Author: செல்வரகு

  • “வரலாற்றின் மறுபக்கம்.”

    செல்வரகு

    (திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு)

    “வரலாற்றின் மறுபக்கம்.”

     

    சத்தியம் தொலைக்காட்சி வழங்கி வரும் உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட படைப்பின் தமிழ் வடிவம் “வரலாற்றின் மறுபக்கம்.”

    இது வரைக்கும் பார்க்காத உலகத்தைப் பார்த்து வியக்க வைக்கும் ஆணவக் களஞ்சியமாக , திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் வரலாற்றின் மறுபக்கம் ஒளிபரப்பாகி வருகிறது .

    ஒவ்வொரு முறையும் உலகத்தில் நடக்கும் ஒரு புதிய நிகழ்வைப் பதிவு செய்து வரும் வரலாற்றின் மறுபக்கத்தில் , வருகின்ற வாரத்தில் ஒளிபரப்பாக இருக்கும் ஆவணத் தொடர்கள் :

    06.05.2013 . உலகத்தில் – இரண்டு முறை வாழலாம் .

    கற்பனைக்கு எப்போதும் தடையில்லை . இன்று இருக்கும் தொழில் நுட்ப வெளியில் மனிதர்கள் கம்யூட்டரின் மூலம் எல்லை கடந்து வாழலாம் -என்ற அறிவின் தேடலைப் பற்றிய ஒர் ஆவணமே “உலகத்தில் இரண்டு முறை வாழலாம்”

    07.05.2013 . பூட்டான் – மகிழ்ச்சியின் உச்சம் .

    தெரியாத மனிதர்களைத் தெரிந்து கொள்ளலாம் . பூட்டான் நாட்டில் தொழில் நுட்ப வளர்ச்சிகள் அவ்வளவாக இல்லையென்றாலும்,  உலகத்தின் மகிழ்ச்சியான மனிதர்கள் அங்கு வாழ்வதாகச் சொல்கிறார்கள். பூட்டான் மக்களின் கலாச்சாரத்தையும் , அவர்களின் புத்த மதக் கொள்கைகளையும் தெரிந்து கொள்ளுங்கள் .

    08.05.2013 . புதைந்த – இந்திய சுற்றுச் சூழல் .

    இந்தியா முழுக்க பரந்த ஒர் பார்வையில் சுற்றுச் சூழல் மாசுபாடுகளைத் தத்ரூவமாக ஆவணமாக்கியுள்ளார்கள் .

    09.05.2013 . ஆப்கானிஸ்தான் – ‘காபூல்’ கால்பந்து மன்றம் .

    33 வருடங்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் – பாக்கிஸ்தானுடன் உலக கால்பந்தாட்டத்தில் களம் இறங்கி , தகுதிச் சுற்றுக்குத் தயாராகிய நிகழ்வை இப்போது நீங்கள் காண இது ஒரு நல்லவாய்ப்பாக இருக்கும்.

    10.05.2013 . சௌத்ஆப்பிக்காவின் – முக்கிய நாசக்காரன் .

    சௌத்ஆப்பிக்காவில் , யூஜின் அலெக்சான்டர் எனும் கொடுமைக்காரனைப் பற்றிய சுயசரிதை பார்வையாளர்களை நிச்சயம் அதிர்ச்சியடையச் செய்யும் .

    வாரத்தின் 5 நாட்களும் தவறாமல் வரலாற்றின் மறுபக்கத்தைப் பாருங்கள். உலக நிகழ்வின் உருவாக்கத்தை உணருங்கள் .

    Share
  • ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிப்பில் 3 ஜீனியஸ்

    செல்வரகு
    ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிக்கும் புதிய படம் 3 ஜீனியஸ். இது மலேசியாவில் தயாரிக்கப்பட்டத் தமிழ்த்திரைப்படம்.

    கதைச்சுருக்கம்

    மக்களின் விழிப்புணர்ச்சிக்கு விஞ்ஞானம் ஒரு மகத்தான பங்கு வகிக்கிறது. அணு சக்தியால் ஏற்படும் நன்மைகள் நானோ தொழில் நுட்பம் போன்ற அறிவியல் விழிப்புணர்வை வலியுறுத்தி உருவாக்கப் படுகிறது 3 ஜீனியஸ். அதி புத்திசாலிகளாகப் பிறக்கும் 3 குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட கதை 3 ஜீனியஸ்.

    இப்படத்தில் மலேசிய முன்னணி நடிகர்கள் லண்டன் டான் பிரசன்னா, சசி அபாஸ், அகோதரன், சங்கீதா, கவிதா, ஜஸ்பீர் , ஆனந்த ராஜ் , இவர்களுடன் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரமான விஞ்ஞானி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

    இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்காக நான்கு நாடுகளில்  நான்கு பேர் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்.பாகிஸ்தானிலிருந்து யாசின், சிங்கப்பூரிலிருந்து ஆனந்த்ராஜ், நைஜீரியாவிலிருந்து கிரிஷ், அரேபியாவிலிருந்து அலிபாய் ஆகியோர் தான் அந்த நான்கு வில்லன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குகிறார் P.K. ராஜ். அதிநுட்பத் தொழில் நுட்பத்துடன் ஒளிப்பதிவு செய்கிறார் மகேஷ் K தேவ். இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியன் இசையமைக்கிறார்.

    இந்தப் படத்தில் இடம்பெறும் 5 பாடல்களும் மலேசியா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டிருக்கிறது.

    தொழில் நுட்பக் கலைஞர்கள்

    கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்: P.K.ராஜ்

    ஒளிப்பதிவு: மகேஷ் K தேவ்

    இசை: ஆதிஷ் உத்ரியன்

    நடனம்: சந்துரு

    கலை: முருகன்

    ஆக்‌ஷன்: கெளதம் முருகன்]

    P.R.O  : S.செல்வரகு

    தயாரிப்பாளர்கள்: புண்ணியமூர்த்தி கணேசன்  – சிவா கணேசன் – விஜேந்திரன்

     

     

    Share
  • சங்கரா தொலைக்காட்சியின் சரசுவதி கடாட்சம்

    செல்வரகு

    சரஸ்வதி கடாக்ஷம்

    (காலை 7.30 மணி முதல் 8.00 மணி வரை)

    திங்கள் முதல் வெள்ளி வரை உங்கள் ஸ்ரீ சங்கரா டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, சரஸ்வதி கடாக்ஷம்.  இந்நிகழ்ச்சியானது, ஒவ்வொரு பள்ளிகளுக்கம் நேரிடையாக சென்று, அங்கு கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் தியான ஸ்லோகத்துடன் ஆரம்பித்து, சங்கல்பம், பூஜை, அர்ச்சனை, மற்றும் ப்ராத்தனைகளும் இடம் பெறும்.  இறுதியில், ஒரு சிறந்த கல்வியாளர், கல்வியின் நுணுக்கத்தை பற்றி விளக்குகிறார்.  இந்நிகழ்ச்சி, காலை 7.30 மணி முதல் 8மணி வரை நேரடியாக ஒளிப்பரப்பாகிறது.  உங்கள் பள்ளியும்  இந்நிகழ்ச்சியில்  இடம் பெற, ஸ்ரீ சங்கரா டிவியை தொடர்பு கொள்ளவும்.  044-45072009

    Share
  • ஐ.ஏ.எஸ். இலவச பயிற்சி முகாம், புதுக்கல்லூரி

    செல்வரகு

    சீட் அறக்கட்டளை தமிழ்நாடு சார்பாக இலவச ஐ.ஏ.எஸ்.பயிற்சி முகாம் துவக்க விழா புதுக்கல்லூரி கணினி அறையில் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் டாக்டர் வி.இறைஅன்பு I.A.S தமிழ்நாடு அரசு பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை,V.H.முஹம்மது ஹனிபா I.P.S, எஸ்.எம்.இதயத்துல்லா,தலைமை நிர்வாகி சீட் அறக்கட்டளை,கலீலுல்லாஹ் சாஹிப் ,தலைவர் மியாசி மற்றும் புதுக்கல்லூரி, முகமது அஷ்ரப், செயலாளர் மியாசி மற்றும் புதுக்கல்லூரி,அபூபக்கர், அகில இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர்,டாக்டர் கே.அல்தாப், முன்னாள் முதல்வர் புதுக்கல்லூரி, டாக்டர் அப்துல் மாலிக்,முதல்வர் புதுக்கல்லூரி,எஸ்.அப்துல் கரீம், நிர்வாகி சீட் அறக்கட்டளை, எம்.எஸ்.ஹபீப் ரஹ்மான், நிர்வாகி சீட் அறக்கட்டளை.ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Share
  • மெகா இண்டர் காலேஜ் உலக சாதனையாளர் திருவிழா

    செல்வரகு

    சத்தியம் தொலைக்காட்சி இணைந்து நடத்தும் “மெகா இண்டர் காலேஜ் உலக சாதனையாளர் திருவிழா” தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் தொடங்க இருக்கிறது . இந்தப் பிரமாண்டமான நிகழ்விற்குத் திரையுலக முன்னணி பிரபலங்கள் பெறும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

     

    நடிகர் ஆரியா , “மெகா இண்டர் காலேஜ் திருவிழா”வில் கலந்து கொள்வாதகத் தெரிவித்துள்ளார்.  “விளையாட்டுத்தனமாக இருந்தாலும் படிக்கின்ற வயதில் இம்மாதிரியான போட்டிகள் மாணவர்களுக்கு நல்ல அங்கிகாரத்தைக் கொடுக்கும் . இந்தச் சாதனையாளர் திருவிழாவில் கலந்து கொண்டு , நாம் யார் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபிப்போம்” என நடிகர் ஆர்யா கூறினார் . அவரைத் தொடர்ந்து,  நடிகை அஞ்சலி மற்றும் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியும் இந்த உலக சாதனையாளர் திருவிழாவில் இணைந்து செயல்படுவதாகக் கூறியுள்ளார்கள் .

    ஒரே நிகழ்வில் 100 விதமான போட்டகளைத் –  தனித்தனித் துறைகள் வாரியாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் . கல்லூரிப் பேராசியர்களுக்கும் தனித்துவமான போட்டிகள் உண்டு .

    கல்லூரிப் பருவத்தில் போராடத் துடிக்கும் இளைய தலைமுறைகளுக்குத் தமிழக அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு , வெற்றியாளர்களை இந்தியளவிலும் – உலகளவிலும் மேடை ஏற்ற பல விதமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள் . ஒட்டு மொத்த அளவில் வெற்றி பெறும் கல்லூரிக்குக் கேடயமும் , பதக்கமும்  வழங்கப்படும் .

    மாணவர்களே ..! திறமையிருந்தும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று புலம்ப தேவையில்லை .  வெறும் ஆர்வமும் , வெற்றுக் கரிசனும் மட்டும் இருந்தென்ன செய்வது …? உங்களைத் தேடி விருதுகள் கொடுக்க வருகிறார்கள் . உங்களை நீங்கள் தகுதிப்படுத்துங்கள் . 10 லட்சத்திற்கும்  அதிமான மாணவ – மாணவிகள் கலந்து கொள்ளும் இந்தச் சாகச நிகழ்வுகளில்  உங்களுக்கான இடத்தை நீங்களே தேர்ந்துக் கொள்ளுங்கள் . சத்தியம் தொலைக்காட்சி இணைந்து நடத்தும் இந்த மாபெறும் முயற்சியின் வழி , உலக அரங்கில் உங்களுடைய  நாற்காலியை வந்து பாருங்கள்

    மேலும் விவரங்களுக்கு : www.micrf.com

    Share
  • ஜூனியர் சூப்பர் டான்சர்

    செல்வரகு

    (பாலிமர் தொலைக்கட்சியில் ஞாயிறுதோறும் காலை 10 மணி முதல் 11மணி வரை)

    ஜூனியர் சூப்பர் டான்சர்

    உங்கள் பாலிமர் தொலைக்கட்சியில் ஞாயிறுதோறும் காலை 10 மணி முதல் 11மணி வரை பிரமாண்டமான நடன மேடை அமைத்து கலா மாஸ்டர் இயக்கத்தில் இணைந்து கலக்கும் ஜூனியர் சூப்பர் டான்சர் எனும் புதிய நிகழ்ச்சிஒளிபரப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் 8 வயது முதல் 13 வயதுள்ள 52 சுட்டி பசங்கள் மற்றும் நட்சத்திர நடுவர்கள் நமீதா ,அசோக் மாஸ்டர் ,பிரசன்னா  மாஸ்டர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் முதலில் அறிமுக சுற்று நடைபெறுகிறது .இதில் நடிகை அனுராதா மகள் அபிநயா ஸ்ரீ மற்றும் டான்சர் பாபி ஆகியோர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக பங்கேற்கிறார்கள் .

    Share
  • பத்திரிகையாளர்கள் எதிர் கட்சியாக செயல்பட வேண்டும்

     

    டி .எஸ்ஆர் சுபாஷ்


    02.12.2012 நெல்லை மாவட்டம்  தென்காசியில் அமைந்துள்ள பத்திரிக்கையாளர் சங்க கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டி .எஸ் .ஆர் .சுபாஷ் கலந்து கொண்டு பேசியபோது, ”எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எந்த கட்சி எதிர்கட்சியாக விளங்கினாலும் பத்திரிக்கையாளர்கள் எதிர்க்கட்சிப் போல செயல்படவேண்டும் என்று பேசினார். மகாகவி பாரதியைப் பற்றி பேசுகையில் தேசப்பிதாவாக     விளங்கிய மகாத்மா காந்தியையே விமர்சித்து, அவருக்குகே கடிதம் எழுதிய தைரியப் பத்திரிக்கையாளராக விளங்கிய பாரதிக்கு மட்டுமே இருந்தது என்றும், பாரதி பிறந்த தினத்தை தமிழக அரசு பத்திரிக்கையாளர் தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசிய  ‘தமிழக கதர் மற்றும் கிராமத்தொழில் துறை அமைச்சர்’ மாண்புமிகு ராஜா P.செந்தூர்பாண்டியன் அவர்கள் பேசுகையில் “பத்திரிகையாளர்கள் எதிர்க்கட்சிப் போல செயல்பட வேண்டிய அவசியம் அம்மாவின் ஆட்சியில் இருக்காது”  என்றும், எதிர்க்கட்சிகளும், பத்திரிகையாளர்களும் குறை சொல்ல முடியாதவாறு  செயல்பட்டுக் கொண்டு வருவதாகும் பதில் அளித்து பேசினார்.

    சங்க  கட்டிடத்திற்கு நிதி உதவி செய்த தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தோழர். பொ.லிங்கம்  பத்திரிகையாளர்களின் கடமையை பற்றி பேசினார்.

     

    திருநெல்வேலி  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமிகு. எஸ். விஜயேந்திரபிதாரி I.P.S, அவர்கள் சமுதாயத்தில் பத்திரிகையாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
     
    தென்காசி  சட்டமன்ற உறுப்பினரும் சமத்துவ  மக்கள் கட்சி தலைவருமான, ‘சுப்ரீம் ஸ்டார்” ஆர்.சரத்குமார் அவர்கள் பேசுகையில், ‘மாநில தலைவர்’ டி.எஸ்.ஆர்.சுபாஷ் பேசுகையில் பத்திரிக்கையாளர்கள் எதிர்க்கட்சி போல செயல்பட வேண்டும் என்று பேசினார். நான்  திரைப்பட உலகிற்கும், அரசியல் உலகிற்கும் வரும் முன்பே நான் பத்திரிகையாளராகத்தான் என் பொது வாழ்க்கையை துவங்கினேன் என்றும் ஜனாதிபதியையே கேள்வி கேட்கும் வலிமை பத்திரிகையாளருக்கே இருக்கிறது என்றும், வாள் முனையை விட பேனாவின் முனை கூர்மையானது என்றும் பேசினார்.

    அரசு  செயல்பாடுகள் சிறப்பாக அமைவதாலும், பத்திரிகையாளர்களின்  நியாயமான கேள்விகளுக்கு செவி சாய்ப்பதாலும், எந்த எதிர் கட்சிகளுக்கும் வேலை இல்லை என்றும், பத்திரிகையாளர்கள்  எதிர்க்கட்சி போல் செயல்படவேண்டிய அவசியம் இருக்காது என்றும்  பதில் அளித்து பேசினார்.

    மேலும்  இந்நிகழ்ச்சிக்கு, தென்காசியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களான, கோட்டாட்சித் தலைவர் P.இராஜா  கிருபாகரன், காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் R.பாண்டியராஜன், நகரமன்ற தலைவி  திருமதி S.பானு, V.சுடலை, R.இசக்கியப்பன், M.இப்ராஹிம், மற்றும் ஏராளமான  அரசியல் பிரமுகர்களும்  பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர்.

    (TUJ) சங்கத்தின் பொதுச்செயலாளர்கள்  கு.வெங்கட்ராமன், ‘கடலூர்’ K.ரமேஷ்குமார், ‘விருதுநகர்’  பழனிகுமார், ‘நெல்லை’ ராமகிருஷ்ணன், சென்னை மாவட்ட நிர்வாகிகள், “வாசன் பார்வை” செல்லப்பாண்டியன், “கழுகு” K.ராஜேந்திரன், “கடலூர்”  முனுசாமி, பக்ருதீன், , ஏ.வி.பி  ஜான்சன், பீர் ஹுசைன் I.ஆனந்தராஜ் ‘உடுமலை செல்வராஜ், எஸ்.செல்வரகு-PRO, ‘திருப்பூர்’ முரளி, விஜயா, இளங்கோ, ‘ஆடிட்டர்’ கண்ணன் மற்றும் பலர்.  

    கலந்து  கொண்டு சிறப்பித்தார்கள்.

     
    சிறப்பு அழைப்பாளராக புதுவை பிரஸ்கிளப் தலைவர் மதி மகாராஜா பங்குபெற்றார். முன்னதாக தென்காசி பத்திரிகையாளர் சங்க கௌரவ தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான தோழர் M. சண்முகம் வரவேற்புரை வழங்க, தென்காசி பத்திரிகையாளர் சங்கத் தலைவர் தோழர் M.முத்துசாமி நன்றியுரையாற்றினார்.

    இந்த  வரலாற்று சிறப்பு மிக்க  நிகழ்ச்சியில் டி.யூ.ஜெ வின் மாநில துணைப் பொதுச்செயலாளரும், நெல்லை மாவட்டத்தின் செயல்  வீரருமான தோழர் ஜி.பரமசிவம் அவர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து அனைவரையும் வியக்க வைத்தார்.

     

     

    Share
  • மாநகர காவல் ஆணையரை சந்தித்தது TUJ

     

    செல்வரகு

    நடவடிக்கை எடுக்குமாறு மறு கோரிக்கை

     

    தமிழ்நாடு  பத்திரிக்கையாளர் சங்க தலைவர் DSR சுபாஷ் அவர்கள் சிக்கிமில் நடைபெறும் அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் (IJU)தேசிய மாநாட்டில் கலந்துகொண்டிருந்த சமயத்தில் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட சில விஷமிகள் சென்னை காவல் ஆணையாளரிடம் கொடுத்த பொய் புகார் கொடுத்ததை கண்டித்து சங்கத்தின் மாநில பொது செயலாளர் கு.வெங்கட்ராமன் தலைமையில் பத்திரிக்கையாளர்கள் ஒன்று கூடி இன்று 10-11-12 —மாலை  5.30 மணிக்கு சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து  நடவடிக்கை எடுக்குமாறு மறு கோரிக்கை அளித்துள்ளனர் . அதன் நகல் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது .

     

    Share
  • Ladies special weekly Magazine 15th Anniversary Function

     


    Looking forward your presence

    Parvathy balasubramanian

    (Sruthilaya Vidyalaya)

     
     

    Thanks & Regards

    S.Selvaragu-PRO 

    (Film & Channel)
    9003024334
    9382209649
    8015765631
    selvaragu.s.pro@gmail.com
    Share
  • விஜயகாந்திற்கு எதிராக போராட்டம் வலுக்கிறது

     

    செல்வரகு

    தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக அதன் மாநில தலைவர் DSR சுபாஷ் தலைமையில் கொட்டும் மழையில் இன்று 30-10-12 வள்ளுவர் கோட்டம் முகப்பில்  டிவி நிருபரை அவதுறாக பேசிய தே .மு .தி .க தலைவர் விஜயகாந்தை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது .பத்திரிக்கையாளர்கள்

    ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, மேலும் சாலை மறியலும் நடைபெற்றதால் பதட்டமான சூழ்நிலை நிலவியது .அங்கு பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த போலீசார் தலையிட்டு கூட்டத்தை கலைத்தனர் .இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு கைது செய்யாவிடில் மேலும் போராட்டம் தொடரும் என்று TUJ மாநில தலைவர் DSR சுபாஷ் அறிவித்துள்ளார் .

     

     

     

     

     

     

    Share
  • மீண்டும் ‘இல்னாவின்’ தலைவராக பரேஷ் நாத்

     

    செல்வரகு

     

    BY,

    T.JAYANTHI

    EDITORIAL IN-CHARGE,
    GRIHSHOBHA (Delhi press Group)

     

    Share
  • காவேரி நீர் திறந்து விடக் கோரி ஆர்ப்பாட்டம்

     

     
    Tomorrow 10-10-12 Wednesday 4pm at Chepauk Stadium (oppsite to Govt Guest house)

    Thanks & Regards

     

    S.Selvaragu-PRO 

    (Film & Channel)
    9003024334
    9382209649
    8015765631
    selvaragu.s.pro@gmail.com
    Share
  • Welcome to view MOON TV

     

    Selvaragu

    We would like to introduce ourselves “Moon TV” GEC And  News & Current Affairs Channel, which was officially launched on 20th March 2009..


             “Moon TV” is a 24X7 Channel We broadcast programs for all genres.We are telecasting more informative programs and our infotainment programs include reality shows, talk shows, game shows, health shows, spiritual shows, lifestyle, travel, cooking, science, fiction, history, comedy, children’s television shows and much more.

             

               The Channel is blended with young and experienced professionals who contribute their new and innovative ideas to all program.

     

               The Channel is going to have a very good reception in market and acceptance among the viewers.

     

    The shows are………

    Education: Kalvi Selvam

                       Phuthiyana Karpoom

    Break Fast Show: Thenkoodu

    DOCTOR”S SHOW: Nalam Kapoam

    BUSSNESS: Neengalum Sambathikkalam

                           Vanga Virka

    GAME SHOW: Sollungal Vellungal

    News:  Moon Muthirai Seithigal

    Islamic programe: KI PEE 570- Islamiya Varalaaru

                  Historical: Sarithiram Saivoum

                   Kids Show:   Lolipup

                  Gluf band:  Valaikuda Nigalchigal

     MOON TV is a Free to air channel and is currently transmitting in IS 17 satellite whose orbital placement is 66* East and is available in 130 countries across the globe for the development of youth. It broadcasts its programs in the universal language of Tamil and reaches millions of Tamil speaking people across the world.

    Penetration across the countries

             MOON TV channel is available in Tamilnadu Arasu Cable and UAE, Saudi Arabia, Kuwait, Oman, Bahrain, Qatar by E Vision via its Direct to Home services whose connectivity reaches to 1.2 Million households and it being a Free to air channel is tuned by millions of people with the help of 12 feet dish antenna is and reaches a connectivity of 1 Million households.

             Moon TV is also available via People TV., LBN in Srilanka reaching up to 1.2 Million households.

    . Kindly request you to inform that our Moon channel programs and FPC publish in  your esteemed dailys, magazines and websites.

    Thanking you,

    MOON VISION PRIVATE LIMITED

    M P M ABDUL CADER

    Chief Operationg Officer

     

     

     

    PLACE:Chennai

     

    DATE:  09-10-2012

    Share
  • சங்கரா தொலைக்காட்சி – குலதெய்வங்கள்

     

    குலதெய்வங்கள்

    ஒரு கிராமத்து மக்களின் வாழ்வியலை  அறிய வேண்டுமானால், அக்க்ராமத்தில் உள்ள கோவில்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  தம் வாழ்க்கை மேம்பாட்டுக்காக, வழிமுறைகள் சீர் குலையாமல் இருப்பதுற்காக அமைந்ததுதான் குல தெய்வம். 

     

    தம் முன்னோரை தெய்வமாக கொண்டு கல் நட்டு  போற்றிய மனிதனின் வழிபாட்டில் வளர்ச்சி ஏற்பட்டு, வீட்டுக்கு என்று, காட்டுக்கு என்று தெய்வ வழிபாடு பெருகி வீட்டுத் தெய்வமாய், உயிர்த தெய்வமாய் வளர்ந்த வரலாற்றை கூறும் நிகழ்ச்சியிது.

     

    நாட்டுபுற  தெயுவங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய நிகழ்ச்சி.  கள ஆய்வு மேற்கொண்டு வழிபடும் ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள், குல தெய்வங்கள் பற்றிய தொகுப்பு.  நாட்டுப்புறத் தெய்வங்களின் வழிபாட்டு சடங்குகள் குறித்தும், வழிபாட்டு பாடல்களையும், தெய்வங்களின் பெயர்களையும் இணைத்து வழங்கும் நிகழ்ச்சியிது.

     

    படித்தவரை விட பாமரர் இடத்துச் செல்வாக்கு பெற்றது  குல தெய்வங்கள்.  இது அவர்கள் தொழிலோடும், ஒழுக்கத்தோடும் நெருங்கிய தொடர்பு

    கொண்டது.

    குல தெய்வம் பற்றிய புதுமையான நிகழ்ச்சி சங்கரா தொலைகாட்சியில் ஒளிபரப்பவிருக்கிறது .

    இந்நிகழ்ச்சியில் உங்கள் குல தெய்வமும் இடம் பெற வேண்டுமானால் தொடர்பு கொள்ள வேண்டியது – mariappan@srisankaratv.net (o) 95000 52250. 

     

    Thanks & Regards

    S.Selvaragu-PRO (Film & Channel)
    9003024334
    9382209649
    8015765631
    selvaragu.s.pro@gmail.com
    tweet to @selvaragupro

    Share