பாரதி கண்ட கோதை
விசாலம்
ஒரு நாள் மஹா கவி பாரதியார் திருவல்லிக்கேணி ரோட்டில் நடந்துக் கொண்டிருக்க ஒரு அருமையான அவர் இயற்றியப் பாடல் ஒன்று காற்றினில் மிதந்து வந்தது.
“ஜயபேரிகைக் கொட்டடா” …… ஒரு இனிமையானக் குரல் அவரை இழுத்தது . மெய் மறந்து நின்றார் அவர் . அப்போது அவர் சுதேசமித்திரனின் துணை ஆசிரியராக இருந்தார். போகும் போது திரு வெங்கடாசாரியாரின் வீட்டுத் தெரு வழியாக்கத்தான் போவார் ,ஆம் அந்தப்பாடலைப் பாடியவர் ஒரு சிறு பெண், பெயர் கோதை நாயகி, பாரதியாரின் வீட்டிலும் அவரது இரு பெண்கள் { தங்கம்மாள் சகுந்தலா} இருந்தனர், கோதை பாடியப் பாட்டில் மயங்கி கோதை வீடு நுழைந்து அந்தப்பெண்ணை வாழ்த்தினார். அன்றைய தினத்திலிருந்து பாரதியார் தாம் புனைந்த பாடல்களைத் தருவதும் கோதை அதைப் பாடிக்காட்டுவதும் வழக்கமாயிற்று . ஒரு நாள் கோதையை பாரதி தன் வீடு அழைத்தார். கோதை மிகச் சங்கோசத்துடன் தலையைக் குனிந்துக் கொண்டாள் ஆனால் பிற்காலத்தில் அவர் ஒரு பெரிய நாடக ஆசிரியர் எழுத்தாளர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர் என்று பல திசைகளில் முன் நிலையில் நின்றவர், நம் மனதில் அவர் பெயர் பதிந்து விட்டது அவர்தான் திருமதி வை. மு கோதை நாயகி அம்மாள.
திருமதி வை மு கோதை நாயகியை எனக்கு நன்றாக தெரிய வைத்தது என் அத்தைதான் . அவர் இவருடைய பல நாவல்கள் புத்தகாலயத்திலிருந்து எடுத்து வருவார். .ஆனால் கண் பார்வை குன்றியதலால் அவர் ப்டுத்தி ருக்க அவர் தலைமாட்டில் அமர்ந்து நான் தான் அவருக்குக் கதைகளைப் படித்துச் சொல்லுவேன் .அப்படி படித்தே அவருடைய எழுத்தும் கற்பனையும் என்னை மிகவும் கவர்ந்தன . அவருடைய பல நாவல்கள் சினிமாவாக வந்து சக்கைப்போடு போட்டு அவருக்கு விருதுகளும் வங்கித்தந்துள்ளன .அதில் எனக்கு மிகவும் பிடித்தது “சித்தி’ திருமதி பத்மினி நடித்த படம்.
பாரதியாரைப் போலவே ஆவேசமாக வீரமாகப் பாடும் ஒருவர் இருந்தார் ,அவர் பெயர் திரு சங்கு சுப்பிர மண்யம் ” சுதந்திரச்சங்கு” என்ற பத்திரிக்கையை நடத்தி வந்ததால் அவரை எல்லோரும் ” சங்கு சுப்பிர மணியம்” என்று அழைத்தனர். பாரதியாரின் பாடல்களை அந்தக்காலத்தில் பரப்பிய புகழ் திருமதி கோதை நாயகிக்கும் சங்கு சுபிரமண்யத்திற்கும் சேரும் ….. கோதைக்கு சுமார் பத்து வருடம் இருக்கும் அப்போதே
அவருக்கு பாலவிவாஹம் நடந்து விட்டது அவரது கணவர் திரு பார்த்தசாரதி, அவரை இசைக் கச்சேரிக்கு அழைத்துச் செல்வார் அந்தக்காலத்தில் வைதீகக் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே கச்சேரி போன்றவைகளுக்குப் போகமாட்டார்கள். ஆனால் கோதைநாயகியின் கணவர் இளமையிலேயே புரட்சி , சீர்த்திருத்தம் என்ற முற்போக்குக் கொண்டிருந்தவர். அவர் தன் மனைவியை நன்கு பாட வைத்தார். ஒரு நாள் மேடைக் கச்சேரியில் தன்னை மறந்து அவர் “மருவேறேதிக் கெவரையா ராமா” என்று பாட முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு வித்துவான் அகமகிழ்ந்து உள்ளே வந்து வாழ்த்திவிட்டுப் போனார் . அவர் தான் பாலக்காடு அனந்தராம பாகவதர் பின்னால் கோதையின் குருவானார் திருமதி கோதை நாயகியின் இசைப் பயணம் இப்படித்தான் ஆரம்பித்தது .கவிக்குயில் சரோஜினி தேவி அவர்கள் அடிக்கடி கோதை வீட்டுக்குச் செல்வாராம். அவரைச் செல்லமாக அணைத்துக்கொண்டு அவர் விரும்பும் பாடல்களெல்லாம் கேட்டு அக மகிழ்வாராம் அவர் மிகவும் விரும்பியப் பாடல் “பாரத சமுதாயம் வாழ்கவே …. “வந்தே மாதரம் என்போம் …….. “சென்னை வானொலி நிலயம் 1938ல் தொடங்கப்பட்டது . அதன் திறப்பு விழாவில் திரு ராஜாஜி அவர்கனின் முன்னிலையில் பாடிய பெருமை திருமதி வை மு கோதை நாயகிக்குக் கிடைத்தது. ஆண்டுதோறும் பாரதியாரின் நினைவு நாளில் கோதைநாயகியின் பாட்டு வானொலியில் நிச்சயம் ஒலிக்கும் ,இதன் நடுவே ” அன்பின் சிகரம் “என்ற நாடகம் எழுதி அவரே நடித்தார் . டைரக்டரும் அவரே. அவர் அறிவு மேலும் மேலும் வளர்ந்தது . அவர் மாமியார் .அந்தக்காலத்தில் “கன்னையா கம்பெனி ” என்று ஒரு நாடகக் கம்பெனி இருந்தது, அதில் தான் திருமதி கேபி சுந்தராம்பபள் திரு கிட்டப்பா போன்றவர் இருந்து நடித்தனர். திரு,பார்த்தசாரதி தன் மனனவியை பல நாடகங்களுக்கும் அழைத்துச் சென்றதின் பலனாக கோதைக்கு கற்பனாசக்தி ஊற்றுப்போல் பெருக்கெடுத்தது. அவரின் முதல் நாடகம் “இந்திரமோகனா “வெளிவந்து அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இவரைப் பற்றிச் சொன்னால் எழுதி கொண்டே போகலாம். இவரது தாயார் இவருக்கு மிகவும் பக்க பலமாக இருந்தார்
ஆரம்பத்தில் கோதைக்கு எழுத வாரத நிலையில் கோதை தன் கற்பனையில் கதைசொல்ல அவரது தாயார் அத்தனையும் எழுதிவிடுவாராம் அவர் சொல்லி திருமதி பட்டம்மாள் எழுதிய முதல் நாவல் “இந்திரமோஹனா ” இவர் கதை அல்லது நாவல்களில் தேசப்பக்தி . விதவை திருமணம் , மதுவிலக்கு , ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை எல்லாம் மிகவும் அழகாக எடுத்துச்சொல்லப்பட்டிருக்கும் இவர் இயல், இசை ,நாடகம் என்று எல்லா இடத்திலும் முதல் இடம் பெற்றார் தேசத்தொண்டிலும் ஈடுப்பட்டு ஒளிவீசினார்,,இராஜாஜி அவர்கள் மேடையில் பேசும் போது இவரையும் அழைத்து
பேசச்சொல்லுவாராம் .. நாட்டுக்காக ஜெயிலுக்கும் சென்றிருக்கிறார். அங்கிருந்த போது கைதிகளிடம் பேசி “சோதனையின் கொடுமை ”
எழுதினார் துப்பறியும் நாவலையும் இவர் விட்டுவைக்கவில்லை துப்பறியும் நாவலை எழுதிய முதற்பெண்மணி இவர் எனலாம் தெலுங்கு மொழியையும் கற்றுக்கொண்டு பேச ஆரம்பித்தார்
நாட்டுப்பற்று மிக கதரையே உடையாகக் கொண்டாள், விடுதலைப்போரில் பங்குப்பெற்றுச் சிறையும் சென்றாள், இன்னிசைக் க்லைஞர், மேடைப்பேச்சினால் நாட்டின் விடுதலை உணர்வு வீசிய பெண்மணி, பெண்கள் விடுதலைப் பற்றி முழக்கம் செய்து அதன்படி நடத்தியும் காட்டினாள்,
“வைஷ்ணவ ஜனதோ “வுக்கு தமிழ் உருவம் தந்தாள், மாதப்பத்திரிக்கை “நந்தவன்ம் தொடங்கியப் புதுமைப் பெண், “கலா ரத்னம் “என்ற பட்டம் பெற்றவர்.
பெண்கள் வெளியே வருவதே தவறு என்ற காலக்கட்டத்தில் சமூகக் கட்டுப்பாட்டை தவிர்த்து, உடைத்து தான் நன்கு படித்து வெள்யில் வந்து மேடை ஏறிநாடகங்களில் நடித்து இசைக்கச்சேரிகளும் செய்து தமிழ்ப்பெண்மணிகளிலேயே ஒரு சிறந்த இரத்னமாக விளங்கினார்ர் திருமதி வை. மு கோ.
இவரது நாவல் எளிமையுடன் மனதைத் தொடும் . இலக்ண்த்திற்கு முக்கியத்வம் இல்லை , எலலா நாவல்களும் ஆத்மாவைத் தொடும் . சொற்களில் ஒரு ஆழம் இருக்கும் , நிரம்பச் சுவை, இருக்கும் காதல் இருக்கும் ஆன்மீகமும் இருக்கும் நாவலை ஒரு முறை எடுத்துவிட்டால் கீழே வைக்கத் தோன்றாது அவ்வளவு விறுவிருப்பு.
அவருடைய் ஒரே மகன் வை மு ஸ்ரீனிவாசன் திடீரென்று காலமாக அந்தத் துயரம் தாங்காமல் ஜெகன் மோஹினி பத்திரிக்கையை நடத்த இயலாமல் அதை விட்டு வந்தார் ஆனாலும் உள்ளேத் துயரம் அழுத்த உடல் நிலைக் குன்றிப்போனார் , 1960ஆண்டு இந்த பேரொளி அணைந்து விட்டது. இருபது வயதில் கையில் எடுத்த பேனா கடைசிவரையிலும் துணை தந்தது , தேசிய நாயகி ,,இன்னிசை நாயகி , நாடக நாயகி நாவல் நாயகி எழுத்துலக நாயகி
தெய்வ நாயகி ஆகி நம் அனைவர் மனத்திலும் நிறைந்திருக்கிறார் இவர்.
படத்திற்கு நன்றி :