Author Archives: எஸ்,வி.வேணுகோபாலன்

குழந்தைமை உள்ளம், உன்னத நட்பின் இலக்கணம்

எஸ் வி வேணுகோபாலன் கிரேசி மோகன் மறைவுச் செய்தி கிடைத்து, உடனே, இல்லை, அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார், தவறுதலாக யாரோ கொடுத்த செய்தியை உங்களுக்குத் தெரிவித்தேன், மன்னிக்கவும் என்று அதே நண்பர் குறுஞ்செய்தி போட்டிருந்தார். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், மோகன் காலமாகிவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒரே ஒரு முறை கூட நேரில் பரஸ்பரம் சந்தித்திராதபடியே, உயிரோட்டமாக ஆத்மார்த்தமாகப் பழகிய கடந்த நான்காண்டு நட்பு இனி நினைவில் மட்டுமே நிற்பதாயிற்று. நான் தான் இன்னார் என்று பார்த்து அறிமுகம் செய்துகொள்ள ...

Read More »

எல்லோருக்குமான உலகத்தை நோக்கி….

எஸ் வி வேணுகோபாலன்   குழந்தைகள் நம்மைப் பரவசம் கொள்ள வைப்பவர்கள். சிரிக்காத உதடுகளையும் கீறி அதில் புன்னகை பூக்கவைக்கும் மந்திரம் குழந்தைகளுக்கு வாய்த்திருக்கிறது. கனத்த இதயத்தை இலேசாக்கிவிடும் வித்தை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல்’, நமது நெஞ்சம் கடுத்தது காட்டும் கண்ணாடி அவர்களது கண்கள்! குழந்தைகள் தினத்தில் மட்டுமல்ல, எப்போதுமே குழந்தைகளைக் கொண்டாடுவோம்! எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான சமூக, பொருளாதார பின்னணியில் பிறப்பதில்லை. அவர்களது எதிர்காலத்தை அவரவர் வாழ்விடமும், சூழலும் தீர்மானிக்கின்றன. அதுவும் பெண் குழந்தைகள் எனில், பிறக்க ...

Read More »

காத்திருக்கிறோம் அந்தக் காலத்திற்கு….

உலக மகளிர் தின வாழ்த்துக்களுடன்… எஸ் வி வி மார்ச் 8: உலக பெண்கள் தினம் காத்திருக்கிறோம் அந்தக் காலத்திற்கு…. எஸ் வி வேணுகோபாலன் தலைமை ஆசிரியராக இருந்த தாத்தா வாங்க இயலாது மரித்துப்போன ஓய்வூதியத்தைப் போராடி வென்றெடுத்த பாட்டியின் நினைவில் பகிர்கின்றோம் மகளிர் தின வாழ்த்துக்களை! படிப்பில், விளையாட்டில், வேலையிடத்தில் அசாத்திய சாதனைகளை ஓசையின்றி நிகழ்த்திக் கொண்டிருக்கும் பெண்களது பங்களிப்பின் பெருமிதம் பொங்க உரைக்கிறோம் மகளிர் தின வாழ்த்துக்களை! சவால்கள் சூழ்ந்த களத்தில் மிரட்சியின்றி வெளிப்பட்டு மிக சாதாரணமாகக் கடந்துபோகும் வீராங்கனைகளின் பெயரில் ...

Read More »

மாமேதை காரல் மார்க்சின் 200ஆவது பிறந்த தினம்

அன்பானவர்களுக்கு நானிலமும் தான்வாழ நான்மறைகள் தாம்வாழ மாநகரின் மாறன் மறைவாழ – ஞானியர்கள் சென்னியணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே இன்னுமொரு நூற்றண்டிரும் என்றும் அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ சடகோபன் தண்டமிழ்நூல் வாழ – கடல்சூழ்ந்த மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும் என்றும் ஆன்மிகத் தொண்டாற்றிய பெரியோரை “இன்னுமொரு நூற்றாண்டிரும்” என்று வாழ்த்துவது ஒரு மரபு. உழைப்பின் சுரண்டல் குறித்த தத்துவத்தை உலகுக்கு வழங்கிய மனிதரது சிந்தனைகளுக்கு அழிவில்லை. மனிதகுல விடுதலைக்காக சிந்தித்த மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களது இருநூறாவது ஆண்டு ...

Read More »

2009ல் புத்தகங்களோடே கடந்த ஒரு நாள்

எஸ் வி வேணுகோபாலன் மே 24ம் தேதி எங்கோ ரயில் நின்ற ஓசை கேட்டு அலறியடித்துக் கொண்டு எழுந்து பார்த்தபோது வண்டி மதுரை நிலையத்தில் நின்றிருந்தது. மீண்டும் கண் அசந்தாயிற்று. பின்னர் எழுந்து பார்க்கையில் சாத்தூர். அப்புறம் கோவில்பட்டி வரவும் அங்கே இறங்கினால், தமுஎகச பொதுச் செயலாளர் தோழர் ச தமிழ்ச்செல்வன் அவர்களது மகன் திருமணத்திற்கு வந்த வேறு சில தோழர்களும் கண்ணில் தட்டுப்பட வெளியில் வந்ததும் வழக்கம் போல் முதல் வேலையாக நாளேடுகள் வாங்கியாயிற்று. தங்குமிடம் சேர்ந்தபிறகு அருகிருந்த தேநீர்க் கடை அருகே ...

Read More »

சிரிப்பாய்ச் சிரிக்கட்டும் வாழ்க்கை

எஸ் வி வேணுகோபாலன் சிரிக்கச் சொன்னால் காசு கேட்கும் சீமைச்சாமி…என்பது கண்ணதாசனின் ‘சாமியிலும் சாமி இது ஊமைச்சாமி’ (எங்கள் தங்க ராஜா) என்ற திரைப்படப் பாடலில் வரும் ஒரு வரி. உம்மு னு இருப்பது, உர்ர்ன்னு பார்ப்பது, வள்ளுன்னு பிடுங்கி எடுப்பது என பலருக்கும் அடையாள மொழி உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அன்றாட வாழ்க்கையின் வேகமான தாளகதி ஓட்டத்தில் சிக்கித் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள். இறுக்கமான முகங்களும், எப்போதும் பதட்டமான வேலைமுறையும்,எதிலும் பொருந்தாத ஓட்டமுமாகக் கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுதுகளில் அவர்களைச் சற்றே ...

Read More »

இசைந்திடும் இரவும் உறங்கா இசையும்

எஸ்.வி. வேணுகோபாலன் எழுபதுகளின் இரவுகள் சங்கீதப் பிசாசுகளுக்கானவை. புதன் கிழமை இரவு பத்து மணி சென்னை வானொலியிலிருந்து ஒலிபரப்பாகும் பழைய பாடல்களுக்காக விழித்திருக்கும் இதயங்களுக்கானது. பகலில் ஒலிக்கும் ஒரு பாடல், இரவில் ஒலிக்கையில் புது மெருகோடு காதில் இறங்குவதன் ரசம் அதைக் கேட்டுக் கிறங்கியவர்களுக்குத்தான் பிடிபடும். யார் வேண்டுமானாலும் யாரையும் காதலிக்கட்டும். யாரும் யாரோடும் கட்டிப்புரண்டு சண்டை போடட்டும். யாரை நினைத்தும் யாரும் உருகித் திணறித் திண்டாடட்டும். ஆனால் அதை தயவு கூர்ந்து பாடலாக்கி இசையூட்டி எங்கள் உள்ளத் திருவோட்டில் போடுங்களய்யா, நாங்கள் வாழ்ந்துகொள்கிறோம் ...

Read More »

சிறு நெருப்பின் பெருந்துளி !

ஃபிடல் காஸ்ட்ரோ எஸ் வி வேணுகோபாலன் கொடுங்கோலன் பாடிஸ்டாவை உறக்கம் தொலைக்கச்செய்து இறுதி மோதலில் வீழ்த்தவும் செய்தவனே மனிதகுல விடுதலைக்கான வேலைகள் கூடிக் கொண்டிருக்கவே செய்தது உனக்கு உலகளாவிய புரட்சிகர இதயங்களுக்கு நம்பிக்கைக் குருதி பாய்ச்சிக் கொண்டிருந்தாய் ஏகாதிபத்தியத்தின் கனவுகளில் ஊடுருவிக் கலகம் விளைவித்துக் கொண்டிருந்தாய் உன் அடிச்சுவடுகளை அந்நாளில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர்கள் புரட்சி வேட்கை கொண்டோர் மட்டுமன்று தீர்த்துக் கட்டத் துடித்த சதிகார சக்திகளும்தான் ! இளமையில் புகட்டப்பட்டிருந்த விவிலியம்* விரவிய இலக்கிய மொழியில் (*விவிலியம் = பைபிள்) மதங்களுக்கு அப்பாற்பட்ட ...

Read More »

எந்தக் கண்ணன் அழைத்தானோ….

அஞ்சலி: டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா எஸ் வி வேணுகோபாலன் எட்டு வயதில் விஜயவாடாவில் தமது முதல் கச்சேரியை நிகழ்த்திய சிறுவன் முரளி கிருஷ்ணாவின் அசாத்திய இசை நுட்பத்தில் திளைத்த ஹரிகதா பாகவதர் எம் சூரியநாராயண மூர்த்தி அவர்கள், அவரை பாலமுரளி கிருஷ்ணா ஆக்கினார். அதன் பிறகு தொடர்ந்து தமது திறமையை வளர்த்தெடுத்து வந்த அற்புத இசை மேதை டாக்டர் எம் பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு, கர்நாடக இசை உலக வரலாற்றின் முக்கிய பாகம் ஒன்றின் நிறைவைக் குறிப்பதாகும். முதுமையிலும் கூட ஒரு குழந்தையின் ...

Read More »

இந்தப் பூமி முழுவதும் விடியும் வரை………………..!

நவம்பர்7: புரட்சியின் நூற்றாண்டு எஸ் வி வேணுகோபாலன் இருபத்தைந்து ஆண்டுகளாவது ஆகியிருக்கும்…முதன்முதல் அந்த வித்தியாசமான பல்லவியை ஓர் அற்புத இசைப் பாடகன் குரலில் கேட்டு! ‘எங்களைத் தெரியலையா, இந்த இசையைப் புரியலையா?’ என்று கேள்விகளைத் தொடுத்துத் தொடங்கும் அந்த உயிர்த்துடிப்பான பாடலைப் பின்னர் நமது பாடகர் கரிசல் குயில் கிருஷ்ணசாமி எப்போது எங்கு பாடும்போதும் அதே சிலிர்ப்போடு கேட்டுக் கொண்டிருக்கிறேன்… பரிணாமன் எழுதிய அந்தப் பாடலின் பயணம், பிறகு, ‘திங்கள் ஒளியினில் துயில்வோரே – தினம் சூரியத் தீயினில் உழைப்போரே ….’ என்று மேலெழுந்து ...

Read More »

எல்லோருக்குமான கொண்டாட்ட தினம்!

செப் 5: ஆசிரியர் தினம் எஸ் வி வேணுகோபாலன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல் நாள், முதலாம் வகுப்பில் உள்ளே போய் நுழைந்த நேரம் நடுங்க ஆரம்பித்த காலும் கையும் நிற்கவில்லை. படபடப்பு மிகுந்து கொட்டிய வியர்வை கொட்டியபடியே. எத்தனை எத்தனை ஒத்திகை, எத்தனை முறை படித்துப் படித்து மனப்பாடம் ஆகியிருந்த சைக்காலஜி பாடம் ஒற்றைச் சொல் ஒழுங்காக வாயில் வரவேண்டுமே…ஹுஹும்…எதிரே தன்னைவிட வயது அதிகமான மாணவர்கள் (அதாவது ஆசிரியர்களாகப் போகிறவர்கள்!)….எப்படித்தான் நாற்பது நிமிடங்கள் ஓடி முடிந்ததோ தெரியாது, மணியடிக்கக் காத்திருந்தது மாதிரி அந்த ...

Read More »

ஆனந்த யாழை மீட்டிய தோழனே…!

-எஸ் வி வேணுகோபாலன்     ஆகஸ்ட் 1995ல் கணையாழி இலக்கிய இதழ்,  தமன் அறக்கட்டளையின் அரவணைப்பில் தனது பயணத்தைத் தொடரத் தொடங்கிய நிகழ்விற்குக் கல்லூரி மாணவர் ஒருவரும் அழைப்பிதழோடு வந்து கூட்டத்தின் பகுதியாக அமர்ந்திருந்தார். எழுத்தாளர் சுஜாதா பேசுகையில், மாதா மாதம் கவிதைகளைத் தேர்வுசெய்து தரும் பொறுப்பைத் தாம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அன்று வெளியாகும் இதழில் தாம் தேர்வுசெய்து பிரசுரமாகி இருக்கும் தமக்கு மிகவும் பிடித்த கவிதையை வாசிக்கப் போவதாகவும் குறிப்பிடும்போதுகூட அந்த மாணவர் அறிந்திருக்கவில்லை, அடுத்து என்ன நடக்குமென்று…! சுஜாதா வாசிக்க ...

Read More »

தாத்தாவின் டைரி குறிப்புகள்

எஸ். வி. வேணுகோபாலன் 2011 தீக்கதிர் புத்தக மேசை பகுதியில் வெளிவந்த நூல் ரசனை கட்டுரை இது… மதுரை சுப்பாராவ் அவர்களது அருமையான சிறுகதை தொகுப்பின் மீதான இந்த எழுத்துக்களை, அதன் தொடக்கத்தில் எழுதி இருந்த மேற்கோள் கவிதையை திண்டுக்கல் தோழர் ஆர் எஸ் மணி நினைவூட்டிக் கேட்கவும் மீண்டும் அசைபோட நேர்ந்தது… உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்…. தாத்தாவின் டைரி குறிப்புகள் ரசனையைத் தூண்டி சிந்தனையில் ஆழ்த்தும் வாசிப்புப் பயணம் என்றோ வசித்த ஒரு தெருவைக் கடப்பது அத்தனை எளிதல்ல. ஒரு தெருவைக் கடப்பது ...

Read More »

ஒழிக்காமல் விடுவதில்லை………

எஸ் வி வேணுகோபாலன் மிக அண்மையில் செல்ல மகனுடன் மெரீனா கடற்கரைக்குச் சென்றிருந்தேன்… மணலில் கால் வைத்துக் கடலை நோக்கி முதலடி எடுத்து வைக்கையில் நந்தா கேட்டான், “உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை இது தெரியுமா?’ என்று. அப்படியா, ஆசியாவில்….என்று இழுத்தேன். இல்லை, உலகிலேயே இரண்டாவது என்று மீண்டும் அழுத்திச் சொன்னவன், அதை நான் எப்போது ஒப்புக் கொண்டேன் என்பதுதான் முக்கியம் என்று தொடர்ந்தான். சில மாதங்களுக்குமுன் ஒரு தொண்டு நிறுவனத்தின்சார்பில் சென்னை கடற்கரையைத் தூய்மை செய்வோம் என்று நடந்த இயக்கத்தில் தான் பங்கேற்றதை ...

Read More »

வெயிலின் ஜனநாயகம்

    எஸ் வி வேணுகோபாலன் வெயிலால் வெயிலுக்காக வெயிலே நடத்துகிறது கோடையின் ஆட்சியை எந்த உடை அணிந்தாலும் வெயில் போர்த்தி வழியனுப்பி வைக்கிறது வீடு எந்தப் பொருள் வாங்கப் போனாலும் மறவாது வெயில் வாங்கித் திரும்புகிறாள் இல்லத்தரசி எங்கிருந்து புறப்பட்டு எங்கெங்கோ அலைந்து எங்காவது நிறைவு செய்யப்படும் எல்லாப் பயணங்களுக்கும் இலவச பாதுகாப்பு அளிக்கிறது வெயில் தனக்கு எதிராக விரியும் குடைகளிடம் மான அவமானம் எல்லாம் பாராது வாய்க்கிற பகுதிக்கெல்லாம் சூடு போட்டுக் கடமை ஆற்றுகிறது வெயில் ஓட்டமாய்ப் பறக்கும் குழந்தையோடு ஓடோடிச் ...

Read More »