Author Archives: editor9

பெண்களுக்கெதிரான குற்றங்கள்

— பி.எஸ்.டி.பிரசாத். ​மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா ! – என்று கவிமணி பாடிய நம் மண்ணில் சமீப காலமாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. “தாயருகில் சேயாகி, தலைவனிடம் பாயாகி, சேயருகில் தாயாகும் பெண்ணே !” – என்று கவியரசு வைரமுத்து அவர்கள் திரையிசையில், பெண்ணின் வாழ்க்கைச் சக்கரத்து மாற்றங்களை அருமையாகப் பாடியுள்ளார். ஆனால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று தெரியப்படுகின்ற அந்த நேரம் முதல், எல்லாக் கட்டத்திலும், தன் வாழ்வில் துன்பங்களை ...

Read More »

தீராமல் எரிகின்ற தீ – பாடல்

–பி.எஸ்.டி.பிரசாத். கீழ்காணும் ஷீரடி சாய்பாபா மீதான பாடல், சமீபத்தில் வெளியான எனது முதல் ஆடியோ சி.டி. யில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை மதிப்பிற்குரிய நித்யஸ்ரீ அவர்கள் பாடி பெருமை சேர்த்துள்ளார்கள். பாடலை மெட்டமைத்து, இனிமையான இசை சேர்ப்பு செய்துள்ளவர் திரு.குருபாத் அவர்கள். பாடலைக் கேட்க: https://soundcloud.com/psdp1/theeramal-erigindra   பாடல் வரிகள்: தீராமல் எரிகின்ற துனி என்னும் தீயாம் ! தீராத நோய் தீர்க்க நமக்கருளும் உதியாம் ! தீராத நோய் தீர்க்க நமக்கருளும் உதியாம் ! தீன தயாளனாம் சாயி ! தீன தயாளனாம் ...

Read More »

ரேவதிக்கு நாய்க் குட்டி வேணுமாம்…

–தாரமங்கலம் வளவன். பங்களாவின் கேட் அருகே நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை, மீனாட்சி ஏற்கனவே பார்த்திருக்கிறாள். தங்கள் அரிசி மண்டியில் குமாஸ்தாவாக வேலை செய்யும் சதாசிவத்தின் பெண் தான் அவள்.   பத்து வயது இருக்கும் என்று தோன்றியது. தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்த அந்த பெண்ணைப் பார்த்து, “ உள்ளே வா… தெறந்து தான் இருக்குது..” என்றாள் மீனாட்சி. வந்த பெண்ணைப் பார்த்து, “ நீ சதாசிவத்தின் பொண்ணு தானே.. பேரு என்னா…” மீனாட்சி கேட்டாள். “ ரேவதி..”  என்றாள் அந்த பெண். அந்த ...

Read More »

இசைப்பாடலிலே உன் உயிர்துடிப்பு – பகுதி 2

–மு. ஜெயலட்சுமி.   கண்ணதாசனின் கவிதையாளுகை “என்றன் பாட்டுத் திறத்தாலே, இவ்வையத்தைப் பாலித்திடல் வேண்டும்” என்றான் முண்டாசுக் கவிஞன்.  இதற்கு இலக்கணமாக இவ்வுலகம் பயன்பெறக்கூடிய வகையில் தம் பாடல்களால் மக்களை ரசித்து, அவர்கள் நினைவில் நீங்காது இடம் பெற்றவர் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் கண்ணதாசன் சங்கப்பாடல் முதல் சிற்றிலக்கியம் வரை – தாம் படித்த கவிதைகளின் சாரத்தையெல்லாம் காதல் பாடல்களாகத் திரையில் வடித்துள்ளார்.  இவரது கருத்தாழமிக்க பாடல்கள் ஒலிக்காத விழாக்களே இல்லையென்று சொல்லாம்.  அவற்றை நாம் இங்கு காண்போம். காதல் பெருமை: காதல் என்பது ...

Read More »

மங்காப் புகழோடு வாழும் இறவாக் கவிஞன்!

–நர்கிஸ் பானு. விஞ்சியவர்… மிஞ்சியவர்… நம் உள்ளங்களின் உணர்வுகளுக்கு தன் சொல்லால் உயிர் தந்த வித்தகர். படைப்பாளி. படைத்தவனுக்கே பட்டம் தரத் தேடுகிற உள்ளப் படைப்பாளி. தன்னிகரில்லா தமிழ்க்கவியரசர். கட்டுக்கு அடங்கா காட்டாற்று வெள்ளமென கவிஞரின் தமிழ்மொழி ஆற்றல், அளவுகோலுக்கு அடங்காதது. அவர்தம் தன்னம்பிக்கையோ மரணத்தையும் வென்றது. ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ அழியும் மானிடப் பிறவியில் அழியாப் புகழ் பெற்றவர். பல திரைப்படங்களில் ஒலிக்கும் பாடல்கள் கதாநாயகனையும் மீறி, கதையோட்டத்தையும் மீறி, நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்வது ...

Read More »

ஞாலம் போற்றும் தமிழ்க்காதலன்!

–ஜியாவுத்தீன். கண்ணதாசன்! காலத்தை வென்ற கவிஞன்! ஞாலம் போற்றும் தமிழ்க்காதலன்! இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே, எழுதும்போதே உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுவதுதான் நம்மீதான அவரின் தாக்கம் என்றால் மிகையில்லை. என் பார்வையில் என்றில்லை, யார் பார்வையிலும் ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் அடங்காத மகோன்னதக் கவிஞன்தான் கண்ணதாசன். பாரதியின் நாவில் சரஸ்வதி குடிகொண்டிருந்தாள் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். பாரதி மறைந்தபின் குடிகொள்ள இடமின்றித் தள்ளாடிக் கொண்டிருந்த சரஸ்வதி கண்ணதாசன் பிறந்தவுடன் அவரின் நாவில் குடிகொண்டுவிட்டாள் போலும். அதனால்தான் இம்மனிதனின் நா உதிர்த்த வார்த்தைகளெல்லாம் பாடல்களாயின, பாடல்கள் ...

Read More »

இசைப்பாடலிலே உன் உயிர்துடிப்பு – பகுதி 1

–மு. ஜெயலட்சுமி. திரையிசைப் பாடல்களில் திருக்குறள்   முன்னுரை: கவியரசு கண்ணதாசன் அவர்கள் திரைப்படங்களுக்குப் பாடல்கள் ஏராளமாகப் புனைந்ததன் மூலம் இன்றும் நிலைத்த புகழ் பெற்றவராய் விளங்குகிறார்.  பாமரரும் புரிந்துக்கொள்ளக் கூடிய எளிய தமிழில் நல்ல கருத்துக்கள் பலவற்றை உள்ளடக்கிப் பாடல்கள் படைத்துள்ளார்.  அவர் எழுதியுள்ள பாடல்கள் பலவும் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் வல்லமைப் பெற்றது.  ஒரு கவிஞன் தன் கவிதையைச் சிறப்படையச் செய்ய எண்ணினால் சொற்களை இடமறிந்து கையாளும் திறம் மிக்கவனாக இருத்தல் வேண்டும்.  கவிஞரவர்கள் சொற்களை இடமறிந்து பொருளோடு ...

Read More »

வாழ்க்கை நலம் – அணிந்துரை

சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ. சிவஞானம் அணிந்துரை தவத்திரு குன்றக்குடி அடிகளார், தாம் கொண்ட கோலத்திற்கேற்ப தலைசிறந்த ஆன்ம ஞானி. தெய்வ பக்தியோடு, தேச பக்தியும் கொண்டவராதலால் ஆன்மிகத்தோடு அறிவியலையும் கலந்து சிந்திக்க அவரால் முடிகிறது. பற்றுக்கள் பலவற்றை விட்டு துறவியான அடிகள், தமிழ்ப்பற்றை மட்டும் துறக்காதவராகி, தமிழர் வாழ்வில் எங்கும் எதிலும் தமிழே தலைமை தாங்க வேண்டுமென்ற கொள்கையுடையவராகி, அதற்காகப் பாடுபட்டும் வருகிறார். அடிகளார் பல்வேறு காலங்களில் பல்வேறு அரங்குகளில் வெளியிட்ட கருத்துக்கள் இந்நூல் வடிவம் பெற்று தமிழர் கைக்கு வருகிறது. அடிகளார் ...

Read More »

வாழ்க்கை நலம் – 60

குன்றக்குடி அடிகள் 60. நலமுற வாழ்வோம்! உடல் ஒரு அற்புதமான கருவி. உடம்பில் உயிர் இயங்குகிறது. உடற்கருவி வாய்க்காது போனால் உயிர் இயக்கம் இல்லை. நுகர்வு இல்லை. அறிவு இல்லை. உயிர் வாய்பாக அமையாது போனால் உடல் பயனற்றது. உடல் உயிருடன் இணைந்திருக்கும் பொழுதுதான் பெயர். உடலைவிட்டு உயிர் பிரிந்துவிட்டால் பெயர் போய்விடுகிறது. பிணம் என்ற புதுப்பெயர் வருகிறது. வாழ்வதற்கு இந்த வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும். முழுமையாக வாழ்தல் வேண்டும். உடல் – உயிர் சார்ந்த வாழ்க்கைக்குப் புலன்கள் ...

Read More »

வாழ்க்கை நலம் – 59

குன்றக்குடி அடிகள் 59. அறிவு அறிவு, மானுட வாழ்க்கையை இயக்கும் ஒரு சிறந்த கருவி. இன்று பலர் கருதுவது போல அறிவு என்பது தகவல்கள் அல்ல. செய்திகள் அல்ல. அறிவு ஒரு கருவி(instrument) துன்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் கருவி. செவி வழிக்கேட்கும் செய்திகளை, அவற்றில் உள்ள நன்மை, தீமைகளை ஆய்வு செய்வது அறிவு. ஏற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகளை மட்டும் ஏற்பது அறிவுடைமை. அதுபோல, இந்த உலகில் உள்ள பொருள்களைச் சார்ந்தது தான் வாழ்க்கை. சில பொருள்கள் நல்லன போலத் தோன்றும்! ஆயினும் தீமையே ...

Read More »

வாழ்க்கை நலம் – 58

குன்றக்குடி அடிகள் 58. ஆன்மாவின் உணவு! மனிதன் பிறப்பதில்லை; மனிதன் உருவாக்கப்படுகின்றான். இதுவே அறிவியல் உண்மை. மனிதனை உருவாக்குவதில் கல்வி வகிக்கும் பாத்திரம் மிகமிகப்பெரியது. கல்வியின் இலட்சியமே மனிதனை உருவாக்குவதுதான்! அதனால் மனிதனை உருவாக்கும் கல்வியினும் விழுமியது இல்லை. மனிதனின் பொறி, புலன்களைப் பயனுடையனவாக்கி வாழ்க்கையை வளர்த்து விளக்கமுறச் செய்வது கல்வியே! மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். மனிதனின் ஆற்றல் கல்வியின் மூலமே இனங்காணப் பெற்றுச் செயலாக்கத்திற்குப் பயன்படு நிலைக்குக் கொணரப்படுகிறது! ஏன் கல்வியே ஆன்மாவின் சிறந்த உணவு. திருக்குறள் ‘கற்க’ என்று பேசுகிறது. ஆம்! ...

Read More »

வாழ்க்கை நலம் – 57

குன்றக்குடி அடிகள் 57. “மெய்ப்பொருள் காண்பதறிவு” இந்த உலகம் பொருள்களால் ஆயது. பொருள்கள் தம்முள் வேறுபட்ட தனித்தன்மைகள் உடையன. சில பொருள்கள் வேறுபட்டு விளங்கினாலும் பிறிதொரு பொருளுடன் ஒன்றும் இயல்புடையன. சில தனித்தன்மை பெற்றே விளங்குவன. மாந்தர் வாழ்க்கை பொருள்களுடன் தொடர்புடையது வாழ்வின் துறைதோறும் வாழ்வு முழுவதும் பொருள்களுடன் யாதானும் ஒரு உறவு இல்லாமால் வாழ்க்கை அமைவதில்லை; அமையாது; அமைதல் முடியாது. அதனால் தான் திருக்குறள், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றது. பொருள்களால் ஆயது வாழ்க்கை. இந்தப் பொருள்களை பொருளின் தன்மைகளை உள்ளவாறறிந்து அப்பொருள் ...

Read More »

வாழ்க்கை நலம் – 56

குன்றக்குடி அடிகள் 56. அன்பு ஈனும் ஆர்வம் மானிட வாழ்க்கை நலமாக, இன்பமாக இயங்க அன்பு தேவை. கடவுள் மனிதனுக்கு என்று தனியே அளித்தது அன்பு ஒன்றுதான். அன்பு, உள்ளங்களை இணைக்கும் – ஆற்றலுடையது. “ஆற்றல் மிக்க அன்பு” என்பார் அப்பரடிகள். இந்த அன்பு வளருந்தன்மையுடையது. அன்பின் உணர்ச்சிக்கு எல்லை கிடையாது; நிபந்தனை கிடையாது. இந்த அன்பு தம்முடன் பழகுவோரின் இயல்புகளை அறிவது, அவர்தம் இயல்புக்கு ஏற்றவாறு தம் பழக்கங்களை, பழகும் நெறிமுறைகளை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வதற்காக! தம்முடன் பழகுவோரின் விருப்பங்களை அறிந்து அவர்தம் ...

Read More »

வாழ்க்கை நலம் – 55

குன்றக்குடி அடிகள் 55. நாள் எனும் வாள்! ஒன்றின் தொகுதி தரும் உணர்வினை, படிப்பினைப் பகுதி தருவதில்லை. பகுதிகள் அற்பமாகக் கருதப் பெறுவது இயல்பாக இருக்கிறது. பல பகுதிகள் தொகுதியாகிறது என்ற உண்மையையும், பகுதி தொகுதியிலிருந்து பிரிக்கப்படாதது என்பதையும் நம்மனோர் உணர்வதில்லை. ஏன் தொகுதிகளுக்கு மதிப்புயர்கிறது? கடற்பரப்பின் தண்ணீர் கணக்கற்ற தண்ணீர்த் திவலைகளின் தொகுப்பேயாகும். அக்கடற் பரப்பிலிருந்து ஒரு திவலை பிரியுமானால் அந்தத் திவலை தன் வடிவத்தை – தன்னை இழந்து விடுகிறது. அதுபோலத்தான் பகுதிகளுக்கு மதிப்பீடும் மிக மிகக்க குறைவு! ஆயுளும் அற்பமே! ...

Read More »

வாழ்க்கை நலம் – 54

குன்றக்குடி அடிகள் 54. எளிய வாழ்வியல் உண்மை! ஒருவர் நமக்குத் தீமை செய்தால் நாம் திரும்ப அவருக்குத் தீமை செய்தல் பழி வாங்குதல் ஆகும். இந்த பழிவாங்கும் உணர்வு இயல்பாகவே மாந்தரிடம் அமைந்துள்ளது. ஆயினும், நல்லொழுக்கம், பண்பாடு என்பது பழி வாங்காமையேயாகும். ஏனெனில், உணர்ச்சி வசப்படுதல் என்பது இயல்பு ஆயினும் பழிவாங்குதலிலும், பொறுத்துக் கொள்ளுதல் கடினமான காரியம். பழிவாங்கும் நிகழ்வு சங்கிலித்தொடர் போலத் தொடரும். ஆனால் பொறுத்தாற்றும் பண்பு தீமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடும். அற்ப மனமுடையவர்கள் பழிவாங்குவர். திருக்குறள் பழிவாங்குதலை வெறுக்கிறது; வெறுத்து ...

Read More »