Tag: காதலர் தினம்

  • கல்யாண வைபோகமே | நிர்மலா ராகவன்

    கல்யாண வைபோகமே | நிர்மலா ராகவன்

    காதலர் தினம், இளைஞர்களுக்கு மட்டுமா? வயது கூடினாலும் காதல் குறைவதில்லை, மறைவதில்லை, மாறுவதில்லை. இதோ இந்தப் பதிவில், தன்னைப் பெண் பார்த்த அனுபவங்கள், ஒரே வாரத்தில் நடந்த திடீர்க் கல்யாணம், 55 ஆண்டுக்கால திருமண வாழ்க்கை எனப் பலவற்றையும் சுவையாக விவரிக்கிறார் நிர்மலா ராகவன். பார்த்து மகிழுங்கள். காதலர் தின நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இக்காலக் காதல் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 7

    இக்காலக் காதல் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 7

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    ஓவியர் ஸ்யாம் உடனான உரையாடல் தொடர்கிறது. செல்பேசி என்ற கருவி, தகவல் தொடர்பில் மட்டுமின்றி, காதலிலும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. காதலர் மனங்களிலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. அவை என்னென்ன என்று விளக்குவதோடு லிவிங் டுகெதர், ஒழுக்க நிலைப்பாடுகள், பெண்களிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றம் எனப் பலவற்றையும் விவரிக்கிறார். குட் டச் (Good Touch), பேட் டச் (Bad Touch) எனக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதால் ஏற்படும் பிரச்சினைகளையும் எடுத்துரைக்கிறார். இக்காலக் காதலைக் கண்ணாடி போல் காட்டும் இந்த உரையாடலைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜோதிடப் பார்வையில் காதலும் திருமணமும் | வேதா கோபாலன்

    ஜோதிடப் பார்வையில் காதலும் திருமணமும் | வேதா கோபாலன்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    இது காதலர் தினச் சிறப்புப் பதிவு.

    திருமணத்துக்கு முன்பு ஜாதகம் பார்த்துத் தீர்மானிப்பது போல், காதலிக்கும் முன்பும் ஜாதகம் பார்த்துத் தீர்மானிக்கலாமா? எந்தெந்தப் பொருத்தங்களை முக்கியமாகப் பார்க்க வேண்டும்? திருமணம் தள்ளிப் போவதற்கு என்ன காரணம்? ஜாதகம் பார்த்தும் பார்க்காமலும் செய்த திருமணங்கள் எப்படி இருக்கின்றன? இத்தகைய கேள்விகள் பலவற்றுக்கும் ஜோதிடர் வேதா கோபாலன் பதில் அளிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பறக்கும் முத்தம்

    பறக்கும் முத்தம்

    அண்ணாகண்ணன்

    தூக்கம் வந்தால் தூங்கிவிடு
    தும்மல் வந்தால் தும்மிவிடு
    அழுகை எழுந்தால் அழுதுவிடு
    சிரிப்பு வந்தால் சிரித்துவிடு
    ஆசைப் பட்டால் அடைந்துவிடு
    அதற்காய் நீயும் உழைத்துவிடு
    உணர்வை அடக்கிக் குறுகாதே
    ஒளித்து வைத்து மருகாதே

    தெரிந்தால் தெரியும் என்றுசொல்
    தெரியாது என்றால் அதையும்சொல்
    புரிந்தால் புரிந்தது என்றுசொல்
    புரியாவிட்டால் அதையும்சொல்
    பிடித்தால் பிடித்தது என்றுசொல்
    பிடிக்காவிட்டால் அதையும்சொல்
    வேண்டாம் என்றால் விட்டுவிடு
    வேண்டும் என்றால் மொட்டுவிடு

    அப்படி நடந்தால் அதுவும்சரி
    இப்படி நடந்தால் இதுவும்சரி
    எப்படி நடந்தாலும் சரியேதான்
    எல்லாம் நமது நன்மைக்கே
    அதிகம் யோசித்துக் குழம்பாதே
    உள்ளம் சொல்வதைக் கேட்டுநட
    திரும்பிப் பார்க்க நேரமில்லை
    ஓடிக் கொண்டே விளையாடு

    காதலில் கற்பனை அதிகமுண்டு
    கனவைக் கலைத்து எழுந்துவா
    நிஜத்தைப் பேசு நேருக்குநேர்
    நிலைப்பது நிலைக்கும் நீயேபார்
    வெற்றிகளாலே நீபேசு
    வேண்டியதெல்லாம் பின்தொடரும்
    ஆக வேண்டிய வேலையைப் பார் – இந்தா
    பறக்கும் முத்தம் பற்றிக்கொள்

    =======================================

    Photo courtesy: Maxpixel.net

    Share