பி.தமிழ்முகில் நீலமேகம்

 

ஏடெடுத்து எழுதி வைக்க

எத்துனையோ நினைவுகளுண்டு !!!

நினைவுகளை எல்லாம்

வண்ண மலர்ச்சரமாக்கி

அம்மலர்களின் சுகந்த நறுமணத்தில்

இலயித்திருக்க பொழுதேது ???

 

 

காற்றினில் கலந்து வந்து

நாசியில் படிந்திடும் – மலரின்

நறுமணம் போல்

நினைவலைகளில் கலந்து வந்து

நெஞ்சமதில் இனித்திடும்

இனிய  இன்ப நினைவுகள் !!!

 

 

கதிரவனின் ஒளி பட்டு

மெல்ல விலகி   ஓடும்

பனித்திரை என – உள்ளமதில்

படிந்த  துன்பச் சுவடுகளை

துடைத்தெறியும் பேரலையென

மகிழ்வான தருணங்களின் நினைவலைகள் !!!

 

 

மலரும்  நினைவுகளால்

மனதினில் உருவாகுமோர்

மகிழ்ச்சி ஊற்று !  – அது

இதழின் ஓரத்தில்

கொண்டு  வருமே

அழகானதோர்  புன்னகை கீற்று !!!

 

 

நினைவுகள் – அவை தாம்

ஆகுமே உள்ளக் காயங்கட்கு

நல்லதோர் அருமருந்தாய் !!

அவையும் தான் வருடுமே

துடித்த தவித்த உள்ளங்களை

மென்மையான மயிலிறகாய் !!!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “நினைவுகள் !!!

 1. நினைவுகள்…
  நினைவுகளை மலர்ச்சரமாக்கி நறுமணத்தில் இலயித்திருக்க …
  மலரின் நறுமணம் போல் இன்ப நினைவுகள் …
  துன்பச் சுவடுகளை துடைத்தெறியும் நினைவலைகள் …
  மகிழ்ச்சி ஊற்று கொண்டு  வருமே புன்னகை கீற்று …
  உள்ளக் காயங்கட்கு அருமருந்தாய் வருடுமே மயிலிறகாய் …
  நினைவுகள்…
  ஆகா, கவிதையும் படமும் அழகோ அழகு  தமிழ்முகில் .
  பாராட்டுக்கள்.

  அன்புடன் 
  ….. தேமொழி 

 2. மயிலிறகாய் வருடிய நினைவலைகளைச் சுமந்து வந்த அழகான கவிதை!!!.

  /////நினைவுகள் – அவை தாம்
  ஆகுமே உள்ளக் காயங்கட்கு
  நல்லதோர் அருமருந்தாய் !!
  அவையும் தான் வருடுமே
  துடித்த தவித்த உள்ளங்களை
  மென்மையான மயிலிறகாய் !!!/////

  மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள் சகோதரி!!!.

 3. மலரும் நினைவுப் பூக்களால்
  தொடுத்த
  மணக்கும் கவிதைச் சரம்..
  வாழ்த்துக்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *