இந்தியா ஏவிய சந்திரயான் -3 விண்சிமிழ் தற்போது எங்கே பயணம் செய்கிறது?
Chandrayaan -3 Lander Module with Rover during Trans Lunar Injection
சி. ஜெயபாரதன், கனடா
Chandrayaan-3 Update: ISRO Successfully Completes Translunar Injection of the Lunar Spacecraft
2023 ஜூலை 14 இல் நிலவை நோக்கி ஏவிய இந்திய விண்சிமிழ் சந்திரயான் – 3 ஆகஸ்டு 5 ஆம் நாள் எங்கே பயணம் செய்கிறது ? என்ன நிகழ்கிறது ? விண்சிமிழ் பூமியை ஐந்து முறை நீள்வட்டப் பாதையில் சுற்றி, ஒவ்வொரு முறையும் பூமியின் சுழல்வீச்சு உந்துவிசையால் வேகம் மிகுந்து, நீள்வட்டப் பாதை நீண்டு, நீண்டு நிலவை நெருங்கியது. ஆகஸ்டு முதல் தேதி, சிறு தள்ளுவிசை ஏவு கணைகள் அரை மணி நேரம் இயங்கி, விண்சிமிழ் நிலவு ஈர்ப்பு மண்டலத்தில் தாவி [Trans Lunar Orbit] உள்ளது.
Chandrayaan -2 Orbiter has been used in Chandrayaan -3 to trasmit the message.
இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம் இஸ்ரோ [ISRO] ஆகஸ்டு 23-24 தேதி நாட்களில் சந்திரயான் தளவுளவி நிலவில் மெதுவாய் இறங்கும், அடுத்து அதிலிருந்து, தளவூர்தி வெளியேறி நிலவில் நகரும் என்று எதிர்நோக்கி இருக்கிறது. அவ்விதம் நிகழும் அந்த வரலாற்று மைல்கல் நிகழ்ச்சியைப் பதிவு செய்யும் ஓர் அற்புதக் கருவி ஆல்ஃபா துகள் எக்ஸ்ரே ஒளிப்பட்டை மானி [Alpha Particle X-Ray Spectrometer] விண்சிமிழ் தளவுளவி, தளவூர்தி யில் இணைக்கப் பட்டுள்ள மற்ற கருவிகள் நிலவின் புழுதி இரசாயனக் கலவைகளை அறிந்து பூமிக்கு அனுப்பும். சந்திராயன் -2 2019 இல் ஏவிய விண்சுற்றி [Orbiter] இன்னும் நிலவைச் சுற்றி இயங்கி வருவதால், அடுத்து சந்திராயன் -3 திட்டத்தில் விண்சுற்றி ஒன்று இணைக்கப் படவில்லை.
2019 இல் ஏவிய சந்திரயான் -2 தளவுளவி பழுதுகள் ஏற்பட்டு நிலவில் விழுந்து முறிந்து போனது. இம்முறை அவ்விதத் தவறுகள் நிகழா என்று இஸ்ரோ எதிர்பார்க்கிறது.
Chandrayaan -3 Trans Lunar Injection on August 1, 2023