மெகா இண்டர் காலேஜ் உலக சாதனையாளர் திருவிழா
செல்வரகு
சத்தியம் தொலைக்காட்சி இணைந்து நடத்தும் “மெகா இண்டர் காலேஜ் உலக சாதனையாளர் திருவிழா” தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் தொடங்க இருக்கிறது . இந்தப் பிரமாண்டமான நிகழ்விற்குத் திரையுலக முன்னணி பிரபலங்கள் பெறும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் ஆரியா , “மெகா இண்டர் காலேஜ் திருவிழா”வில் கலந்து கொள்வாதகத் தெரிவித்துள்ளார். “விளையாட்டுத்தனமாக இருந்தாலும் படிக்கின்ற வயதில் இம்மாதிரியான போட்டிகள் மாணவர்களுக்கு நல்ல அங்கிகாரத்தைக் கொடுக்கும் . இந்தச் சாதனையாளர் திருவிழாவில் கலந்து கொண்டு , நாம் யார் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபிப்போம்” என நடிகர் ஆர்யா கூறினார் . அவரைத் தொடர்ந்து, நடிகை அஞ்சலி மற்றும் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியும் இந்த உலக சாதனையாளர் திருவிழாவில் இணைந்து செயல்படுவதாகக் கூறியுள்ளார்கள் .
ஒரே நிகழ்வில் 100 விதமான போட்டகளைத் – தனித்தனித் துறைகள் வாரியாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் . கல்லூரிப் பேராசியர்களுக்கும் தனித்துவமான போட்டிகள் உண்டு .
கல்லூரிப் பருவத்தில் போராடத் துடிக்கும் இளைய தலைமுறைகளுக்குத் தமிழக அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு , வெற்றியாளர்களை இந்தியளவிலும் – உலகளவிலும் மேடை ஏற்ற பல விதமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள் . ஒட்டு மொத்த அளவில் வெற்றி பெறும் கல்லூரிக்குக் கேடயமும் , பதக்கமும் வழங்கப்படும் .
மாணவர்களே ..! திறமையிருந்தும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று புலம்ப தேவையில்லை . வெறும் ஆர்வமும் , வெற்றுக் கரிசனும் மட்டும் இருந்தென்ன செய்வது …? உங்களைத் தேடி விருதுகள் கொடுக்க வருகிறார்கள் . உங்களை நீங்கள் தகுதிப்படுத்துங்கள் . 10 லட்சத்திற்கும் அதிமான மாணவ – மாணவிகள் கலந்து கொள்ளும் இந்தச் சாகச நிகழ்வுகளில் உங்களுக்கான இடத்தை நீங்களே தேர்ந்துக் கொள்ளுங்கள் . சத்தியம் தொலைக்காட்சி இணைந்து நடத்தும் இந்த மாபெறும் முயற்சியின் வழி , உலக அரங்கில் உங்களுடைய நாற்காலியை வந்து பாருங்கள்
மேலும் விவரங்களுக்கு : www.micrf.com