பி.தமிழ் முகில் நீலமேகம்

பாவலரின் கற்பனை எனும்
கருவினில் உதித்த
கவிதைக் கிள்ளைக்கு 
உயிர் கொடுத்து
உரு கொடுத்து
பத்திரமாய் ஈன்றெடுக்கும்
அன்பு அன்னை !!!

உடலில் மை எனும்
உதிரம் கொண்டு
உழைத்து ஓடாய் தேய்ந்து
உதிரமனைத்தும் சுண்டி
சோகையான உடன்
உதாசீனமாய் புறந்தள்ளுகிறோம்
சற்றும் கவலையே இல்லாமல் !!!


பாராட்டு சிம்மாசனம் எட்ட
படிக்கட்டுகளாய் விளங்கி
எழுத்துக்கு உயிர் தந்து
எழுத்தாளரின் வெற்றிக்கு காரணியான
பண்பான உழைப்பளிகளின்
பாடு ஒரு நாளும்
பாராட்டப்படுவதில்லை !!!


மாற்றம் ஒன்றிற்கு வித்திட்டு
உருவான திர்மானத்தில்
வேள்வித்தீ என
மக்கள் உள்ளங்களில் 
கோலோச்சும் சிந்தனைகள்
எழுதுகோல் துணைகொண்டு
உருவாக்கப்பட்டவை அன்றோ ???

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “பேனா

 1. பேனாவைப் பாராட்டும் பா நயம் அருமை. குறிப்பாக,

  //வேள்வித்தீ என
  மக்கள் உள்ளங்களில்
  கோலோச்சும் சிந்தனைகள்
  எழுதுகோல் துணைகொண்டு
  உருவாக்கப்பட்டவை அன்றோ ??? //

  என்ற வரிகள் அருமை. வாழ்த்துக்கள் திருமதி தமில்முகில் நீலமேகம் அவர்களே!

 2. அன்று புரட்சிகள் உருவானதெல்லாம் மறைந்திருந்த புரட்சியாளர்கள் வெளியாக்கிய எழுத்துக்களால் தான். அத்தனை பலம் இந்த எழுதுகோலுக்கு. நல்ல கவிதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *