Category: சமயம்

  • எங்கும் உன் ஆடலடி தாயே

    எங்கும் உன் ஆடலடி தாயே

    நவராத்திரியில் அன்னைக்கு இசை ஆராதனை. ‘எங்கும் உன் ஆடலடி தாயே’ என்ற இனிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா! [இலக்குமித் துதி – நவராத்திரி நன்னாள்]

    அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா! [இலக்குமித் துதி – நவராத்திரி நன்னாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    பாருலகில் வாழப் படைத்துவிட்டாய் தாயே
    வாழ்வு வளமாகத் தனம்வேண்டுந் தாயே
    தினம் போற்றுமெம்மை திகப்படையா வண்ணம்
    அனுதினமும் எமக்கு அருள்புரிவாய் தாயே

    பொருளில்லா உலகில் பொழுது விடியாதே
    பொருளின்றி எதுவும் எமையணுக மாட்டா
    அருளோடும் பொருளும் உன்னிடத்தே உண்டு
    அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா

    நோயின்றி வாழ நூல்கள்பல கற்க
    வாய்மையுட னிருக்க வறுமையது போக
    ஆதார மனைத்தும் உன்கருணை அம்மா
    அருள்சுரந்து எம்மை அரவணைப்பாய் அம்மா

    தானதர்மம் செய்ய பெருமாசை தாயே
    தனமட்டும் எமக்குத் தங்குதில்லை தாயே
    ஆனமட்டும் நாமும் உழைக்கின்றோம் அம்மா
    ஆனாலும் தனமோ அணுகவில்லை அம்மா

    நீமனது வைத்தால் நிறைந்துவிடும் அம்மா
    நினைப் பெல்லாம் நீயாயிருக்கிறாய் அம்மா
    வாழ்நாளில் நாமும் வறுமையின்றி வாழ
    வரமருள்வாய் இலக்குமித் தாயேநீ எமக்கு

    Share
  • நீயே கதி ஈஸ்வரி

    நீயே கதி ஈஸ்வரி

    1958ஆம் ஆண்டு வெளியான ‘அன்னையின் ஆணை’ திரைப்படத்தில், மருதகாசி இயற்றிய ‘நீயே கதி ஈஸ்வரி’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்

    ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்

    கொலு என்பது கலைகளின் சங்கமம். இசைக்கும் அதில் முக்கியப் பங்கு உண்டு. இதோ, கொலுவின் முன்னால் குழந்தைகள் பாடுகிறார்கள். ‘ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்’ என்ற புகழ் பெற்ற பாடலை, மூவரசம்பட்டுச் சகோதரிகள் (மாதங்கி & மனஸ்வினி) இனிமையாகப் பாடுவதைக் கேளுங்கள். நவராத்திரி நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் சுரேஷ்

    நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் சுரேஷ்

    பொம்மைக் கலைக்குக் கைநேர்த்தியும் செய்நேர்த்தியும் பொருந்தி வர வேண்டும். இவை ஒருங்கே கைவரப் பெற்றவர், பொம்மைக் கலைஞர் சுரேஷ். காஞ்சிபுரம், பொம்மைக்காரத் தெருவில் உள்ள இவரது வீட்டில் அணிவகுத்து நிற்கும் அழகிய பொம்மைகளைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் ராஜேஷ்

    நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் ராஜேஷ்

    ஒவ்வொரு பொம்மைக்குப் பின்னும் கலைஞர் ஒருவரின் உழைக்கும் கைகளும் படைப்பூக்கமும் கற்பனை வளமும் இருக்கின்றன. காஞ்சிபுரம் பொம்மைக் கலைஞர் ராஜேஷ் கைவண்ணத்தில் உருப்பெற்றுள்ள பொம்மைகளைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பதி மலைமேல் இருப்பவனே

    திருப்பதி மலைமேல் இருப்பவனே

    பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமையில், ‘திருப்பதி மலைமேல் இருப்பவனே’ என்ற பாடலை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் திலகா

    நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் திலகா

    காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெரு, இந்த ஆண்டும் களை கட்டியிருக்கிறது. களிமண் பொம்மைக் கலைஞர் திலகாவின் கைவண்ணத்தில் மின்னும் புத்தம் புதிய பொம்மைகளைக் கண்டு களியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவிந்தம் போடுவோம்

    கோவிந்தம் போடுவோம்

    ‘கோவிந்தம் போடுவோம்’ என்ற புகழ்பெற்ற பாடலை, ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள் இன்னிசையுடன் பாடுகிறார்கள். குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற பஜனை. கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கற்பக விநாயகருக்கு வெள்ளிக் கவசம்

    கற்பக விநாயகருக்கு வெள்ளிக் கவசம்

    சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகருக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து, விநாயகர் சதுர்த்தியை இன்று மக்கள் கொண்டாடினார்கள். இதை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி, தெருவெங்கும் பந்தல் இட்டு, சரவிளக்குகள் அமைத்து, அந்த நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த உற்சாக விழாவிலிருந்து சில காட்சிகள் இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஸ்ரீ கணபதி | கிருஷ்ணகுமார்

    ஸ்ரீ கணபதி | கிருஷ்ணகுமார்

    ‘ஸ்ரீ கணபதி’ என்ற அழகிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வல்லபை நாதனே வருவாய் அருள்வாய்

    வல்லபை நாதனே வருவாய் அருள்வாய்

    சரஸ்வதி ராசேந்திரன்

    குருவே சிவனின் கொழுந்தே ஆனைமுகனே
    குஞ்சரனே  எழிற்  குஞ்சரி    நாதனே
    வருவாய் விரைவாய் வந்தனை ஆள்வாய்
    வல்லபை நாதனே வாழ்த்தி வணங்கினேன்

    அருள்வாய்  உனையே அனுதினம்  பணிவேன்
    அன்னை பராசக்தியின் அரும்  புதல்வனே
    திருமால்   மருகா  தீனரஷனே  கணேசா
    திருவடி பணிந்தேன்  துன்பம்  துடைப்பாய்

    தஞ்சம் அடைந்தேன் தாங்குமருள் தந்திடுவாய்
    கொஞ்சுமருள் கணபதியே  கூட்டுவித்து ஆட்படுத்து
    அஞ்சிடும்  அன்பருக்கு  அபயம்   அளிப்பாய்
    பஞ்சமி  பைரவி  பார்வதி    மைந்தனே

    கறைகளைப்  போக்கி, கடுந்துயர்    நீக்கி
    கரைசேர  வைக்கும்   கணபதி  தாளே
    கருதிடும் நலன்களைக்  கனிவாய் அருள்வாயே
    கருணையில் பொறுத்தருள் கருக்கிடென் பிழைகளை

    பிணிகளைப்  போக்கி, பெரும்பலம்  தேக்கிடு
    பணிந்துணை  எண்ணுவேன் பேணிக்  காத்திடு
    வீணிலே  காலம்  கடத்தாது விரைந்து வந்திடு
    அணிமிகு  செயல்கள்  புரிந்திட  ஆசிகூறு

    சிறுமையைப்   போக்கிச்  சீருளம்   ஆக்கிடு
    வறுமையைப்  போக்கி  வளத்தைத்  தேக்கிடு
    செல்வம்  தருவாய் சிறப்பையும்   தருவாய்
    அல்லல்   நீக்கி  அனுதினம்   துணையாகு

    Share
  • விநாயகா நின்னு | கிருஷ்ணகுமார்

    விநாயகா நின்னு | கிருஷ்ணகுமார்

    ‘விநாயகா நின்னு’ என்ற அழகிய பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். விநாயகர் சதுர்த்தியில் வேழ முகத்தவன் அருளால் வெற்றிகளைக் குவியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கஜ வதனா கருணா சதனா

    கஜ வதனா கருணா சதனா

    ‘கஜ வதனா கருணா சதனா’ என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்தப் பிள்ளையார் சதுர்த்தியில் பெரும்பேறு பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மாடு மேய்க்கும் கண்ணே | செஞ்சுகுமார் குழுவினர்

    மாடு மேய்க்கும் கண்ணே | செஞ்சுகுமார் குழுவினர்

    ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் இயற்றிய ‘மாடு மேய்க்கும் கண்ணே’ என்ற புகழ்பெற்ற பாடலை, தவில் வித்வான் என்.செஞ்சுகுமார் குழுவினர் வாசிக்கக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share