நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வாரம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ‘இந்தியாவில் உள்ள உலக மரபுச் சின்னங்கள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள திரு பரமேஸ்வர விண்ணகரம் என்கிற வைகுந்தப் பெருமாள் கோவிலில் இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. உலக மரபுச் சின்னங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காண்பது, ஓர் அரிய வாய்ப்பு. இதோ இந்தக் கண்காட்சியின் உள்ளே ஓர் உலா.
நம் ஜன்னலை ஒட்டியுள்ள வேப்ப மரத்தில், கோவைக் கொடி ஒன்று அண்மையில் தானாகவே வளரத் தொடங்கியது. திரும்பிப் பார்ப்பதற்குள் எல்லாப் பக்கமும் படர்ந்து நிற்கிறது. அதில் கோவைப் பூக்களும் காய்களும் பழங்களும் பெருகியுள்ளன. இந்த மரத்தில் வசித்து வருகின்ற குயில்களுக்கும் இதர பறவைகளுக்கும் இப்போது கொண்டாட்டம்தான். இந்தப் பதிவில் கோவைப் பழம் ஒன்றை ஆண்குயில்களும் பெண்குயிலும் அடுத்தடுத்து பற்றி இழுத்து உண்பதை மிக நெருக்கத்தில் நீங்கள் பார்க்கலாம்.
காஞ்சிபுரத்தில் 2021 நவம்பர் 21 அன்று சுதர்சன் – ஐஷ்வர்யா திருமணம் விமரிசையாக நடைபெற்றது. 2021 நவம்பர் 20 அன்று இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், பழைய சீவரம் ஜி.காளிதாஸ் குழுவினர் வழங்கிய மங்கல இசை இதோ.
‘விண்ணோர் தொழும் திரு அண்ணாமலை’ என்ற பாடலை இசைஞானி இளையராஜா இயற்றி இசையமைத்துள்ளார். “ராஜாவின் ரமண மாலை” என்ற இசைத் தொகுப்பில் இருந்து இதைக் கற்றுக்கொண்டு நாகி நாராயணன் பாடுகிறார். இந்தத் திருக்கார்த்திகைத் திருநாளில், திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்ட இந்த நன்னாளில் இதை வெளியிடுகிறோம். கேட்டு மகிழுங்கள். திருக்கார்த்திகை தின நல்வாழ்த்துகள்.
AXIS ride in Adventure Island Fun Park; This is U.K’s No.1 FREE ADMISSION Fun Park. Situated on Southend-on-Sea’s famous seafront.
Video by Navya
இங்கிலாந்தின் சவுத் எண்டு பகுதியில் அமைந்துள்ள அட்வென்சர் ஐலேண்டு என்ற கேளிக்கைப் பூங்காவில், ஒரு புதுமையான ரங்க ராட்டினம் (AXIS ride). பார்த்து மகிழுங்கள்.
தாம்பரத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை, பதினெண் சித்தர்களின் திருவுருவப் படங்கள் அலங்கரிக்கின்றன. இவர்கள், செயற்கரிய செய்த மாமுனிகள், தமிழரின் பெருமைக்குரிய மாமணிகள். இவர்களைக் கண்டு வணங்கி, கருத்தில் இருத்தி, இவர்தம் தடத்தில் நடப்போம் வாருங்கள்.
மூத்த குடிமக்கள் முதலீடு செய்ய, இவ்வளவு வாய்ப்புகளா? இவ்வளவு திட்டங்களா? இந்த அளவுக்குத் தொடர் வருவாய் கிடைக்குமா? இவ்வளவு பாதுகாப்பானதா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக், விரிவான விவரங்களைத் தருகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்கும் பெரியவர்களுக்கும் பகிருங்கள்.
அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அதிகாலையில் ஒருமணி நேரத்துக்கும் மேலாகக் கனமழை பெய்தது. அதன்பின்னர் பகலில் அவ்வப்போது கனமழை பெய்தது. சில நேரங்களில் வெயில் அடித்தது.
* திற்பரப்பு அருவியில் நேற்று முன் தினத்தை விடக் குறைந்த சீற்றத்துடன் வெள்ளம் பாய்ந்தோடியது. நேற்றைய முன் தினத்தை விடச் சற்று தெளிவாக அருவியில் தண்ணீர் கொட்டியது. அருவியின் மேற்பகுதி தடுப்பணையில் மறுகால் இட்டதால் படகு சவாரி நடக்கவில்லை.
* மாத்தூர் தொட்டிப்பாலத்தின் கீழே ஓடும் பரளியாற்றுத் தண்ணீர், அருவிக்கரை – வேர்க்கிளம்பியை இணைக்கும் சப்பாத்துப் பாலத்தை மூழ்கடித்தபடி நேற்று முன்தினம் முதலே சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை வரை தண்ணீர் வரத்து குறையவில்லை. இதனால் அருவிக்கரை ஊராட்சியில் இருந்து மறு பகுதியிலுள்ள பொன்னன் சிட்டி விளை, முதலார் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை எற்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. இந்த மழை நேரத்திலும் மாத்தூர் தொட்டிப்பாலத்தைப் பார்க்க, பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தொட்டிப்பாலத்தைப் பார்த்து மகிழ்ந்து சென்றனர்.