முற்றுகிறது மோதல் – கனடாவில் இந்தியர் நிலை என்ன?
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தியா – கனடா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கனடாவில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருக்கிறது எனக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடியப் பாராளுமன்றத்தில் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இந்தியத் தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியது. அதைத் தொடர்ந்து இந்தியாவும் கனடா நாட்டுத் தூதரக அதிகாரியைத் திருப்பி அனுப்பியது. இதன் தொடர்ச்சியாக, கனடாவுக்கான விசா சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? கனடாவில் இந்தியவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா? கனடாவுக்கு வர விரும்புவோர், வழக்கம் போல் விண்ணப்பிக்கலாமா? கேனெக்ஸ்ட் குடியேற்ற நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)