இந்தச் செலவு தேவை தானா? | மினிமலிசம் என்றால் என்ன?
அளந்து செலவிடு, சிறுகக் கட்டிப் பெருக வாழ், சிக்கனமாய் இரு போன்றவை எல்லாம் எங்கோ கேட்டாற்போல் இருக்கிறதா? நம் முந்தைய தலைமுறை வரைக்கும் இதுவே இயல்பான வாழ்க்கை முறையாக இருந்தது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் பொருள்களை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிகிறார்கள். தாம்தூம் செலவுகள் ஏராளம். இந்நிலையில், மினிமலிசம் என்பது ஓர் இயக்கமாகப் பரவி வருகிறது. இதன் அடிப்படை என்ன? இந்தச் செலவு தேவைதானா என நம்மை நாமே ஏன் கேட்க வேண்டும்? வாங்கிக் குவிக்கும் மோகத்திலிருந்து விடுபடுவது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)