Category: காணொலி

  • ஆனந்த் ராமச்சந்திரன் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    ஆனந்த் ராமச்சந்திரன் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    திருவண்ணாமலையில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் ஆனந்த் ராமச்சந்திரனின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சக்தி கானம் 1 – எடுத்த காரியமும் ஜெயமாக

    சக்தி கானம் 1 – எடுத்த காரியமும் ஜெயமாக

    ஆர்.எம்.கிரியேஷன்ஸ் நிறுவனம், சக்தி கானம் என்ற தலைப்பில் ஒலிப்பேழை ஒன்றை வெளியிட்டது. அதில் இடம்பெற்ற ஏழு பாடல்களையும் நம் யூடியூப் அலைவரிசையில் வெளியிட, தயாரிப்பாளர் ரமேஷ் வெங்கட்ரமணன் அனுமதி அளித்துள்ளார். அவருக்கும் இந்த முயற்சியை ஒருங்கிணைத்த நண்பர் வாரணா அவர்களுக்கும் நன்றி.

    ஆடி மாதம், அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில், சக்தி கானத்தை வெளியிடுவதில் மகிழ்கிறோம். இதோ, முதல் பாடல். வெற்றி கணபதியை வணங்கித் தொடங்குகிறோம்.

    பாடல் – எடுத்த காரியமும் ஜெயமாக
    பாடலாசிரியர் – வாரணா
    இசையமைப்பாளர் – கிறிஸ் மார்ட்டின் போனாமி
    பாடகர் – கிறிஸ் மார்ட்டின் போனாமி
    தயாரிப்பாளர் – ரமேஷ் வெங்கட்ரமணன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஏழாம் அறிவே கல்வி – ஆனந்த ராவ் பாடல்

    ஏழாம் அறிவே கல்வி – ஆனந்த ராவ் பாடல்

    உடன் உரையாடுபவர் – அண்ணாகண்ணன்

    கல்வியின் பெருமைகளை, துள்ளாத மனமும் துள்ளும் பாடலின் மெட்டில், எளிய தமிழில் தாமே இயற்றிப் பாடுகிறார், ஆனந்த ராவ். மாணவர்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடல். மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்டு, மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் பகிருங்கள். உண்மைக் கல்வியை உணர்ந்து போற்றுவோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கீர்த்திதேவி ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    கீர்த்திதேவி ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    பெங்களூருவில் ஆறாம் வகுப்புப் படிக்கும் கீர்த்திதேவியின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மகராசர் காமராசர்

    மகராசர் காமராசர்

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில், ‘மகராசர் காமராசர்’ என்ற எனது பாடலைக் கேளுங்கள். ஷைலஜா, மூன்று மெட்டுகளில் பாடி, இதற்கு இனிமையும் பெருமையும் சேர்த்துள்ளார். கர்மவீரர் நினைவைப் போற்றுவோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எம்.எல்.கிஷோர் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    எம்.எல்.கிஷோர் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    தஞ்சாவூரில் ஆறாம் வகுப்புப் படிக்கும் எம்.எல்.கிஷோரின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எங்கள் மாடித் தோட்டம்

    எங்கள் மாடித் தோட்டம்

    எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கலாம், வாங்க.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Video Tour – பெங்களூரு ஹூடி பகுதியில் வீடு விற்பனைக்கு

    Video Tour – பெங்களூரு ஹூடி பகுதியில் வீடு விற்பனைக்கு

    எங்கள் குடும்ப நண்பர் வெளிநாட்டுக்குக் குடிபெயர்ந்ததால், பெங்களூரு ஹூடி பகுதியில் உள்ள அவரது அடுக்குமாடி வீட்டை விற்கவுள்ளார். இந்த வீட்டுக்கு நாங்கள் குடும்பத்துடன் ஒருமுறை சென்று வந்துள்ளோம். நல்ல காற்றோட்டமான, அமைதியான, அனைத்து வசதிகளும் உள்ள வீடு. பிரதான இடத்தில் அமைந்துள்ளது. இந்த வீட்டைப் பார்வையிட விரும்பும் அன்பர்கள், இந்தப் பதிவைப் பாருங்கள். வீடு வாங்கும் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்குப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாடகர் ஆனந்த ராவ் உடன் நேர்காணல்

    பாடகர் ஆனந்த ராவ் உடன் நேர்காணல்

    சந்திப்பு – அண்ணாகண்ணன்

    தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஆனந்த ராவ், இந்த 79 வயதிலும், தமிழில் பாடல்கள் இயற்றி இனிமையாகப் பாடுகிறார். பழைய திரைப்படப் பாடல்களின் மெட்டுகளில் இவர் தமிழிலும் தெலுங்கிலும் பாடல்கள் இயற்றியுள்ளார். இவற்றை டி.எம்.எஸ்., கே.பி.சுந்தராம்பாள், ஜேசுதாஸ், எம்.எஸ்.வி., டி.ஆர்.மகாலிங்கம், கண்டசாலா… உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் முன்னிலையில் பாடிப் பாராட்டுப் பெற்றுள்ளார்.

    சுவாகத் ஓட்டலிலும் உட்லண்ட்ஸ் ஓட்டலிலும் உணவு பரிமாறுபவராகப் பணியாற்றிய இவர், அங்கு உணவருந்த வந்த அண்ணா, கலைஞர், சி.என்.ஏ.பரிமளம், ம.பொ.சி. உள்ளிட்ட பிரமுகர்களுக்கு உணவு பரிமாறியுள்ளார். ஜேசுதாஸ், பித்துக்குளி முருகதாஸ், ஹரிதாஸ் கிரி ஆகியோருடன் இணைந்து கோரஸ் பாடியுள்ளார்.

    சமையல் கலைஞர்கள் நலவாரியம், கட்டடத் தொழிலாளர் நலவாரியம், கோவில் பணியாளர் நலவாரியம், தையல் தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட பலவற்றில், அவர்களின் விழாக்களில் அந்தத் தொழிலாளர்களைப் பற்றிய பாடல்களைப் பாடி, உழைக்கும் வர்க்கப் பாடகர் எனப் பாராட்டுப் பெற்றுள்ளார்.

    மேலும் தனக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், மருந்துக் கடைக்காரர்கள், செவிலியர்கள் எனப் பலர் மீதும் பாடல்கள் இயற்றி அவர்களை மகிழ்வித்துள்ளார். இதனால் மருத்துவத்திற்குக் கட்டணம் இல்லாமல், அவர்கள் இவருக்கு பரிசுத் தொகையும் கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த வகையில் இவர், மன்னர்களையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடிய சங்க காலப் புலவர் மரபில் வருகிறார்.

    தொலைபேசி வழியிலான இந்த நேர்காணலில் இவரது இனிய பாடல்களையும் அனுபவங்களையும் கேட்டு மகிழுங்கள்.

    இவரை எனக்கு அறிமுகம் செய்வித்த நண்பர் குமரி எஸ்.நீலகண்டனுக்கு நன்றி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இங்கிலாந்தில் உள்ள டர்டில் டோர்

    இங்கிலாந்தில் உள்ள டர்டில் டோர்

    இங்கிலாந்தில் உள்ள டர்டில் டோர் (Durdle Door) என்ற சுற்றுலாத் தலம், மிகவும் புகழ்பெற்றது. திரைப்படங்கள் பலவும் இங்கே படமாக்கப்பட்டுள்ளன. இந்த வனப்பு மிகுந்த இடத்தில், நவ்யாவுடன் இணைந்து நடக்கலாம், வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பச்சைமா மலைபோல் மேனி

    தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய ‘பச்சைமா மலைபோல் மேனி’ என்ற அருட்பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

    பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
    அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே யென்னும்
    இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேரழகு கொஞ்சும் பெல்ஜியம் மான்கள்

    பேரழகு கொஞ்சும் பெல்ஜியம் மான்கள்

    பெல்ஜியத்தில் வசிக்கும் கிறிஸ் வேய்னான்ட்ஸின் தோட்டத்தில் அவர் வளர்க்கும் மான்கள். எழுத்தாளர் மாதவன் இளங்கோ, அங்கே சென்றபோது செல்லம் கொஞ்சிய பேரழகுக் காட்சிகள். பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வேப்பம்பழம் உண்ணும் குயில்

    வேப்பம்பழம் உண்ணும் குயில்

    வேப்பம்பழம் மரத்தில் இருக்கும்போதே அதன் தோலைக் கழற்றிப் போட்டு, தொங்கும் கொட்டையை மட்டும் குயில் லாகவமாக லபக் செய்யும் காட்சி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அபிராமவல்லியின் நிறம்

    அபிராமவல்லியின் நிறம்

    அபிராமி அந்தாதியில் அன்னையை மாதுளம்பூ நிறத்தாள் என்று அபிராமி பட்டர் பாடுகிறார்.

    ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்
    பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை….

    இந்த மாதுளம்பூ நிறம் எப்படி இருக்கும்? இந்தப் பதிவைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜெயந்தி சங்கர் பிறந்து வளர்ந்த கதை

    ஜெயந்தி சங்கர் பிறந்து வளர்ந்த கதை

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    சிங்கப்பூரில் வாழும் தமிழ் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், இந்தியாவில் பிறந்து வளர்ந்து, 22 வயது வரை தான் பெற்ற அனுபவங்களை, கற்ற கலைகளை, பயணித்த ஊர்களை, சந்தித்த மனிதர்களைப் பற்றி இந்த அமர்வில் பகிர்ந்துகொண்டுள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 40 புத்தகங்களை எழுதியவர், எனக்குப் பிடித்த மொழி மலையாளம் எனக் கூறுகிறார். இந்தச் சுவையான உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share