IELTS சலுகை | கனடாவின் அதிரடி முடிவு | இந்திய மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு
கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்கள், ஐஇஎல்டிஎஸ் (IELTS) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். ஆங்கிலத்தில் படிப்பது, எழுதுவது, பேசுவது, கேட்பது ஆகிய நான்கு பிரிவுகளிலும் தலா ஆறு மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சி பெற முடியும். இதில் மயிரிழையில் பலரும் தோல்வி அடைவது உண்டு. அவர்கள் மீண்டும் எல்லாத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுத்தான் கனடா வர முடியும். இந்த நடைமுறையில் கனடா அரசு இப்போது முக்கியத் திருத்தம் ஒன்றைச் செய்துள்ளது. இது இந்திய மாணவர்களுக்கு நல்வாய்ப்பு. இது குறித்து, கேனெக்ஸ்ட் குடியேற்ற நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)