யாக்கோபும் தூக்குதண்டனையும்!
-சேசாத்திரி பாஸ்கர்
யாக்கோப் தூக்கில் இட்டதற்கு எல்லோரும் எம்பி குதிக்கிறார்கள். சரி, இவர்களின் ஹுமன் ரைட்ஸ் இத்தனை வருஷம் என்ன செய்தது ? வன்முறையைத் தடுக்க முடிந்ததா ? இவர்கள் வன்மம் ஒரு பக்கம், இவர்கள் கோபம் ஒரு பக்கம். இத்தனை உயிர்களைப் பிரித்த இவர்களுக்கு மன்னிப்பு கொடுத்தால் மக்கள் அவனைக் கல்லடித்து கொன்று விடுவார்கள். நம் ’செகுலர்’ என்ற அன்புப் போர்வை இவர்கள் துப்பாக்கி வைத்து கொள்ளும் மறைவிடமா? சட்டத்திற்கு என்ன மரியாதை?தூக்கில் போட மாட்டார்கள் என்ற தைர்யம் தானே இவர்களை மேலும் மேலும் தப்பு செய்யச்சொல்கிறது?
அட, மக்களைக் கொல்லும்போது ஒரு சின்ன புத்தி கூடவா எட்டி பார்கவில்லை? இது தப்பு ஆச்சே என்று ஒரு நொடி கூட யோசிப்பு இல்லையா ? இதை எல்லாம் மீறி அவர் தவறு செத்தால் அவர் எந்த மன்னிப்புக்கும் அருகதை அற்றவராகி விடுகிறார். ஒரு காவல் துறையோ அல்லது அரசாங்க அதிகாரியோ தாக்கப்பட்டால் அதை தவிர்க்கச் சுட்டால் அது கொலையா? அது போல் பெரிய தப்புக்கு மரண தண்டனை அவசியம்.
தூக்கில் போட்டால் சிலருக்கு வலிக்கிறது. அப்ப என்கவுன்ட்டர் தான் ஒரே வழியா? சரி… இவன் தூக்கு நம் கலாசாரத்திற்கு ஒத்து வாராது. நம் பூமி பரோபகார பூமி; சகிப்புக்குப் பேர் போனது. எத்தனை நாளைக்கு?
இந்தத் தூக்கிலிடும் விஷயம் பக்கத்துக்கு நாடுகளுக்கான செய்தி. எவ்வளவோ விஷயத்தை நாம் மறக்கிறோம். இதையும் கொஞ்சம் கஷ்டப்பட்டு மறப்போம். கொசுவைத் தட்டும்போது பறக்கும்; மூட்டைப் பூச்சியை நசுக்கவில்லயா? தப்பு செய்ய எண்ணும் நமக்கும் இது ஒரு பாடம்! செத்து போனது பகத் சிங் அல்ல; கட்டபொம்மனும் அல்ல!