கோவை ரியல் எஸ்டேட் துறை வானளாவிய வளர்ச்சி கண்டு வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் அண்ணாந்து பார்க்கவைக்கும் அடுக்குமாடிகளும் நவீன கட்டடங்களும் புதிய புதிய கடைகளும் நமக்குச் சொல்வது என்ன? கோவையில் வளர்ச்சி வாய்ப்புகள் எப்படி உள்ளன? இங்கே வீடு வாங்கலாமா? முதலீடு செய்யலாமா? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் உடன் ஒரு நேர்காணல்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.