இந்தவார வல்லமையாளர்! (226)

செல்வன்

இவ்வார வல்லமையாளர் – பேட்டி ஜென்கின்ஸ் (Patty Jenkins)

சென்றவாரம் வெளியான Wonder WomanPatty_Jenkins_by_Gage_Skidmore_3 (வியப்புக்குரிய பெண்) எனும் திரைப்படம் இவ்வாரம் 435 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதன் இயக்குனர் பேட்டி ஜென்கின்ஸ்.

இப்படம் பல மைல்கற்களை கடந்துள்ளது.

பெண் இயக்குனர் ஒருவர் இயக்கிய முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம்.
பெண்கள் சூப்பர்ஹீரோ வாக நடித்தால் படம் ஓடாது எனும் மூடநம்பிக்கையை தகர்த்த படம்.
மிக ஆழமான ஒரு நீதியையும், கதையுடன் சேர்த்து சொன்ன படம்.

பேட்டி ஜென்கின்ஸ் பெண்களின் கோணத்தில் உலகை காணும் படைப்புகளை படைப்பதில் வல்லவர். 2003இல் இவரது முதல் படமான Monster, ஐலீன் உர்னோஸ் எனும் வீடற்ற பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

இரண்டவது படம் எடுக்க இவருக்கு சுமார் 14 ஆண்டுகள் பிடித்தன. ஆனால் படம் வெளிவந்தபோது மகத்தான வெற்றி பெற்று, இந்த ஆண்டின் சூப்பர்ஹிட் படமாக ஆனது.

JL_Wonder_Woman

ஒன்டர் வுமன் அமெசான் எனும் தீவை சேர்ந்தவர். அது பெண்கள் மட்டுமே வசிக்கும் தீவு. ஆண்களுக்கு அனுமதி இல்லை. அப்படிப்பட்ட தீவில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்த மாய, தந்திர சக்திகள் படைத்த இளவரசியான ஒன்டர் வுமன் மனிதர்கள் போரால் படும் அவதிகளை களைய முதலாம் உலகப்போர் சமயம் இங்கிலாந்து செல்கிறார்.

அப்படி செல்கையில் தன் இளவரசி பட்டத்தை துறக்கவேண்டி உள்ளது. இங்கிலாந்து செல்லும் ஒண்டர் வுமன் அன்றைய சமூக ஆண்கள் பெண்களை சமமானவர்களாக கருதாததை கண்டு வியப்படைகிறார். ஏனெனில் அவரது தீவில் முழுக்க இருந்தவர்கள் பெண்கள் மட்டுமே. முதலாம் உலகப்போரை தடுத்து நிறுத்தி, தன் காதலனை அந்த முயற்சியில் இழந்து, மனிதர்கள் குற்றம் குறை உள்ளவர்களாக இருந்தாலும், அவர்களிடையே இருக்கும் நல்ல பண்புகளையும் கருத்தில் கொண்டு உலகைக் காக்க விரும்புகிறவர்கள் சோர்வடையாமல் அம்முயற்சிகளைச் செய்யவேண்டும் எனும் நீதியை உணர்த்துகிறார் ஒண்டர் வுமன்.

இது ஒரு பெண் ஹீரோவைப் பற்றிய படம் என்றாலும் பெண்ணீய நோக்கில் வந்த படம் என கூறமுடியாது. ஏனெனில் படம் மானுட சமுதாயம் முழுமைக்கும் உள்ள பிரச்சனைகளை மையபடுத்தி வந்த படம். பெண்ணிய நோக்கிலான படம் எனில் அரசியல் சிக்கல்களில் சிக்கி தன் மதிப்பை இழந்திருக்கும். அப்படி ஆகாமல் சாமர்த்தியமாக அனைத்து கட்சியினரும், அனைத்து கொள்கை சார்ந்தவர்களும் பாராட்டும் வண்ணம் ஒரு சிறந்த படைப்பை படைத்த பேட்டி ஜென்கின்ஸ் நம் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்.

ஒண்டர் வுமன் மானுட சமுதாயம் முழுமைக்குமான நல்ல வழிகாட்டி என ஐ.நா சபை கருதி ஒண்டர் வுமன் கதாப்பாத்திரத்தை தனது சிறப்பு தூதராகவும் அறிவித்து சிறப்பு சேர்த்தது.

இத்தகைய சிறந்த படைப்பாளியான பேட்டி ஜென்கின்ஸை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. உங்கள் வெற்றி இயக்குனராக வெற்றிக்கொடி நாட்ட விரும்பும் பெண்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணம்.

இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

செல்வன்

பொருளாதார வல்லுநர்

Share

About the Author

has written 61 stories on this site.

பொருளாதார வல்லுநர்

2 Comments on “இந்தவார வல்லமையாளர்! (226)”

 • அண்ணாகண்ணன்
  அண்ணாகண்ணன் wrote on 12 June, 2017, 23:25

  வல்லமையாளர் பேட்டி ஜென்கின்ஸ் (Patty Jenkins) அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தப் படம், தமிழிலும் வெளியாகியுள்ளது. இந்தியாவிலும் வெற்றிகரமாக ஓடுகிறது. இத்தகைய கடினமான கருவைப் படமாகக் கண்முன் நிறுத்திய பேட்டி ஜென்கின்ஸின் உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 • சி.ஜெயபாரதன்
  சி. ஜெயபாரதன் wrote on 13 June, 2017, 9:20

  நண்பர் செல்வன் / அண்ணாகண்ணன்/பவளா,

  உலக வல்லமையாளர் ஆயிரக் கணக்கில் உள்ளார். ஆனால் அவர்களைப் பற்றி எழுதுவதை விடத் தற்போது வல்லமை வலையிதழ் இந்தியர் / உலகத் தமிழருள் வல்லவராய் இருப்பவரை எடுத்துக் காட்டினால், பெருமைப்படும் மாடலாய் இருக்கும்.

  சி. ஜெயபாரதன்

Write a Comment [மறுமொழி இடவும்]


4 + = eight


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.