வல்லமை யூடியூப் அலைவரிசை

அண்ணாகண்ணன்
 
அன்பர்களுக்கு வணக்கம்.
 
வல்லமைக்கு யூடியூபில் தனி அலைவரிசை தொடங்கத் திட்டம். ஆய்வுக் கட்டுரைகள், இள முனைவர், முனைவர் பட்ட ஆய்வேடுகளின் சுருக்கங்களை வீடியோவில் பதிந்து ஏற்ற எண்ணம். உங்கள் முனைவர் பட்டம் குறித்து, சுருக்கமாக / விளக்கமாகப் பேசி ஒரு பதிவை கூகுள் டிரைவ் வழியாக [email protected] என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.
 
பேச்சின் இடையே உங்கள் முனைவர் பட்ட ஆய்வேட்டினைக் காட்டலாம். அதில் உள்ள முக்கிய தரவுகள், சான்றுகளை எடுத்துக் காட்டலாம். அதன் தனிச் சிறப்புகளை எடுத்துரைக்கலாம். 
 
வாருங்கள், நல்லதோர் ஆவணத்தை உருவாக்குவோம். உங்கள் உழைப்பை உலகறியச் செய்வோம். 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க