Tag: கோயம்புத்தூர்

  • கோவை ரியல் எஸ்டேட் – வானளாவிய வளர்ச்சி

    கோவை ரியல் எஸ்டேட் – வானளாவிய வளர்ச்சி

    கோவை ரியல் எஸ்டேட் துறை வானளாவிய வளர்ச்சி கண்டு வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் அண்ணாந்து பார்க்கவைக்கும் அடுக்குமாடிகளும் நவீன கட்டடங்களும் புதிய புதிய கடைகளும் நமக்குச் சொல்வது என்ன? கோவையில் வளர்ச்சி வாய்ப்புகள் எப்படி உள்ளன? இங்கே வீடு வாங்கலாமா? முதலீடு செய்யலாமா? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் உடன் ஒரு நேர்காணல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவையில் இரு பயணங்கள்

    கோவையில் இரு பயணங்கள்

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை உக்கடம் பெரியகுளம் ஏரி புதுப்பிக்கப்பட்டுள்ளது. கண்கவர் வடிவமைப்பு, நேர்த்தியான கட்டமைப்பு, பளிச்சிடும் ஒளி விளக்குகள் என அழகுற அமைந்துள்ளது. அதை இரவு நேரத்தில் அண்மையில் பேருந்தில் கடந்தோம். இந்த ஏரியை ஒட்டியுள்ள சாலை எந்தத் தரத்தில் உள்ளது என்பதை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம்.

    நண்பர் சித்ரன் ரகுநாத், கோவைச் சாலைகள் குறித்து எழுதிய சிறுவர் பாடல் இப்படித் தொடங்குகிறது

    கோவை என்றொரு நகருண்டு.
    நகரில் சாலைகள் பலவுண்டு.
    சாலைகள் முழுக்கக் குழியுண்டு.
    அரசுக்கு அதனால் பழியுண்டு.

    கோவையில் குஞ்சம் வைத்த ஆட்டோவில் ஒரு பயணம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவையில் பேருந்துப் பயணம்

    கோவையில் பேருந்துப் பயணம்

    அண்மையில் கோவையில் கவுண்டம்பாளையத்திலிருந்து மாதம்பட்டி அருகில் உள்ள தென்கரை என்ற இடத்திற்குச் செல்ல (25 கி.மீ.), ஓலாவில் வாடகை மகிழுந்தை அழைத்தோம். ரூ.392 கட்டணம் காட்டியது. வந்த ஓட்டுநர், ரூ.700 கேட்டார். முடியாது என்றோம். அவரே சரி என்று ரத்து செய்துவிட்டுச் சென்றார். அடுத்தடுத்த ஓட்டுநர்களும் அதிகம் கேட்டார்கள். எனவே, பேருந்தில் செல்ல முடிவெடுத்தோம். ஆனால், கவுண்டம்பாளையத்திலிருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் செல்ல, ஓலாவில் ரூ.88 காட்டியது. வந்த ஓட்டுநர் ரூ.120 கேட்டார். வேறு வழியில்லாமல் கொடுத்தோம்.

    காந்திபுரத்திலிருந்து மாதம்பட்டிக்குப் பேருந்தில் ஏறினோம். ஒருவருக்கு ரூ.15 மட்டுமே கட்டணம், 3 வயது மகனுக்குக் கட்டணம் வாங்கவில்லை. (மொத்தம் 45). மாதம்பட்டியில் இடம் சரியாகத் தெரியாமல், ஒரு நிறுத்தம் முன்னதாக இறங்கினோம். அந்த இடத்திலிருந்து தென்கரை செல்ல (7 – 8 கி.மீ.), ஆட்டோ ஓட்டுநர் ரூ.500 கேட்டார். வேண்டாம் என்று மீண்டும் பேருந்தில் ஏறினோம். இது விரைவுப் பேருந்து போலும். எங்கள் நால்வருக்கும் ஒரு நிறுத்தத்திற்கே தலா ரூ.15 கட்டணம் வசூலித்தார் (மொத்தம் ரூ.60). மாதம்பட்டியிலிருந்து நாங்கள் செல்ல வேண்டிய தென்கரை (5.6 கி.மீ.) என்ற ஊருக்குச் செல்ல, ஆட்டோ கட்டணம் ரூ.150. ஆக, ரூ.375 செலவில் அங்கே சென்று சேர்ந்தோம்.

    இந்தப் பயணமும் நன்றாகவே இருந்தது. கோவையில் எங்கள் பேருந்துப் பயணத்தின் சில காட்சிகள் இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழ்நாட்டின் ரயில் நிலையங்கள்

    தமிழ்நாட்டின் ரயில் நிலையங்கள்

    கோவைக்கு வந்திருக்கிறேன். வரும் வழியில் இருக்கும் தொடர்வண்டி நிலையங்களை ஆவணப்படுத்தியுள்ளேன். சென்னை சென்ட்ரல் தொடங்கி, கோவை வரை உள்ள முக்கிய நிலையங்களைப் பதிவு செய்துள்ளேன். (அரக்கோணம், காட்பாடியைத் தவிர. இவற்றை முந்தைய பயணங்களில் நேரலையாகக் காட்டியுள்ளேன். எதிர்காலத்தில் தனியாகப் பதிவு செய்து அளிப்பேன்.)

    ஒவ்வொரு ரயில் நிலையமும் ஏராளமான நினைவுகளைக் கிளர்த்தக் கூடியவை. வெளியூருக்குச் சென்றுவிட்டு, ஊரை நினைத்து ஏங்குவோரும் பலர். இந்த ரயில் நிலையங்களைக் காணும்போது உங்களுக்குத் தோன்றும் நினைவுகளைப் பின்னூட்டத்தில் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒரு சாகசப் பயணம்

    ஒரு சாகசப் பயணம்

    மீன் வடிவ இருசக்கரப் பலகையில் நின்றபடி இதோ ஒரு சாகசப் பயணம். கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் கண்ட காட்சி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவையின் ஒரு கிராமத்துச் சாலை

    கோவையின் ஒரு கிராமத்துச் சாலை

    கோவையின் ஒரு கிராமத்துச் சாலையைப் பாருங்கள். வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா வளாகத்திற்குச் சென்றுவிட்டு, கோயம்புத்தூருக்கு இரவு நேரத்தில் திரும்பினோம். நாங்கள் வந்த கிராமத்துச் சாலையைப் பார்த்து, இப்படி ஒரு சாலையா? என வியந்தேன். இதன் தரத்தை நீங்களும் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஈஷா வளாகம் – ஒரு சிறு உலா

    ஈஷா வளாகம் – ஒரு சிறு உலா

    கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா வளாகம், இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. அத்துடன் கலையெழில் மிளிரத் திகழ்கின்றது. கலையெழில் என்பது ஒரு வார்த்தையாகக் கொள்ளக் கூடாது. இந்த வளாகத்தில் வாய்ப்புள்ள ஒவ்வோர் அணுவிலும் துணுக்கிலும் கலையெழில் மிளிர்கின்றது. முகப்பு, மதில், கதவு, விதானம், நடைபாதை, சிலைகள், அறிவிப்புகள், அலங்காரம்… என ஒவ்வொன்றிலும் தனித்துவமான கலையெழில் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது.

    கார்ப்பரேட் பாணியில் இந்த வளாகம் அமைந்திருந்தாலும், நல்ல திட்டமிடலும் செயல்திறனும் தொலைநோக்கும் பளிச்சிடுகின்றது. பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி, அவற்றைத் தனி முத்திரையாக (Brand) முன்வைப்பதில் ஈஷா, ஆன்மீகத் துறையில் உள்ளோருக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகிறது.

    இந்தியா முழுவதுமிருந்தும் இங்கே பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆன்மீகத் தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் இது பரிணமித்து வருகிறது. இதோ ஈஷா வளாகத்தின் உள்ளே ஒரு சிறு உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவை விமான நிலைய உள்ளழகு

    கோவை விமான நிலைய உள்ளழகு

    கோவை விமான நிலையத்தின் உள்ளழகு எப்படி இருக்கு? இதோ ஒரு சிறு உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share