் பழகு ! வேதனை சோதனை என அனைத்தும் உன் சாதனைக்கு அடித்தளமாகட்டும் ! ...

Read More »

“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்!

— பி. தமிழ்முகில் நீலமேகம். படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு ! என்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியவர் நமது பெருந்தலைவர் காமராசர் அவர்கள். இவர்தம் ஆட்சிக் காலத்தில் தமிழகம் கல்வியில் அபார வளர்ச்சி பெற்றமையால் இவர் “கல்விக்கண் திறந்த காமராசர்” என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறார். தனது ஆட்சிக் காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த காமராசர் அவர்கள் படித்தது ஆறாம் வகுப்பு வரை மட்டுமே. இவரது கல்வி ...

Read More »

பயன்மிகு இணையவழிச் சேவைகள் – இணைய நூலகங்கள்

—பி. தமிழ் முகில்.   பயன்மிகு இணையவழிச் சேவைகள் இணைய நூலகங்கள்  நூலகங்கள் நம் எண்ணங்கள், கனவுகள்,திறன்கள் என அனைத்தையும் தன்னுள் காத்து வைத்திருக்கும் பொக்கிஷ கிடங்கு. ஒவ்வொரு தனி மனிதரின் ஆர்வத்திற்கும், தேடல்களுக்கும் வடிகாலாக விளங்குபவை நூலகங்கள். இணையத்தின் வாயிலாக பல நூலகங்கள்  நூல்களை தரவிறக்கம் செய்யும் வசதியுடனுன், இலாப நோக்கின்றி புத்தகங்களை தரவேற்றும் தனிநபர்கள் பலரின் வலைப்பூக்களும்   நமக்கு இலவசமாக கிடைக்கின்றன.அத்தகைய நூலகங்கள் மற்றும் வலைப்பூக்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.   இணைய ஆவணகம்( Internet Archive : Digital ...

Read More »

பயன்மிகு இணையவழிச் சேவைகள் – வரைபடங்கள்

— பி. தமிழ்முகில் நீலமேகம்.    இணையம் – இன்று பலதரப்பட்ட மனிதர்களால், பலதரப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப் படுகிறது. இணையம் இன்று உலகத்தினை நம் உள்ளங்கைகளுக்குள் கொண்டு வந்து விடுகிறது. நமது அன்றாட வாழ்வில், பலவகையான தேவைகளுக்காக நாம் இணையத்தினை பயன்படுத்துகிறோம். நமது தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் பல நிறுவனங்கள் செயல் படுகின்றன. அவற்றில் சில நிறுவனங்கள் சேவைக் கட்டணம் வசூலிக்கினறன, சில நிறுவனங்கள் இலவச சேவையாக செய்கின்றன. இக்கட்டுரையில், இலவச வரைபட ( Maps ) உதவிகள் வழங்கும் நிறுவனங்கள் குறித்து காணலாம். ...

Read More »

என் பார்வையில் கண்ணதாசன்

–பி.தமிழ்முகில் நீலமேகம் பொதுவாக, திரையிசைப் பாடல்கள் காலத்தால் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. இன்று நாம் முணுமுணுக்கும் இக்காலத்துத் திரையிசைப் பாடல்கள், நாளை நம் நினைவில் நிற்குமா என்று கேட்டால், நிச்சயமாக இருக்க முடியாது என்று அடித்துச் சொல்லலாம். இன்றைய பாடல்கள் காளான்கள் போன்றவை. அவற்றிற்கான ஆயுட்காலம் மிகக் குறைவு. கருத்தாழம் மிக்க பாடல்களே காலமெலாம் நிலைத்து நிற்கும். காலத்தால் அழியாத அற்புதப் படைப்புகள் பலவற்றை நமக்குப் பெரும் பொக்கிஷங்களாகக் கொடுத்தவர் கவிஞர் கண்ணதாசன் என்பது நிதர்சனமான உண்மை. காதல் ஆயினும் சரி, தத்துவமாயினும் ...

Read More »

நிலை மாறாக் காதல் !

–பி.தமிழ் முகில். தகதகவென  ஜொலிக்கும் தங்கக் கிரீடம் சுமந்து சூரியப் பெண்ணவள் வான் சோலையில் உலவ எதிர்பட்ட  மேகக்  காதலனை கண்டதும் மெல்ல நாணமதுவும் ஆட்கொண்டு விட தன்  சூரியக் காதலியை மேகக் காதலன் ஆரத்  தழுவிக்  கொள்ள – அவளோ வெட்கத்துடன் சிறு  கீற்றாய் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு மெல்ல  தன்  முகம் மூடிக் கொள்ள ஆங்கே  அரங்கேறுகிறது அந்திப் பொழுதிலோர் நிலை மாறாக்  காதல் !

Read More »

அன்புள்ள மணிமொழி

பி.தமிழ் முகில் மதுரை 12.03.2014 அன்புள்ள மணிமொழி அக்காவிற்கு, அன்புடன் உன் தங்கை மணிமேகலை எழுதிக் கொள்வது. இங்கு அனைவரும் நல்ல சுகம். அதுபோல் அங்கு உனது மற்றும் அத்தான் நலம் குறித்தும், பிள்ளைகள் கவின்பாரதி, கவின்மலர் நலம் குறித்தும் அறிய ஆவல். கல்லூரியில் உனது விரிவுரையாளர் பணி எப்படி போய்க் கொண்டிருக்கிறது? மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தாயே? விண்ணப்பித்து விட்டாயா? அக்கா! என் மனதை மிகவும் நோகடித்துக் கொண்டிருக்கும் சில விஷயங்களை உன்னிடம் பகிர்ந்து கொண்டு ஆறுதல் தேடிக் கொள்ளவே இக்கடிதத்தை ...

Read More »

அன்புள்ள மணிமொழிக்கு

பி.தமிழ் முகில் 22.02.2014 சென்னை. அன்புள்ள  மணிமொழிக்கு, உன் தோழி மலர்விழி எழுதிக் கொள்வது. நான் இங்கு நலம். உன் நலம் பற்றி அறிய ஆவல். அம்மா, அப்பா மற்றும் கனிமொழி நலம் குறித்தும் அறிய ஆவல். அனைவரது நலனுக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கல்லூரி  எனும்   நந்தவனத்தில்  மணம்  கமழும்  வண்ண மலராய் முகிழ்த்தது நம் நட்பு. அந்த நட்பு எனும் மலரில், இன்பமெனும் தேன் பருகிய கவலையிலா  வண்ணத்துப்  பூச்சிகள் நாம். நினைவுகளில்  பசுமையாய்  நிறைந்து  நிற்கும் வசந்த காலம் அது. ...

Read More »

யாருக்கு நஷ்டம் ?

பி. தமிழ் முகில் நீலமேகம்   ” கமலா ரொம்ப பாவம்பா. அவளுக்கு பரீட்சைன்னாலே ரொம்ப பயமாம். கிளாஸ்ல வைக்கிற சின்ன டெஸ்ட் எல்லாம் ரொம்ப நல்லா எழுதீடறா, ஆனால், மாதப் பரீட்சை, அரைப் பரீட்சை, கால் பரீட்சைல எல்லாம் பெயில்  ஆயிடறா. ஏன்னே புரியல. ஒவ்வோர் பரீட்சை முடிந்து, விடைத்தாள் குடுக்கும் போது, டீச்சர் என்னைய கூப்பிட்டு கேக்கறாங்க. என்னைய, அவளுக்கு படிக்க உதவ சொல்லி இருக்காங்க. அவளுக்கு என்ன பிரச்சனைன்னு கண்டுபுடிக்கணும். அவளும் நல்லா படிக்க உதவணும் ” மிகுந்த அக்கறையுடன் ...

Read More »

இரத்தினக் கம்பளம்

பி. தமிழ்முகில் நீலமேகம்   உன் பிஞ்சுப் பாதம் மண்ணில் பதிய பூமித் தாயும் அகமகிழ்ந்து உளம் பூரித்து – ஆனந்தம் வழிய புன்னகையுடன்  உனக்கு இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பளிக்கிறாளோ ?? கள்ளமறியா கிள்ளையே !!! அவளை  எந்நாளும் காத்திட உறுதிகொண்டால் – எந்நாளும் நம் வாழ்வில் நிறைந்திடுமே பசுமையே !!! நல்வாழ்வு வாழ மண் – மழை காக்க மனதில்  உறுதி கொள்வோமே !!! இரத்தினக் கம்பளத்தின் எழிலினை இரசித்து மகிழ்வோமே !!!    

Read More »

உறக்கத்திலோர் உளறல் !!!

பி.தமிழ்முகில்   நீலமேகம்   ஜானவி அந்தக் கல்லூரியில் முதலாமாண்டு வேதியியல் பாடப்பிரிவில் புதிதாக இணைந்திருந்தாள் . கல்லூரி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் சென்ற பின்னரே அவள் வந்து சேர்ந்திருந்தாள் . பொறியியல் நுழைவுத்  தேர்வெழுதி விட்டு, முடிவுகளுக்காய் காத்திருந்தாள் . அவளது மதிப்பெண்கட்கு வெளியூரில் உள்ள புகழ் பெற்ற பொறியியற் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், தங்களது பிள்ளையை தங்களை விட்டு வெகு தொலைவிலிருக்கும் கல்லூரிக்கு அனுப்பிவிட்டு, அவளது பிரிவால் கஷ்டப்பட அவளது பெற்றோர் விரும்பவில்லை. எனவே, அவளை தங்களது ஊருக்குப் பக்கத்திலிருக்கும் ...

Read More »

நன்றி

பி.தமிழ்முகில் நீலமேகம் பார்கவி  அந்த அடுக்குமாடிக்   குடியிருப்பிற்கு  வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. அவர்களது அடுக்குமாடித் தொகுதியில் மூன்று தளங்கள் இருந்தன. இவர்களது  வீடு முதல் மாடியில் இருந்தது. தரை தளத்தைத் தாண்டி முதல் தளத்துக்கு வருமுன் உயிரை கையில் பிடித்துக் கொண்டே தான் வருவாள் பார்கவி. அவளது மகள் மகி குட்டிக்கோ, அதைவிட பெரும் பயம். எப்போதும் அந்த தரை தளத்தினைத் தாண்டும் வரை அம்மாவை ஒண்டிக் கொண்டே தான் செல்வாள். இவர்களது பயத்திற்கான காரணம், தரைதளத்தில் இருக்கும் மூன்றாம் எண்  ...

Read More »

நினைவுகள் !!!

பி.தமிழ்முகில் நீலமேகம்   ஏடெடுத்து எழுதி வைக்க எத்துனையோ நினைவுகளுண்டு !!! நினைவுகளை எல்லாம் வண்ண மலர்ச்சரமாக்கி அம்மலர்களின் சுகந்த நறுமணத்தில் இலயித்திருக்க பொழுதேது ???     காற்றினில் கலந்து வந்து நாசியில் படிந்திடும் – மலரின் நறுமணம் போல் நினைவலைகளில் கலந்து வந்து நெஞ்சமதில் இனித்திடும் இனிய  இன்ப நினைவுகள் !!!     கதிரவனின் ஒளி பட்டு மெல்ல விலகி   ஓடும் பனித்திரை என – உள்ளமதில் படிந்த  துன்பச் சுவடுகளை துடைத்தெறியும் பேரலையென மகிழ்வான தருணங்களின் நினைவலைகள் !!! ...

Read More »

வினையான விளையாட்டு

    பி.தமிழ் முகில் நீலமேகம்       வனிதா, இளங்கலை இரண்டாமாண்டு பயிலும் மாணவி.அந்நகரிலிருக்கும் புகழ் பெற்ற கல்லூரியில் பயின்று வந்தாள். கல்வி, கலை என அனைத்துத் துறைகளிலும் திறமை வாய்ந்தவள்.குறும்புத்தனமும் சூட்டிகையும் நிறைந்தவளும் கூட.எப்போதும் கலகலப்பாய் வளைய வரும் அவளைச் சுற்றி எப்போதும் தோழிகள் கூட்டம் நிரம்பி வழியும். பந்தயம் கட்டி ஜெயிப்பதென்றால் அதிலோர் தனி ஆர்வம் அவளுக்கு.    அந்தக் கல்லூரியில் கட்டுப்பாடுகள் அதிகம்.நூலகத்திற்கு செல்வதாகட்டும், கணிப்பொறி மையத்தினை பயன்படுத்துவதாகட்டும், அடையாள அட்டை இல்லாமல் உள்ளே நுழைய எவருக்கும் அனுமதி கிடையாது.ஒருமுறை, தோழிகளிடம் ...

Read More »

பேனா

  பி.தமிழ் முகில் நீலமேகம் பாவலரின் கற்பனை எனும் கருவினில் உதித்த கவிதைக் கிள்ளைக்கு  உயிர் கொடுத்து உரு கொடுத்து பத்திரமாய் ஈன்றெடுக்கும் அன்பு அன்னை !!! உடலில் மை எனும் உதிரம் கொண்டு உழைத்து ஓடாய் தேய்ந்து உதிரமனைத்தும் சுண்டி சோகையான உடன் உதாசீனமாய் புறந்தள்ளுகிறோம் சற்றும் கவலையே இல்லாமல் !!! பாராட்டு சிம்மாசனம் எட்ட படிக்கட்டுகளாய் விளங்கி எழுத்துக்கு உயிர் தந்து எழுத்தாளரின் வெற்றிக்கு காரணியான பண்பான உழைப்பளிகளின் பாடு ஒரு நாளும் பாராட்டப்படுவதில்லை !!! மாற்றம் ஒன்றிற்கு வித்திட்டு உருவான ...

Read More »