வாழ்க்கை நலம் – அணிந்துரை

1

சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ. சிவஞானம்

அணிந்துரை

தவத்திரு குன்றக்குடி அடிகளார், தாம் கொண்ட கோலத்திற்கேற்ப தலைசிறந்த ஆன்ம ஞானி. தெய்வ பக்தியோடு, தேச பக்தியும் கொண்டவராதலால் ஆன்மிகத்தோடு அறிவியலையும் கலந்து சிந்திக்க அவரால் முடிகிறது. பற்றுக்கள் பலவற்றை விட்டு துறவியான அடிகள், தமிழ்ப்பற்றை மட்டும் துறக்காதவராகி, தமிழர் வாழ்வில் எங்கும் எதிலும் தமிழே தலைமை தாங்க வேண்டுமென்ற கொள்கையுடையவராகி, அதற்காகப் பாடுபட்டும் வருகிறார்.

அடிகளார் பல்வேறு காலங்களில் பல்வேறு அரங்குகளில் வெளியிட்ட கருத்துக்கள் இந்நூல் வடிவம் பெற்று தமிழர் கைக்கு வருகிறது. அடிகளார் ‘மெய்யறிவு’ நிலையில் மட்டுமல்லாமல், விஞ்ஞான அறிவிலும் தமிழ் தலைசிறந்து விளங்க வேண்டுமென விரும்புகிறார். அதனை பல்வேறு கோணங்களில் நின்று வெளியிட்டு தமிழர்களுக்கு வழிகாட்டுகிறார்.

அறிவியற் கலைகளைப் பயிற்றுவிக்கும் கோயில்களான பல்கலைக் கழகங்களிலே இன்னமும் தமிழுக்கு இடமில்லை. அதாவது, தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களிலே அனைத்துப் பாடங்களிலும் தமிழில் போதிக்குங்கால், தமிழில் அறிவியல் நூல்கள் பெருகும். இந்தக் கொள்கையிலே நாங்கள் ஒன்றுபட்டவர்கள். இதனைச் சாதிக்க அரசின் துணை தேவைப்படுகிறது.

அடிகளாரும், நானும் அத்துறையில் ஒன்றபட இறையருள் கூட்டுவிக்குமாக!

நூலை விரிவாகப் படிக்கப் படிக்க எனது அறிவு விரிவடைகிறது. ஒவ்வொரு தமிழரும் எனது நிலையை அடைய இந்நூல் பயன்படுமாக!

கலைவாணி புத்தகாலயத்தின் உரிமையாளர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் நன்றாகப் பதிப்பித்துள்ளார்.

அடிகளாருக்கு என் மனமுவந்த நன்றி. பதிப்பகத்தாருக்கு என் பாராட்டு.

ம. பொ. சிவஞானம்
சென்னை – 18

28-12-1992

 

“வாழ்க்கை நலம்”
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
கலைவாணி புத்தகாலயம்
சென்னை -17, முதற்பதிப்பு 1992

_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

Project Madurai:  http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0467.html

மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வாழ்க்கை நலம் – அணிந்துரை

 1. இன்றுடன்… இப்பதிவுடன் ….இப்பகுதி நிறைவு பெறுகிறது.

  ஒரு நூலையே என்னால் தட்டச்ச முடியுமா என்று  மலைத்த என்னை ஊக்குவித்து ஆதரவும் அளித்த வல்லமை ஆசிரியர் பவளசங்கரி அவர்களுக்கு மிக்க நன்றி.

  இந்த மின்னாக்கம்   இப்பொழுது மதுரை திட்ட நூல்களில் (http://www.projectmadurai.org/pmworks.html) ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை மனமகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறேன்.
  பார்க்க…
  http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0467.html
  http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0467.pdf

  தொடர்ந்து படித்து தவத்திரு அடிகளார் அவர்கள் வழங்கிய அறிவுரைகளைப் பெற்றுக் கொண்டமைக்கு வாசகர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நன்றி….வணக்கம் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.