கல்லூரிகளைக் கடந்து செல்லும் போதெல்லாம் மாணவ – மாணவியர், பெரும்பாலும் வண்ண உடைகளில் இருப்பதையே பார்த்திருக்கிறேன். கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர் அத்தனைப் பேரும் சீருடையில் இருப்பதைக் கண்டு வியந்தேன் (சற்று ஓரத்தில் இருந்த மாணவர்களும் இவ்வாறு சீருடையில் இருக்கிறார்கள்). இது போல் வேறு இடங்களில் பார்த்திருக்கிறீர்களா?
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

