ஜன்னல்களுக்குக் கொசுவலை போடும்போது, கொசுவுக்காக என்றுதான் முதலில் நினைத்தோம். பிறகுதான் குளவி, வண்டு, பல்லி, கரப்பான், சிலந்தி, பூச்சிகள், பூனை போன்ற பலவற்றையும் அவை தடுத்து நிறுத்துவதைக் கண்டோம். இன்று அணில் ஒன்று, நம் சமையலறைக்குள் நுழைய முயல்வதைப் பாருங்கள். கொசுவலை போடாவிட்டால் என்ன ஆகும்?
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.