அன்பினிய நண்பர்களுக்கு,

வணக்கம் . நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த, வல்லமை மின்னிதழும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும் இணைந்து வழங்கும் கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டியின்  நடுவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் தீர்ப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

kamarajar

தமிழருவி மணியன்

வணக்கம். வளர்க நலம்.

பெருந்தலைவர் குறித்த கட்டுரைகளின் முடிவுகளை அனுப்பி வைத்துள்ளேன். கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்…

முதல் பரிசு :

1. ச. சசிகுமார் – பார்க்கட்டும்… ஆகலாம் …” – கர்மவீரர் காமராசர்!
2. ஸ்வேதா மீரா கோபால் – கர்மவீரர் காமராசர்!
3. ஞா. கலையரசிகர்ம வீரர் காமராசர்!

இரண்டாம் பரிசு :

1. இன்னம்பூரான் – “பாரத ரத்னா கே.காமராஜ்” – கர்மவீரர் காமராசர்!
2. வில்லவன் கோதை – “தமிழர்தம் கம்பீரம்” – கர்மவீரர் காமராசர்!
3. கீதா மதிவாணன்- பெருந்தலைவர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்!

மூன்றாம் பரிசு :

1. தஞ்சை வெ.கோபாலன் – கர்மவீரர் காமராஜர்
2. ஜெயஸ்ரீ ஷங்கர் – “வான்புகழ் கொண்ட பாரத ரத்தினம்” – கர்மவீரர் காமராசர்!
3. சரஸ்வதி ராசேந்திரன் – ”கர்மவீரர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்!

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு நாளை நெஞ்சில் நிறுத்தி கட்டுரைப் போட்டிகள் நடத்திச் சிறப்பிக்கும் “வல்லமை” இணைய இதழுக்கும் அதற்குத் துணை நின்ற  கவிஞர் திரு. காவிரிமைந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

அன்புடன்,
தமிழருவி மணியன்

 

போட்டியை சிறப்பாக நடத்திக்கொடுத்திருக்கும் திரு தமிழருவி மணியன் அவர்களுக்கும், கவிஞர் திரு காவிரிமைந்தன் அவர்களுக்கும் வல்லமையின் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். போட்டியில் உற்சாகமாக கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்து இணைந்திருப்போம். பரிசு பெற்றவர்கள் தங்களுடைய உள்நாட்டு முகவரியை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்து பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

அன்புடன்

பவள சங்கரி

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி முடிவுகள்

 1. மிக்க மகிழ்ச்சி. பரிசு பெற்றோருக்குப் பாராட்டுக்கள். நன்றி திரு.தமிழருவி மணிபன் ஐயா, திரு.காவிரி மைந்தன் ஐயா, திரு.பவள சங்கரி அம்மா, வல்லமை குழு.

 2. போட்டியில் கலந்துகொண்ட மற்றும் வெற்றிபெற்ற அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள். கடினமான இப்போட்டியில் என் கட்டுரையும் பரிசுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெருமகிழ்வளிக்கிறது. களம் அமைத்துக்கொடுத்த வல்லமைக்கும் நடுவராய்ப் பொறுப்பேற்றுப் பரிசுக்குரியக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துள்ள தமிழருவி மணியன் அவர்களுக்கும் மிக்க நன்றி. கட்டுரைப்போட்டியில் கலந்துகொள்வதற்கான உந்துதலையும் ஆர்வத்தையும் வழங்கிய காவிரிமைந்தன் அவர்களுக்கு என் சிறப்பு நன்றி.

 3. ‘பெருந்தலைவரின் நினைவு நாளன்று அவர் குறித்த கட்டுரைப் போட்டியின் முடிவுகளை அறிவித்தமைக்கு நன்றி. கட்டுரைகளைத் தேர்வு செய்த அருமைத் தலைவர் தமிழருவி மணியன் அவர்களுக்கு நன்றி. போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். என் கட்டுரையும் பரிசு பெற்றமைக்காக மகிழ்ச்சியடைகிறேன். “வல்லமை” ஆசிரியர் குழுவிற்கு நன்றி.

 4. நன்றி. முதல் பரிசுக்குரிய கட்டுரையாக எனதுகட்டுரை,தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி.வேறுபல அலுவல்கள் காரணமாக கட்டுரை எழுதத்தயங்கி, தாமதித்த என்னை, எழுதுகோல் எடுக்கநட்புடனும், உரிமையுடனும்கட்டளையிட்டதுநண்பர்காவிரிமைந்தன்என்பதால், இந்த இந்தஅங்கீகாரமும், பாராட்டும், நண்பருக்குமானதுநன்றி! நான் மனதில் மதிப்புடனும், மரியாதையுடனும், ஏந்தும் நன்னெறியாளர் ஐயா தமிழருவி மணியன்அவர்களுக்குஎனதுஅன்பும், நன்றியும்.நேர்மையும், நெறிமுறைகளும், அருகிவரும்சூழலில், கர்மவீரர்குறித்துசிந்திக்க, அவர்பற்றியசிந்தனைகளைபகிர்ந்துகொள்ளவாய்ப்பளித்தவல்லமைக்கும், நண்பர்காவிரிமைந்தனுக்கும்நன்றி. என்நலம்நாடும் நண்பர்கள்அனைவருக்கும்நன்றி!

 5. வல்லமை இதழ் நடத்திய கர்ம வீரர் காமராசர் கட்டுரைபோட்டியில் என்
  கட்டுரையையும் பரிசுக்குரியதாக (மூன்றாம் பரிசு) தேர்ந்தெடுத்துள்ளமைக்கு ஐயா தமிழருவி மணியன் அவர்களுக்கும், ஊக்கம் கொடுத்தஐயா காவிரி மைந்தன் அவர்களுக்கும் என் மன மார்ந்த நன்றிகள்,வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வல்லமை குழுவினருக்கும் நன்றி

 6. தமிழ்ச் சமுதாயம் ஏற்றம்பெற வேண்டும் என்றும் அறியாமை இருளகற்றி அவர்தமக்கு ஒளியேற்ற வந்துதித்து  கல்விக்கண் திறந்து வைத்த கர்மவீரர் காமராசரைப் போல் தமிழகம் இன்னொருவர் காண்பதரிது!!  
   
  வல்லமை இணையதள வாயிலாக கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி ஒன்று நடத்த வேண்டும் என்கிற எண்ணம் வந்தபோதே நடுவரின் மனதில் நின்ற பெயர் ஒன்றுதான் – தமிழருவி மணியன்..  
   
  அவர்களை கட்டுரைப்போட்டி என்பதற்கும் நடுவராகப் பொறுப்பேற்று நடத்தித்தருமாறு கேட்டதுவும்..  தனது பல்வேறு சமுதாய அரசியல் பணிகளுக்கிடையே உடனே இசைவளித்து.. இனிதே அச்செயலாற்றி தந்திருக்கும்  தேர்ச்சி முடிவுகளுக்கும்  தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு .. உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்!! சக்கரம் சுழல்வதுபோல்.. நாளும் பொழுதும் இயங்கி வரும் உங்களின் பொன்னான நேரங்களை எங்களுக்காக ஒதுக்கி.. பெருந்தலைவர் புகழ்பாட பெரிதும் துணை புரிந்த உங்களுக்கு எமது இதயத்து நன்றியை இன்னொரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.
   
  என்னையும் உங்களையும் இணைத்த என் ஆசான் கண்ணதாசனுக்கு மானசீக நன்றிகள்…
   
  அன்பின் முகவரிகளாய் விளங்கும் திருமிகு அண்ணா கண்ணன் அவர்களும் நிர்வாக ஆசிரியை திருமதி பவளா திருநாவுக்கரசு அவர்களும்  மற்றும் ஆசிரியர் குழுவும் அளித்துவரும் ஒத்துழைப்பிற்கு நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளேன்.
   
  தமிழகத்தின் தவப் புதல்வர்களில் முன்னணி வகிக்கும் கர்மவீரர் காமராசர் பற்றி தங்கள் கருத்துப் பெட்டகத்திலிருந்து எண்ணங்களை வரைந்து போட்டியில் பங்கேற்ற அனைத்து  அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது உள்ளத்து நன்றிகள்.. வெற்றிபெற்ற எழுத்தாளர்களுக்கு பாராட்டுகள்!
   
  நன்றிப் பெருக்கோடு நம் தமிழ்நாட்டின் பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் அவர்கள் பற்றிய கட்டுரைப் போட்டிதனை வல்லமை இணைய தளம் வாயிலாக .. அவர் பிறந்த 15.07.2015ல் அறிவித்து..  அதன் முடிவுதனை அவர்தம் நினைவு நாளில் 02.10.2015 அன்று அறிவிக்க முழுமையாய் ஒத்துழைப்பும் நல்லாதரவும் தந்த உங்களுக்கு எத்தனை நன்றிகள் சமர்ப்பித்தாலும் போதாது.
   
  என்றும் அன்புடன்…
  காவிரிமைந்தன்

 7. தமிழக அரசியலில் தனியொருவனாக வலம் வரும் திரு மணியன் நடுவராக செயல்பட்டு குறித்தகாலத்தில் முடிவுகளை அறிவித்த அழகைபெரிதும் மெச்சுகிறேன்.இனிய நண்பர் காவிரி மைந்தனுக்கும் இணையதளம வல்லமைக்கும்  எனது மகிழ்வையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.கலந்து கொண்ட கட்டுரையாளர் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.    

 8. கர்மவீரர் காமராஜர் கட்டுரைப்போட்டியில் என் கட்டுரையும் பரிசுக்குரியதாகத் தேர்வு பெற்றிருப்பதறிந்து அளவிலா ஆனந்தமடைந்தேன்.  நடுவர் திரு தமிழருவி மணியன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.  இப்போட்டியை முன்மொழிந்த திரு காவிரிமைந்தன் அவர்களுக்கும், எழுதக்  களம் அமைத்துத் தந்த வல்லமை இதழுக்கும் ஆசிரியர் குழுவினர்க்கும் என் நன்றி.  போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!  என்னை எழுத ஊக்குவித்த திரு காவிரிமைந்தன் அவர்களுக்கு மீண்டும் என் நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.