காணொலி

கலைஞர் பற்றி ஜெயகாந்தன் – சுகதேவ் நேர்காணல்

முரசொலி அறக்கட்டளை வழங்கிய கலைஞர் விருதினை 2007இல் ஜெயகாந்தன் பெற்றார். அப்போது, இந்த விருது தனிச் சிறப்புக்குரியது எனக் குறிப்பிட்டார். விருதினைப் பெற்றதற்காக, ஜெயகாந்தன் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்தத் தருணத்தில், மூத்த பத்திரிகையாளர் சுகதேவ், ஜெயகாந்தனைச் சந்தித்து உரையாடினார். இவர்களின் உரையாடல், அண்ணாகண்ணன் ஆசிரியராக இருந்த தமிழ் சிஃபி இணைய இதழில் 2007 மார்ச் 6ஆம் தேதி வெளியானது. ஜெயகாந்தன் நினைவு நாளான இன்று (ஏப்ரல் 8), ஜெயகாந்தனின் குரலைக் கேளுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

நியூசிலாந்தில் வீட்டுத் தோட்டம்

நம் யூடியூப் அலைவரிசையில் இது வரை ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆப்பிரிக்க கண்டங்களிலிருந்து காட்சிகளை வழங்கினோம். இப்போது, ஓசியானியா கண்டத்திலிருந்து ஒரு பதிவு. சொர்க்கப் பறவை (Bird of Paradise) உள்ளிட்ட அரிய வகைப் பூக்களையும் தாவரங்களையும் வளர்த்து வரும், நியூசிலாந்தில் வாழும் திருமதி துளசி கோபால் அவர்களின் வீட்டுத் தோட்டம் இதோ. கண்டு மகிழுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

ஓர் எளிய தீர்வு – 9

ஒரு காலி டப்பாவைச் செல்பேசிக் கூடாக உருவாக்க முடியும். எப்படி என்று பாருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 | வேதா கோபாலன்

06-04-2021 அன்று குருபகவான் மகர ராசியிலிருந்து அதிசாரமாக கும்ப ராசிக்குப் பெயர்ச்சி அடைந்தார். 15-09-2021 வரை கும்ப ராசியிலேயே சஞ்சரித்து, மீண்டும் மகர ராசிக்குத் திரும்புவார். இந்த அதிசார குருப்பெயர்ச்சி, உங்களுக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை உரிய பரிகாரங்களுடன் ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

பெல்ஜியத்தில் வீட்டுத் தோட்டம்

அழகுணர்வும் ரசனையும் ஒரு புள்ளியில் சேர்ந்தால் எப்படி இருக்கும்? இதோ இப்படித்தான் இருக்கும். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் ராகுல், ஸ்வேதா தம்பதியினரின் வீட்டுத் தோட்டம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

அபிராமி அந்தாதி | கிருஷ்ணகுமார் குரலில்

அமுதத் தமிழில் அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், இதோ உங்களுக்காக. திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைப்பில், கிருஷ்ணகுமாரின் கணீர்க் குரலில் கேட்டு மகிழுங்கள். அபிராமவல்லியின் அருள் பெறுங்கள். கிருஷ்ணகுமாரின் இதர பாடல்களைக் கேட்க: https://www.youtube.com/playlist?list=PLMaFf7VrfFhLwywMNOlu9aNQAk1eXcun5 (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

நான் நடிக்க வந்தது எப்படி? – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 10

‘கட்டில்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார் ஸ்யாம். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் நடிக்க அழைத்தபோது ஸ்யாம் நடிக்காதது ஏன்? இப்போது தாடி வளர்ப்பது ஏன்? கத்திச் சண்டை கற்றுக்கொள்ளுங்கள் என்று இயக்குநர் சொன்னது ஏன்? சட்டென அழுவதற்குச் சக நடிகை பயன்படுத்தும் உத்தி எது? அதிகமாக ரீ டேக் வாங்கிய காட்சி எது? பிடித்த நடிகர்கள் யார் யார்? இதோ மனம் திறக்கிறார், ஸ்யாம். பார்த்து மகிழுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

நித்திலமே நித்திலம்!

நான் இயற்றிய ‘நித்திலமே நித்திலம்’ பாடலை எனது வேண்டுகோளை ஏற்று, கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன் அழகாகப் பாடித் தந்துள்ளார். கேட்டு மகிழுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

ஒரு பொம்மை நாலே ரூபாய்!

பொம்மை வாங்கச் சென்றால், யானை விலை, குதிரை விலை சொல்கிற காலத்தில், நாலே ரூபாய்க்கும் பொம்மை கிடைக்கிறது. இதில் என்னென்ன பொம்மைகள் இருக்கின்றன என்று பாருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

கொரோனா தடுப்பூசியால் பாதிப்பா?

கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகியவை குறித்துப் பல வகையான வதந்திகள் பரவி வருகின்றன. அதைப் போட்டுக்கொண்டவர்களுக்கு பல விதமான பாதிப்புகள் ஏற்பட்டன, பக்க விளைவுகள் ஏற்பட்டன எனச் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். உண்மை என்ன? கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடமே நேரடியாகக் கேட்டோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)  

Read More »

நினைத்தபோது நீ வரவேண்டும் – கிருஷ்ணகுமார் குரலில்

பங்குனி உத்திரச் சிறப்பு வெளியீடு. நினைத்தபோது நீ வரவேண்டும் நீல எழில்மயில் மேலமர் வேலா என்ற பாடல், கிருஷ்ணகுமார் குரலில் இதோ. கேட்டு மகிழுங்கள். முருகன் அருள் பெறுங்கள். என்ன கவி பாடினாலும் – கிருஷ்ணகுமார் குரலில் கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன் (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

இலக்கிய குண்டாயிசமும் கள்ள மெளனமும் – மதுமிதா நேர்காணல் – 2

சந்திப்பு: ஜெயந்தி சங்கர் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மதுமிதாவுடன் ஜெயந்தி சங்கரின் உரையாடல் தொடர்கிறது. மதுமிதா தனது இலக்கியப் பயணம், பல்வகை அனுபவங்கள், சிக்கல்கள், சவால்கள் உள்ளிட்ட பலவற்றையும் இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். இலக்கிய உலகில் இருக்கும் அரசியலையும் கள்ள மெளனத்தையும் உடைத்துச் சொல்கிறார். விறுவிறுப்பான இந்த உரையாடலைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். முந்தைய நேர்காணல்கள்: மதுமிதாவின் பயணங்கள் – ஜெயந்தி சங்கர் நேர்காணல் – 1 சமஸ்கிருதம், செத்த மொழியா? – மதுமிதா நேர்காணல் (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே ...

Read More »

சிங்கராஜா பிறந்தநாள்

இன்று சிங்கராஜாவின் பிறந்தநாள். அவருடைய நண்பர்கள் புள்ளிமான், சேவல், கோழி எல்லோரும் வந்திருக்காங்க. நித்திலா உருவாக்கிய காட்டுக்குள் இந்தக் கொண்டாட்டம் நடக்கிறது. நீங்களும் வந்து ஒரு வாழ்த்துச் சொல்லலாமே. (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

ஜாதகப் பகுப்பாய்வு | கணியன் மாரிமுத்து

ஒரு புதிய முயற்சியாக, ஜாதகப் பகுப்பாய்வை அறிமுகப்படுத்துகிறோம். விவாகரத்து பெற்ற பெண்மணி ஒருவரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு, அதில் உள்ள கோள்களின் நிலை, அவரது மணவாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை ஜோதிடர் கணியன் மாரிமுத்து விளக்குகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

மாவடு ஊறுகாய் செய்யும் முறை

மாவடு ஊறுகாயின் சுவையே தனி. நினைத்தாலே வாயூறும். தயிர் சாதத்துக்கு மட்டுமில்லாமல், எல்லாச் சாதங்களுக்கும் அதைத் தொட்டுக்கொள்ளலாம். அது மட்டும் இருந்துவிட்டால், உணவே களைகட்டும். அமர்க்களமான சுவையும் மணமும் சத்தும் கொண்ட மாவடு ஊறுகாய் செய்யும் முறையை இதோ திருமதி ஜெயந்தி விளக்குகிறார். அவர் கணவர் வெ.சுப்ரமணியன், உடன் உரையாடுகிறார். இதைப் பார்த்து உங்கள் வீட்டிலும் மாவடு ஊறுகாய் செய்து பாருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »