திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
அறுபடை வீடுகளுள் ஒன்றான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சென்று வந்தோம். திரும்பிய புறமெங்கும் திருமண ஜோடிகள், காதுகுத்து, முடி காணிக்கை, புது வாகனத்துக்குப் பூஜை, பக்தர்களே எடுத்து வந்து அளிக்கும் பிரசாதம் என மங்கல நிகழ்வுகள் நடந்தவண்ணம் உள்ளன.
வரிசையில் நிற்கும் பக்தர்களின் தாகம் தீர்க்க, தண்ணீர் கொடுத்தவண்ணம் உள்ளனர். பக்தர்கள் நடக்க எளிதாக, கம்பளம் விரித்து அதில் தண்ணீர் ஊற்றுகின்றனர். பஞ்சாமிர்தப் பிரசாதம் தாராளமாகத் தருகின்றனர்.
விதானத்தை அலங்கரிக்கும் அறுபடை முருகன் ஓவியங்கள் தனி அழகு. கோவிலுக்கு உள்ளே குரங்குகள் இயல்பாக ஓடி, ஆடி விளையாடுகின்றன. அதில் ஒரு குரங்கு, வேங்கடாசலபதியின் தலைமேல் ஏறி அமர்ந்துவிட்டது. இந்த அழகிய திருக்கோவிலுக்குள் ஒரு சிறிய உலா.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)