நாசா ஏவிய விண்வெளிக் கணை திமார்போஸ் விண்பாறை மேல் மோதி சுற்றுப் பாதை மாறியுள்ளது

0

சி. ஜெயபாரதன், கனடா

Nasa‘s asteroid-deflecting DART spacecraft successfully slammed into its target on Monday, 10 months after launch. The test of the world’s first planetary defense system will determine how prepared we are to prevent a doomsday collision with Earth.

https://www.dailymail.co.uk/sciencetech/article-11203413/NASAs-asteroid-deflecting-DART-mission-explained.html

https://www.dailymail.co.uk/sciencetech/article-11203413/NASAs-asteroid-deflecting-DART-mission-explained.html

WHAT IS DART?

DART was the first-ever mission dedicated to investigating and demonstrating one method of asteroid deflection by changing an asteroid’s motion in space through kinetic impact.

விண்பாறை மீது நேரடியாக மோதி வேறு பாதைக்கு நகர்த்தும் நாசாவின் முதல் முயற்சியில் வெற்றி.

2022 செப்டம்பர் 26 ஆம் தேதி ஏவிய டார்ட் [DART – DOUBLE ASTROID RE-DIRECTING TEST SPACECRAFT] விண்கணை முதன்முதல் பூமியிலிருந்து 7 மில்லியன் மைல் [11 மில்லியன் கி.மீ] தூரத்தில் சூரியனைச் சுற்றிவரும், திமார்போஸ் / திடிமாஸ் [Dimorphos / Didymos] என்னும் இரட்டை விண்பாறைகளில் ஒன்றை மோதி, அவற்றின் பாதையை மாற்றி யுள்ளது. இவற்றில் திடிமாஸ் பெரியது. அதைச் சுற்றிவரும் திமார்போஸ் சிறியது. டார்ட் விண்கணை மோதிய விண்பாறை சிறியது. விண்கணை மோதியால் பாதை எவ்விதம் மாறியுள்ளது, என்று விஞ்ஞானிகள் விண்ணோக்கிகள் மூலம் கணித்து வருகிறார் நாசாவின் இந்த முதல் விண்வெளி முயற்சி எதிர் காலத்தில் பூமியை எதிர்நோக்கி மோத வரும் விண்பாறைகளைத் திசை திருப்பும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடையும்.

டார்ட் விண்கணை 2021 நவம்பர் 24 இல் ஸ்பேஸ் X ஃபால்கன் -9 [SPACEX FALCON -9] ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. விண்பாறையில் மோதிய வேகம் சுமார் மணிக்கு 14,000 மைல். இந்த விண்வெளிச் சாதனை “பூகோளப் பாதுகாப்பு” [Planetary Defense] என்னும் அகில நாட்டு கூட்டுழைப்பில் நிதி செலவழிக்கப் படுகிறது. இந்த இரட்டை விண்பாறை போக்கு முறைகளைக் கண்காணித்து வருபவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பௌதிக வினை ஆய்வுக் [Johns Hopkins Applied physics Laboratory Team] குழுவினர். இந்த விண்வெளித் திட்டத்துக்கு நிதிச் செலவு 308 மில்லியன் டாலர். விண்பாறையின் அகலம் : 525 அடி, டார்ட் விண்கணையின் எடை 570 கி.கிராம்.. அடுத்து 2024 ஆண்டில் ஏவப்படும் விண்சிமிழ் 2026 இல் விண்பாறையுடன் இணைந்து ஆய்வுகள் புரியும். விண்கணை மோதி விண்பாறைகள் பாதைகள் மாற்றம் இப்போது கணிக்கப்படும்.

************************************

1. https://www.dailymail.co.uk/sciencetech/article-11203413/NASAs-asteroid-deflecting-DART-mission-explained.html

2.https://ca.news.yahoo.com/nasa-dart-mission-live-space-115530230.html

3.https://jayabarathan.wordpress.com/2019/04/27/hayabusa-2-impactor-on-asteroid/

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.