Category: காணொலி

  • விக்ரம் திரை விமர்சனம் | இயக்குநர் செய்த ஒரு தவறு

    விக்ரம் திரை விமர்சனம் | இயக்குநர் செய்த ஒரு தவறு

    கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் வெளியாகியுள்ள விக்ரம் படம் எப்படி? இதில் இயக்குநர் ஒரு முக்கியத் தவறு செய்துள்ளார். அது என்ன? இதோ எனது திரை விமர்சனம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பதியில் ஒரு பஜனை

    திருப்பதியில் ஒரு பஜனை

    கீழ்திருப்பதி அருள்மிகு கோவிந்தராஜர் சந்நிதியில் நடைபெற்ற பஜனை. ‘திருவேங்கடத்தில் விளையாடும் வேங்கடவா’ என்கின்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதைப் பாருங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இப்படி ஒரு மருத்துவமனையா!

    இப்படி ஒரு மருத்துவமனையா!

    சென்னை, பள்ளிக்கரணையில் அமைந்துள்ள பாலாஜி பல் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவுக்கு இன்று சென்று வந்தோம். இப்படி ஒரு மருத்துவமனையா என்று வியந்தோம். நீங்களும் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குமுளம் சீனிவாசப் பெருமாள் கோவில்

    குமுளம் சீனிவாசப் பெருமாள் கோவில்

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குமுளம் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவிலில் சுவாமி புறப்பாடு ஆகும் அருட்காட்சி. அன்பர்களின் தோள்களில் அமர்ந்து, அவர் ஆடும் திருநடனத்தைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஸ்பான்சர் – தமிழில் என்ன?

    ஸ்பான்சர் – தமிழில் என்ன?

    நண்பர் வெங்கி ராமச்சந்திரன், மன்றம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் அண்மை நிகழ்ச்சி ஒன்றின் தொடர்ச்சியாக, லிங்க்டுஇன் (LinkedIn) தளத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். ஸ்பான்சர் (Sponsor) என்ற சொல்லைத் தமிழில் எவ்வாறு வழங்கலாம் என்ற அவரது கேள்விக்கு எனது பதில் இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ராம ஹரே ஹரே! கிருஷ்ண ஹரே ஹரே!

    ராம ஹரே ஹரே! கிருஷ்ண ஹரே ஹரே!

    காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலில், முகுந்த இராமானுஜ தாசன் குழுவினர் நடத்திய பஜனையிலிருந்து ஒரு பாடல். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெண்குயிலின் இன்குரல் – ஓர் அற்புத அனுபவம்

    பெண்குயிலின் இன்குரல் – ஓர் அற்புத அனுபவம்

    நம் வீட்டு உணவை உண்ணும்போது சக குயில்களின் குரலுக்கு மறுமொழி அளிக்கிறது இந்தப் பெண்குயில். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். துல்லியமான, அற்புதமான காட்சி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவையில் பேருந்துப் பயணம்

    கோவையில் பேருந்துப் பயணம்

    அண்மையில் கோவையில் கவுண்டம்பாளையத்திலிருந்து மாதம்பட்டி அருகில் உள்ள தென்கரை என்ற இடத்திற்குச் செல்ல (25 கி.மீ.), ஓலாவில் வாடகை மகிழுந்தை அழைத்தோம். ரூ.392 கட்டணம் காட்டியது. வந்த ஓட்டுநர், ரூ.700 கேட்டார். முடியாது என்றோம். அவரே சரி என்று ரத்து செய்துவிட்டுச் சென்றார். அடுத்தடுத்த ஓட்டுநர்களும் அதிகம் கேட்டார்கள். எனவே, பேருந்தில் செல்ல முடிவெடுத்தோம். ஆனால், கவுண்டம்பாளையத்திலிருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் செல்ல, ஓலாவில் ரூ.88 காட்டியது. வந்த ஓட்டுநர் ரூ.120 கேட்டார். வேறு வழியில்லாமல் கொடுத்தோம்.

    காந்திபுரத்திலிருந்து மாதம்பட்டிக்குப் பேருந்தில் ஏறினோம். ஒருவருக்கு ரூ.15 மட்டுமே கட்டணம், 3 வயது மகனுக்குக் கட்டணம் வாங்கவில்லை. (மொத்தம் 45). மாதம்பட்டியில் இடம் சரியாகத் தெரியாமல், ஒரு நிறுத்தம் முன்னதாக இறங்கினோம். அந்த இடத்திலிருந்து தென்கரை செல்ல (7 – 8 கி.மீ.), ஆட்டோ ஓட்டுநர் ரூ.500 கேட்டார். வேண்டாம் என்று மீண்டும் பேருந்தில் ஏறினோம். இது விரைவுப் பேருந்து போலும். எங்கள் நால்வருக்கும் ஒரு நிறுத்தத்திற்கே தலா ரூ.15 கட்டணம் வசூலித்தார் (மொத்தம் ரூ.60). மாதம்பட்டியிலிருந்து நாங்கள் செல்ல வேண்டிய தென்கரை (5.6 கி.மீ.) என்ற ஊருக்குச் செல்ல, ஆட்டோ கட்டணம் ரூ.150. ஆக, ரூ.375 செலவில் அங்கே சென்று சேர்ந்தோம்.

    இந்தப் பயணமும் நன்றாகவே இருந்தது. கோவையில் எங்கள் பேருந்துப் பயணத்தின் சில காட்சிகள் இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கருவேப்பிலைக் குழம்பு செய்வது எப்படி?

    கருவேப்பிலைக் குழம்பு செய்வது எப்படி?

    கருவேப்பிலை, தங்கம் போன்றது, பல நோய்களைத் தீர்க்கும் மாமருந்து. அற்புதமான சுவையும் மணமும் கொண்டது. தூக்கி எறியக்கூடியது இல்லை. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடக்கூடியது. இதைக் கொண்டு கருவேப்பிலைக் குழம்பு செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புலிப்பாணி சித்தர் ஜீவ சமாதி

    புலிப்பாணி சித்தர் ஜீவ சமாதி

    போகரின் முதன்மைச் சீடர், புலிப்பாணி. பழநி தண்டாயுதபாணி சுவாமி சிலையை நவபாஷாணத்தைக் கொண்டு போகர் உருவாக்கிய போது, உடனிருந்து உதவியவர். புலிப்பாணி, மருத்துவத்திலும் ஜோதிடத்திலும் வல்லவராக விளங்கியவர். ஜோதிட நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளார். இவரது வழியில் புலிப்பாணி ஜோதிடம் எனச் சிலர் கணித்து வருகின்றனர்.

    அண்மையில் பழநிக்குச் சென்றபோது புலிப்பாணி சித்தர் ஜீவசமாதியைத் தரிசித்தோம். நாம் சென்ற நேரத்தில் பூஜையும் நடைபெற்றது எதிர்பாராதது.

    இந்த ஜீவ சமாதியில் தொட்டிச்சி அம்மன் சந்நிதி உள்ளது. இந்தத் தொட்டிச்சி அம்மன் உருவச் சிலை, பழநி தண்டாயுதபாணியைப் போன்றே உருவ அமைப்புடன் புலிப்பாணியால் வடிக்கப்பெற்றது என அங்கே உள்ள பூசகர் தெரிவித்தார். அந்த அரிய காட்சிகளை இங்கே பாருங்கள். படமெடுக்க நமக்கு அனுமதி வழங்கிய ஸ்ரீமத் போகர் பழநி ஆதீனத்திற்கு நன்றி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இது என்ன காய்?

    இது என்ன காய்?

    அண்மையில் காய்கறிக் கடைக்குச் சென்றோம். காய்கறிகளின் பெயர்களைச் சொல்லு என்று எங்கள் மகன் ஹரி நாராயணனுக்குச் சிறிய தேர்வு வைத்தோம். அவன் தேர்ச்சி பெற்றானா என்பதை நீங்கள்தான் பார்த்துச் சொல்ல வேண்டும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கைமேல் வேலை | கணியம் சீனிவாசன் நேர்காணல்

    கைமேல் வேலை | கணியம் சீனிவாசன் நேர்காணல்

    வேலை தேடுகிறீர்களா? முன்னேற விரும்புகிறீர்களா? சாதிக்கத் துடிக்கிறீர்களா? உங்களிடம் இந்தப் படிப்பும் திறனும் இருந்தால் போதும். கைமேல் வேலை. உலகெங்கும் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள், கூவி அழைக்கும் நிறுவனங்கள், கணியம் சீனிவாசன் சொல்வதைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆங்கில எழுத்து வடிவில் வடகம்

    ஆங்கில எழுத்து வடிவில் வடகம்

    நீ உண்ணும் ஒவ்வோர் பருக்கையிலும் உன் பெயர் இருக்கிறது என்பார்கள். இங்கோ நம் பெயர் வடிவிலேயே உணவு தயாராகிறது. ஆங்கில எழுத்து வடிவில் வடகம். இது தமிழுக்கு வருமா?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொசுவலை போடாவிட்டால் என்ன ஆகும்?

    கொசுவலை போடாவிட்டால் என்ன ஆகும்?

    ஜன்னல்களுக்குக் கொசுவலை போடும்போது, கொசுவுக்காக என்றுதான் முதலில் நினைத்தோம். பிறகுதான் குளவி, வண்டு, பல்லி, கரப்பான், சிலந்தி, பூச்சிகள், பூனை போன்ற பலவற்றையும் அவை தடுத்து நிறுத்துவதைக் கண்டோம். இன்று அணில் ஒன்று, நம் சமையலறைக்குள் நுழைய முயல்வதைப் பாருங்கள். கொசுவலை போடாவிட்டால் என்ன ஆகும்?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஐ.டி. துறையில் பெண்கள் முன்னேற | நித்யா துரைசாமி

    ஐ.டி. துறையில் பெண்கள் முன்னேற | நித்யா துரைசாமி

    தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் முன்னேற என்ன செய்ய வேண்டும்? எப்படி தயாராக வேண்டும்? எந்தத் தடைகளைக் கடந்து வர வேண்டும்? எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்? இந்தத் துறையில் 15 ஆண்டுகளாகப் பணியாற்றும் நித்யா துரைசாமி, தமது அனுபவங்களின் வழியாக நமக்கு வழிகாட்டுகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்களுக்குத் தெரிந்த பெண்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share