Author: செய்தியாளர்-1

  • பிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு

    பிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு

    பிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு, 18.01.2020 அன்று சென்னையில் நடக்கிறது. அழைப்பிதழ் காண்க.

    Share
  • ஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது

    ஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது

    அதிக மாடுகளை அலங்காநல்லூர் களத்தில் கடந்த ஆண்டு அடக்கிய வீரருக்கும், இவ்வாண்டு அடக்கும் வீரர் திலகத்திற்கும் ரூ. 4 லட்சம் பெறுமதியான கறவை மாடுகளை The Rise என்ற எழுமின் அமைப்பு வழங்கிச் சிறப்பிக்கிறது.

    The Rise என்ற எழுமின் அமைப்பு, உலகளாவிய தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்களை இணைத்து, சுமார் 30 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் மதுரைக் கிளை, ஜல்லிக்கட்டு வீரர்கள் பலர், வாழ்வாதார வசதிகள் இன்றி வாடுவதை எழுமின் அமைப்பின் பொதுக் கவனத்திற்குக் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் அனைத்துலக எழுமின் அமைப்பு, அத்தகைய வீரர்களுக்கு உதவ முடிவு செய்தது.

    முதற்கட்டமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கில், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் அதிக மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 8 கறவை நாட்டு மாடுகளை அலங்காநல்லூர் அரங்கிலேயே மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இன்று மாலை வழங்குகிறது.

    எழுமின் அமைப்பின் உலகளாவிய தொழிலதிபர்கள் மலேசியா தான்சிறி டத்தோ பலன், கத்தார் பஸீத் அஹமது, சிங்கப்பூர் அஹமது புகாரி, மதுரை பெரிஸ் மகேந்திர வேல், கனடா ஸ்டன் முத்துலிங்கம், சென்னை சௌகியா குழுமத்தின் சிவகுமார், சென்னை சில்க்ஸ் நிறுவனம் உள்ளிட்டோர் இந்தக் கறவை மாடுகளை நன்கொடையாகத் தந்துள்ளனர்.

    “வீரர்கள் வாழ்ந்தால்தான் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டும் வாழும்” என எழுமின் அமைப்பின் நிறுவனர் அருட்திரு. ம. ஜெகத் கஸ்பர் தெரிவித்தார். கறவை மாடுகள் வழங்கும் பணியினை எழுமின் மதுரைத் தலைவர்கள் பாலகுரு, ஜலீல், சரவணன், சுரேஷ் மனோகரன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்து நல்லதொரு தொடக்கத்தைத் தந்துள்ளனர். ஜல்லிக்கட்டு வீரர்களின் வாழ்வாதாரத்திற்குக் கறவை மாடுகள் தந்து உதவ, உலகத் தமிழர்களை எழுமின் அமைப்பு அழைக்கிறது. முன்வருவோர் ஹேமாவதி அவர்களை +91 94443 35177 தொடர்பு கொள்ளலாம்.

    (பத்திரிகைச் செய்தி)

    Share
  • ஏ ஆர் ரஹ்மான் முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’

    ஏ ஆர் ரஹ்மான் முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’

    ஏ ஆர் ரஹ்மான் முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’  

    ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ – நமது பாரம்பரிய கலை, இசை, கலாச்சார வடிவங்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் ஒரு முற்றிலும் புதுமையான கூட்டு முயற்சி.

    கலாச்சாரம் என்பது தொடர்ச்சியானது; கலாச்சாரம் என்பது கால அடைவுகளுக்கு அப்பாற்பட்டது; அத்தகைய ஒரு பாரம்பரியமிக்க கலாச்சாரம் கொண்ட தமிழகத்தின் ஒலியை, ஒளியை, இசையை, ஓசையை, வலியை, வெளியை இசையின் மொழி கொண்டும் கலையின் வழி கொண்டும்  பாதுகாத்துப் பராமரிக்கும் ஒரு புதிய, புதுமையான கூட்டு முயற்சியாக ‘தa பியூச்சர்ஸ்’ உருவாகி இருக்கிறது.

    இந்த பிரமிப்பூட்டும் மகத்தான முயற்சியில், அகாடமி விருது வென்ற இசையமைப்பாளர் – இசை விஞ்ஞானி ஏ.ஆர். ரஹ்மான், மற்றும் உலகின் மிக முக்கியமான இசை கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட எம்ஐடியின் புகழ்பெற்ற ஊடக ஆய்வகத்தின் இசையமைப்பாளர் – இசை விஞ்ஞானி டோட் மக்கோவர், மற்றும் காலத்தால் அழியாத தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட ‘பெரிய எண்ணங்களின் பாதுகாவலர்’, ஆகச்சிறந்த இயக்குநர் பரத் பாலா, ஜே ஜெயராமன் ஆகியோர் இணைந்து எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை உங்களிடம் கொண்டு வருகிறார்கள்.

    இது குறித்து ஏ.ஆர். ரஹ்மான் பேசும் போது, ‘கிராமீய இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை எனப் பல வடிவங்களைத் இசை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இவையனைத்திற்கும் அப்பாற்பட்டு, இசை மக்களாகிய உங்களிடம் இருந்தே உருவாகிறது. நமது சமூக ஒலிகளே, கலைகளே ஒரு விதமான இசையாகிறது. சென்னைவாசிகள், தமிழர்கள் ஏன் இந்தியர்கள், இசையையும் கலையையும் அனுபவிக்கும் முறையை மாற்றுவதற்காகவும், புதிய கனவுகள், புதிய சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைத் தூண்டுவதற்கும், சாத்தியப்படுத்துவதற்கும் இசையை ஒரு புதிய பரிமாணத்தில் அனுபவிக்கவும் உங்களது கற்பனையைத் தூண்ட விரும்புகிறோம். ‘தா’ என்பது தாய், தமிழ், தந்தை, தர்மம் என பல விஷயங்களுக்கு ஒரு அடையாளச் சின்னமாகத் திகழ்வதாகவும், அது இந்த பெரிய முயற்சிக்கு ஒரு சிறிய விதையாக அமைவதாகவும் குறிப்பிட்டார். இந்த முயற்சி, டோட் மக்கோவரின் ‘சிட்டி சிம்போனி’ பாணியில் உருவாக இருப்பதால், மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது பங்களிப்பை வழங்கலாம் என்றும் அது குறித்த விபரங்கள் வெகு விரைவில் இணையத்தளத்தில் வெளியிடப்படும்” என்றார்.

     

    அடுத்ததாக, இயக்குநர் பரத் பாலா, ““கலாச்சாரம் என்பது தொடர்ச்சியானது; கலாச்சாரம் என்பது காலமற்றது; நான் அத்தகைய ஒரு கலாச்சாரம் கொண்ட பாரம்பரியமான தமிழகத்தின் மகன்; உலகில் நான் எங்கிருந்தாலும், அதை என் உணர்வுகளில், நரம்புகளில் உணர்கிறேன். நாங்கள் அதை எங்கள் பிறப்பிலிருந்து கற்றுக்கொள்கிறோம். எங்கள் தாயின் தாலாட்டிலிருந்து கற்றுக்கொள்கிறோம். அது நாங்கள் வளரும் போது காணும் காட்சிகள் மற்றும் ஒலிகளின் மூலமாக எங்கள் ஆன்மாவுக்குள் நுழைகிறது. எங்களை இறுதியாக வழியனுப்பும் பாடல்கள் வரை, எங்களது கடைசி மூச்சு வரை அது எம்மிடமே நிலைத்து இருக்கிறது. அன்றாட மக்களின் குரல்களிலிருந்து, வீதிகளின் நாதங்களிலிருந்து, பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் வரை அனைத்துமே எங்கள் அடையாளம். ஒலி, ஒளி, நாடகம் என எந்த ஊடகமாக இருப்பினும், உயிர்ப்பித்தல் என்பது எங்கள் தமிழ் ஒலியின்  கலாச்சாரம். இது தவிர்க்க முடியாதது” என்றார்.

    இந்த கூட்டு முயற்சியில் பங்கேற்றுள்ள மற்றோர் இசையமைப்பாளர் – இசை விஞ்ஞானி டோட் மக்கோவர், “இந்தியாவின் தொன்மையான கலாச்சாரம், அழுத்தமான கருத்துகள், ஒலிகள் மற்றும் இசை தனக்குள் மாணவப் பருவத்திலேயே ஒரு பெரிய உத்வேகத்தை உருவாக்கியதாகவும், இந்தப் பண்டைய பாரம்பரியத்தின் ஊற்றுக்கண்ணாக வெடித்துக் கிளம்பும் படைப்பாற்றலை, வேறு எங்கும் இல்லாத அளவிற்கு எதிர்கால ஆற்றலுடன் இணைக்கின்ற இந்தப் புதுமை முயற்சியில் தானும் இடம்பெறுவது தனக்கு பெருமகிழ்ச்சியாகவும், பெருமிதம் சேர்ப்பதாகவும் அமைந்திருக்கிறது” என்றார்.

    இது குறித்து ஜே ஜெயராமன் பேசும் போது, “நம்முடைய அழகான, அர்த்தமுள்ள இசையின் மூலம் எதிர்காலத்தைக் கற்பனை செய்துகொள்வது; காவிரி புகும் பட்டினம் முதல் சென்னை முதல் கேம்பிரிட்ஜ் வரை, இந்தப் பூமியின் மைந்தர்களாகிய நம்மை, நமது நம்பிக்கைகள், அபிலாஷைகள், ஆற்றல் மற்றும் குரல் ஆகியவற்றின் சாரத்தை வெளிப்படுத்தும் இசைபை, பெருமையுடன் பங்கேற்பதன் மூலம் உருவாக்க, ஓர் அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    மேலும் புத்திசாலித்தனமான மூன்று பேருடன் ஒன்றிணைந்து, தனித்துவமான மற்றும் தனியாகச் செய்ய முடியாத இந்த நுட்பமான பணியில், படைப்பின் வெளிப்பாட்டை, உங்களைப் போலவே நானும் அறிய ஆர்வமாக இருக்கிறேன். அதுவே நமக்குள் இருக்கும் சக்தியைக் கட்டவிழ்த்துவிட வேண்டுகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து இந்த முயற்சிக்குக் கை கொடுப்போம்” என்றார்.

    Share
  • கனடாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு

    கனடாவில் அமைந்துள்ள சுவாமி விபுலாநந்தர் கலை மன்றம் சார்பில் முனைவர் மு. இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் ஜூன் மாதம் 24 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள பெரிய சிவன்கோவில் கலாச்சார மண்டபத்தில் வெளியிடவும் திரையிடப்படவும் உள்ளது. சிறப்பு விருந்தினர்களாகப் பேராசிரியர் நரேஷ் தேவதாசனும், மருத்துவர் கயல்விழி தேவதாசனும் கலந்துகொள்கின்றனர்.

     

    விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தம் ஆவணப்படம் எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளார்.

    பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையை வழங்க உள்ளார். கவிஞர் புகாரி ஆவணப்படம் குறித்த தம் எண்ணங்களைக் கவிதை வடிவில் வழங்கிப், பாராட்ட உள்ளார்.

    தேநீர் விருந்துடனும், குழலிசையுடனும் தொடங்கும் இந்த நிகழ்ச்சிக்கு விபுலாநந்தர் கலை மன்றத்தின் தலைவர் வல். க. புருஷோத்தமன் தலைமை தாங்கவும், மன்றத்தின் துணைத்தலைவர் க. குமரகுரு வரவேற்புரை வழங்கவும் உள்ளனர். மன்றத்தின் செயலாளர் நித்தி சிவானந்தராஜா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். கனடாவில் வெளிவரும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் நாகமணி லோகேந்திரலிங்கம், உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சுவாமி விபுலாநந்தர் கலை மன்றத்தினர் செய்துள்ளனர்.

    தொடர்புக்கு:

    நித்தி சிவானந்த ராஜா – + 416 844 3304

    Share
  • எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு

     

           

    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது, அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது, ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு விருது, பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது / ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் தொழில்நுட்ப விருது, ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது / முத்துத்தாண்டவர் தமிழிசை விருது, பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது, சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது, தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது, அருணாசலக் கவிராயர் விருது மற்றும் பாரிவேந்தர் பைந்தமிழ் விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.

            இவ் விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 31 என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. பலரது வேண்டுகோளுக்கிணங்க சூன் 15 வரை விண்ணப்பிப்பதற்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, தகுதியுடையவர்கள் செயலர், தமிழ்ப்பேராயம், எண் 518, ஐந்தாம் தளம், பல்கலைக்கழக நிருவாகக் கட்டடம், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கழக நிறுவனம், காட்டாங்குளத்தூர் – 603 203 என்ற முகவரிக்குத் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 044 2741 7379 – ல் தொடர்புகொள்ளவும்.

    Share
  • சர்வதேச யோகா தின விழா

    தினமும் யோகா செய்யுங்கள் மன நிம்மதி கிடைக்கும் – காவல் ஆய்வாளர் பேச்சு

    unnamed (3)
    தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சர்வேதச யோகா தின விழா நடைபெற்றது.

    விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் முத்துகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,உடற்கல்வி முக்கியம் ஆகும்.பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.உடற்பயிற்சி செய்யும்போது பல நல்ல விசயங்கள் நமது மனதுக்கும்,உடலுக்கும் கிடைக்கும்.மாணவர்களாகிய நீங்கள் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதற்கும்,யோகா செய்வதற்கும் இந்த சிறு வயதில் பழகி விட்டால் உங்களின் வாழ்க்கை பிற்காலத்தில் பிரகாசமாக இருக்கும்,தினமும் யோகா செய்யுங்கள்.மன நிம்மதி அடையுங்கள்.பெற்றோர் ,பெரியவர்கள் சொல்லும் நல்ல விசயங்களை கடைபிடியுங்கள்.உங்களின் பள்ளி ஆசிரியர்கள் உங்களுக்கு பல வழிகளில் நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டுவார்கள்.அவற்றை பயன்படுத்தி வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள்.என்று பேசினார்.விழாவில் மாணவர்கள் ராஜேஷ்,ரஞ்சித்,விக்னேஷ்,ஆகியோர் பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தனர்.யோகா தொடர்பாக ஆங்கிலத்தில் மாணவர் ரஞ்சித்தும்,தமிழில் மாணவர் விக்னேஷும் பேசினார்கள்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா செய்து இருந்தார்.விழா நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

    unnamed (1)

    பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. தேவகோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துகுமார் யோகா தினம் தொடர்பாக பேசினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் உடன் உள்ளார்.

    Share
  • உலகப் புத்தக தினம்

     

    T.Stalin Gunasekaran,
    President,
    Makkal Sinthanai Peravai,
    A – 47, Sampath Nagar,
    Erode – 638011.
    Ph No : 0424 – 2269186.

    ab

    Share
  • வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்…

    சித்ரா பவுர்ணமி சிறப்பு தினத்தில்ஐஸ்வர்யம் அருளும் 1,116 கலசங்களுடன்பிரமாண்ட ஸ்ரீசத்யநாராயண பூஜை, ஹோமத்துடன் ஸ்ரீமகேஸ்வர பூஜை

    நாள்: 09.05.2017 செவ்வாய், 10.05.2017 புதன்

    வேலூர் மாவட்டம் வாலாஜா நகரத்தில் சோளிங்கர் செல்லும் சாலையில் அனந்தலை மதுராவில் அமைந்திருக்கிறது ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்.

    யக்ஞ பூமியாய் திகழும் இந்த புனித பீடத்தில் இதுவரை பல்லாயிரக்கணக்கான ஹோமங்கள் நடந்துள்ளன. இந்த ஹோமங்களில் கலந்து கொண்டு ஏராளமானோர் நினைத்த காரியம் கைகூடப் பெற்றனர். இதனால், பலனும் நிம்மதியும் அடைந்துள்ளனர்.

    வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்கு ஒரு முறை நேரில் வந்து தரிசித்துச் செல்கிற பக்தர்கள், மீண்டும் மீண்டும் இங்கு நடக்கிற வைபவங்களில் கலந்து கொள்ள வருவதே இதற்கு சாட்சி!

    வருகிற மே மாதம் 9 (செவ்வாய்) மற்றும் 10 (புதன்) ஆகிய இரு தினங்களில் பிரத்தியேகமான 1,116 கலசங்கள் வைத்து பிரமாண்டமான ஸ்ரீசத்யநாராயண ஹோமம் பூஜை மற்றும் ஸ்வாமிகளின் குருவான பெற்றோர்களுக்கு மகேஸ்வர பூஜையும் நடக்க இருக்கிறது.

    சித்ரா பவுர்ணமி காலத்தில் நடக்க உள்ள இந்த ஸ்ரீசத்யநாராயண வழிபாட்டிலும் மகேஸ்வர பூஜையிலும் கலந்து கொண்டால், குரு அருளுடன் அனைத்து ஐஸ்வர்யங்கள் உட்பட எல்லா நலன்களும் பெறலாம் என்று ஆன்மிக நூல்கள் சொல்கின்றன. பூஜையும் ஹோமங்களும் பூர்த்தி ஆன பின் இந்தக் கலசங்கள் அனைத்தும் பக்தர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்ற கொள்கையின் அடிப்படையில் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் – கயிலைமாமணி டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் இதை ஏற்பாடு செய்திருக்கிறார்.

    இரு நாள் வைபவங்களில் முதல் நாளான மே 9-ஆம் தேதி காலை ஸ்ரீகணபதி ஹோமம், ஸ்ரீநவக்கிரக ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும், அன்றைய தினம் மாலை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ள 1,116 கலசங்களுக்கு சிறப்பு பூஜையும் நடக்க உள்ளது.

    மறுநாள் 10-ஆம் தேதி காலையில் ஸ்ரீசத்யநாராயண பூஜையும் ஹோமமும்,மதியம் ஸ்வாமிகளின் குருவும் பெற்றோர்களும் ஆன தந்தை ஸ்ரீமான் K.B. ஸ்ரீநிவாசன், தாய் ஸ்ரீமதி கோமளவல்லி அவர்களின் திருவுருவ சிலைகளுக்குமகாஅபிஷேகமும் மகேஸ்வர பூஜையும் மாலையில் ஸ்ரீசத்யநாராயண ஹோமத்தின் மகாபூர்ணாஹுதியும் நடைபெறும். அதன் பின், யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசத்தின் புனிதநீர், ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரத்தியேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீசத்யநாராயணர் விக்கிரகத்துக்கு திரளான பக்தர்களின் முன்னிலையில் 16 திரவியங்களை கொண்டு திருமஞ்சனமும் செய்யப்படும்.அன்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதீஸ்வரர் மகான்கள், 468 சித்தர்கள், ஸ்ரீ காயத்ரி தேவி, மற்றும் ஸ்ரீ மகாமேருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.இதனை தொடர்ந்து கோபூஜையுடன் 5 விதமான திரவியங்கள்கொண்டு ஸ்ரீ அன்னபூரணி தேவிக்கு மகா அபிஷேகம் நடைபெற்று அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.
    .

    இரண்டு நாட்கள் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட இந்த 1,116 கலசங்களும் வருகின்ற பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்தக் கலசத்தில் அரிசி, தேங்காய், வஸ்திரம், ஜாக்கெட் பிட், வெற்றிலை பாக்கு, ஒரு ரூபாய் நாணயம் போன்றவை இருக்கும்.

    கலசத்தில் வைக்கப்பட்டிருக்கும் அரிசியில் சிறிது எடுத்து, உங்கள் இல்லத்தில் சமையலுக்கு சேகரித்து வைத்திருக்கும் அரிசியோடு சேர்க்கவும். இதில் மேலும் சிறிதை எடுத்துக் கொண்டு அதோடு, உங்களது சக்திக்கு ஏற்றவாறு ஒரு கிலோவோ அல்லது அதற்கு மேலோ சேர்த்து தகுதி உள்ளவர்களுக்கு தானம் செய்து விடவும்.அல்லது தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் அன்னதானத்திற்கு அளித்து அன்னபூரணியின்அருளைபெறலாம். இத்தகைய கைங்கர்யத்தால் உங்கள் இல்லத்தில் உணவுப் பஞ்சம் வரவே வராது.

    இந்தக் கலசத்தை பூஜையறையில் நிரந்தரமாக வைத்து வணங்கி வந்தால் குடும்பத்தில் அந்நியோன்னியம், பணியில் எதிர்பார்க்கின்ற நல்மாற்றம், திருமணம் போன்ற சுப வைபவங்கள், குடும்பத்தில் ஒற்றுமை, தொழிலில் அபிவிருத்தி போன்றவை உட்பட அனைத்தும் கிடைக்கும்.

    வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர், கயிலைமணி டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் இந்த வைபவத்துக்குத் தலைமையேற்று நடத்தி வைக்க… எண்ணற்ற மடாதிபதிகள், ஆதீனங்கள்,சாதுக்கள் மற்றும்சிவனடியார்கள்முக்கயஸ்தர்கள்கலந்துகொண்டுசிறப்பிக்க உள்ளார்கள். அன்று நடைபெறும் ஸ்ரீ மகா பெரியவா புகழ் பி.சுவாமிநாதன் அவர்களின் ஆன்மீக உரையை கேட்டு பயன்பெற பக்தகோடிகள் அனைவரையும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் குருவருளும் ஸ்ரீதன்வந்திரி பகவானின் திருவருளும் பெற அன்புடன் அழைத்து மகிழும்,

    தன்வந்திரி குடும்பத்தினர்.

    Share
  • National Science Day Invitation

    T.Stalin Gunasekaran,
    President,
    Makkal Sinthanai Peravai,
    A – 47, Sampath Nagar,
    Erode – 638011.
    Ph No : 0424 – 2269186.

    am

    am1

    Share
  • மணவை முஸ்தபா நினைவேந்தல் நிகழ்வு – 18 02 2017 சனிக்கிழமை

     

    நாள்: 18 . 02. 2017 சனிக்கிழமை
    நேரம்: மாலை 5.30 – 7.30 வரை
    இடம்: இந்திய அலுவலர் சங்கக் கட்டிடம்
    69, திரு.வி.க. நெடுஞ்சாலை
    இராயப்பேட்டை , சென்னை – 600014
    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :
    டாக்டர்.திருமதி. மணிமேகலை கண்ணன்
    தொடர்பு எண்கள் : 9841036222 , 8939462185

    am

    am1

    Share
  • கோபிசெட்டிப்பாளையம் பி.கே.ஆர்.மகளிர் கலைக் கல்லூரியில் இணையத்தமிழ் குறித்த சிறப்புரை

    மு.இளங்கோவன்

    ஈரோடு  மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள  பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் 03.01.2017 (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு இணையத் தமிழ் குறித்த சிறப்புரையும், செய்முறைப் பயிற்சியும் நடைபெற உள்ளன. புதுச்சேரி மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இணையத் தமிழ் குறித்த சிறப்புரையாற்றுகின்றார். அருகில் உள்ள கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் கலந்துகொள்ள இயலும்.

    கோபிசெட்டிப்பாளையத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடலும் கலந்துரையாடலும்

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் 03.01.2017 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குப் புலவர் மா. அரசு நினைவு கல்வி அறக்கட்டளையின் சார்பில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடலும் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.

    பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை. ப. சுந்தரேசனாரை ஆதரித்த பெருமக்கள் கொங்கு மண்டலப் பகுதியில் மிகுதியாகும். புன்செய்ப் புளியம்பட்டியைச் சேர்ந்த தமிழன்பர்கள் குடந்தை ப. சுந்தரேசனாரை அழைத்து அவர்தம் தமிழ்ப்பணிக்கு உதவியுள்ளனர். பஞ்சமரபு நூல் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்த வேலம்பாளையம் வித்துவான் வே.இரா. தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் ஓலையிலிருந்து பெற்றே பதிப்பிக்கப்பட்டது. இத்தகு பெருமைக்குரிய கொங்கு மண்ணில் ப.சு. ஆவணப்படம் திரையிடப்பட உள்ளமை ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

    கோபி, ஈரோடு, சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தமிழன்பர்கள்  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

    தொடர்புக்கு: திரு. அரசு தாமசு ஆசிரியர் அவர்கள் 9842097878

    Share