–பி.தமிழ் முகில்.

thmizmukil

தகதகவென  ஜொலிக்கும்

தங்கக் கிரீடம் சுமந்து

சூரியப் பெண்ணவள்

வான் சோலையில் உலவ

எதிர்பட்ட  மேகக்  காதலனை

கண்டதும் மெல்ல

நாணமதுவும் ஆட்கொண்டு விட

தன்  சூரியக் காதலியை

மேகக் காதலன்

ஆரத்  தழுவிக்  கொள்ள – அவளோ

வெட்கத்துடன் சிறு  கீற்றாய்

புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு

மெல்ல  தன்  முகம் மூடிக் கொள்ள

ஆங்கே  அரங்கேறுகிறது

அந்திப் பொழுதிலோர்

நிலை மாறாக்  காதல் !

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நிலை மாறாக் காதல் !

  1. நிலவைத்தான் இதுவரை பெண்ணாக பாவித்து கவிதைகள் வந்துள்ளன. எனக்கு தெரிந்து இந்தக் கவிதையில் தான் முதன்முதலாக சூரியனை பெண்ணாக பாவித்து கவிஞர் எழுதியுள்ளார்.

    முரன்பாடுகளை உண்டாக்குவதுதான் மாற்றம். அந்த வகையில் இது வித்தியாசமான கவிதை.பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *