இயற்கையில் எழுந்த இசை – பகுதி 2
நிர்மலா ராகவன்
பாறைமேல்
சிவனும் விஷ்ணுவும் ஒருவரே என்று உணர்ந்த புருஷாமிருகத்தின் கதை.
இக்கதையைப் படித்துவிட்டு, நான் என் பேரனுக்குச் சொன்னேன், வழக்கம்போல் பீமனும் அக்காட்டு மிருகமும் ஒருவரோடொருவர் சண்டை போடுவதை நடித்துக்காட்டி.
“இதைப் பாட்டாக எழுது. மிக நன்றாக இருக்கும்,” என்று மகள் ஷீலா கூறிப்போனாள்.
ஒவ்வொரு காட்சியையும், நாட்டிய – நாடகபாணிக்கு ஏற்ப எப்படி அமைப்பது என்று நிறைய யோசிக்க வேண்டியிருந்தது.
அது மட்டுமா? நான் எடுத்துக்கொண்ட ராகம் தானாக மாறி, பிருந்தாவன சாரங்காவாக ஆகியது. கிருஷ்ணருக்கு உகந்த இடம் பிருந்தாவனம், அல்லவா? இது புரியாது, அதை மாற்றியமைக்க மூன்று நாட்கள் முட்டிக்கொண்டேன்.
`சிவாயநம ஓம்’ என்ற வார்த்தைகள் தோடி, ஷண்முகப்ரியா, கமாஸ் ஆகிய மூன்று ராகங்களிலும் அமைந்திருப்பது தற்செயல்.
தன் பலத்தில் கர்வம் கொண்டிருந்த பீமனை காட்டு விலங்கான புருஷாமிருகம் துரத்த, அவன் பயந்தோடுவதை மேடையில் பார்க்கும்போது சிறுவர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும்.
பின்குறிப்பு:18 ஆண்டுகளாக, வசதியற்ற குடும்பத்திலிருந்து வரும் பெண்களுக்கும், சில தாய்மார்களுக்கும் கோலாலம்பூர் பங்க்சார் (Bangsar) ஸ்ரீநாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இலவச பரதநாட்டிய வகுப்பு நடத்துகிறாள் என் மகள் ஷீலா. மலேசியாவுடன், தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளிலும் மாணவிகளுடன் இணைந்து நிகழ்ச்சிகள் படைத்திருக்கிறாள்.
மேல் விவரங்களை அறிய — Face book: Mahavidya Dance Theatre
இப்பாடலைக் கேட்க: https://youtu.be/A6a2lyz6gPQ